சுடச் சுடச் செய்திகள்

சிம்புவை கண்கலங்க வைத்த ரசிகை

உடல் மெலிந்து பழைய தோற்­றத்­து­டன் மீண்­டும் களம் இறங்­கி­யுள்ள சிம்­பு­வுக்கு ரசி­கர்­கள் வாழ்த்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ரசிகை ஒரு­வர் எழு­திய கடி­தம் சிம்­பு­வைக் கண்­க­லங்க வைத்த தக­வல் தெரி­ய­வந்­துள்­ளது.

ஒடிசா மாநி­லத்­தைச் சேர்ந்த அந்த ரசிகை தற்­போது தொண்­டை­வலி, தலை­வலி மற்­றும் காய்ச்­ச­லால் தாம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தம்­மால் விரி­வாக பதி­விட முடி­ய­வில்லை என்­றும் சமூக வலைத்­த­ளத்­தில் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் வாழ்க்கை நிலை­யில்­லா­தது என்­றும் அடுத்து என்ன நடக்­கும் என்­ப­தும் கட­வுள் கையில்­தான் உள்­ளது என்­றும் உருக்­கத்­து­டன் குறிப்­பிட்­டுள்ள அந்த ரசிகை, சிம்­பு­வுக்­காக மட்­டுமே ஒரு குறுஞ்­செய்­தி­யைப் பதி­விட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

“நீங்­கள் மீண்­டும் சமூக வலைத்­தளத்­திற்கு வந்­தி­ருப்­பது எங்­க­ளைப் போன்­றோ­ருக்கு மன­நி­றை­வைத் தந்­துள்­ளது. உங்­க­ளு­டைய புதுப்­ப­டத்­தின் சுவ­ரொட்­டி­கள் மெய்­சி­லிர்க்க வைத்­தன. அதைப் பார்த்த எனக்கு பேச்சே வர­வில்லை. என் வாழ்க்­கை­யில் நீங்­கள் மட்­டும்­தான் உத்­வே­கம் அளிக்­கி­றீர்­கள்.

“உங்­க­ளு­டைய வச­னங்­கள், பாடல்­கள், படங்­கள் மூலம் எனக்கு நம்­பிக்கை, அன்பு, உற்­சா­கம் அளிப்­ப­தற்கு நன்றி. நீங்­கள் சிறந்­த­வர்,” என்று அந்த ரசிகை அப்பதி­வில் நெகிழ்ச்­சி­யு­டன் குறிப்பிட்டுள்ளார்.

இந்­தக் கடி­தத்­தைப் பார்த்து சிம்பு கண்­க­லங்கி விட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார் அவ­ரது நெருங்­கிய நண்­ப­ரும் நடி­க­ரு­மான மகத்.

இதற்­கி­டையே சிம்­பு­வுக்கு ஏற்ற வரனைத் தேடி வரு­வ­தாக அவ­ரது பெற்­றோர் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­த­னர். ஆனால் அவரோ மீண்­டும் நடிப்­பில் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தா­கக் கூறி­விட்­டா­ராம்.

தற்­போது நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்ள ‘ஈஸ்­வ­ரன்’, ‘மாநாடு’ உள்­ளிட்ட படங்­களை முடித்த பிறகே திரு­ம­ணம் குறித்து அவர் யோசிப்­பார் எனத் தெரி­கிறது. ஹன்­சிகா நாய­கி­யாக நடிக்­கும் ‘மஹா’ படத்­தி­லும் சிறப்­புத் தோற்­றத்­தில் தோன்­று­கி­றார் சிம்பு. அந்­தப் படத்­துக்­கான படப்­பி­டிப்பு விரை­வில் துவங்க உள்­ளது.

“அடுத்­தாண்டு ‘மாநாடு’ படத்­துக்­காக மலே­சியா செல்ல அப்­ப­டக்குழு திட்­ட­மிட்­டுள்­ளது. அப்­ப­டத்­தில் அர­சி­யல் நெடி அதி­கம் இருக்­கும் என எதிர்­பார்க்­­கப்­ப­டு­கிறது. அதற்­கா­க­வும் சிம்பு தயாரா­கி­றார்,” என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்ளிகள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon