‘பேச்சுலர்’ வாழ்க்கையை விவரிக்கும் ஜி.வி.பிரகாஷ் படம்

எப்­போ­தும் கைவசம் அரை டஜன் படங்­க­ளை­யா­வது வைத்­தி­ருக்­கி­றார் ஜி.வி. பிர­காஷ். வசந்­த­பா­லன் இயக்­கத்­தில் இவர் நடித்­துள்ள ‘ஜெயில்’ திரைப்­ப­டத்­தின் படப்பிடிப்பு முடி­வ­டைந்­துள்­ளது. இப்­ப­டத்­துக்கு இசை­ய­மைப்­ப­தும் இவர்­தான்.

படம் விரை­வில் வெளி­யீடு காணு­மாம். இந்­நி­லை­யில் ‘பேச்­சுலர்’ என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நடித்து வரு­கி­றார் ஜி.வி. இது சதீஷ் செல்­வ­கு­மார் இயக்­கும் படம்.

பொள்­ளாச்­சி­யைச் சேர்ந்த சில இளை­யர்­கள் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்ற பெங்­க­ளூரு செல்­கி­றார்­கள். அங்கு நடக்­கும் விஷ­யங்­க­ளின் தொகுப்­பு­தான் இந்­தப் படம்.

“தமி­ழ­கத்­தில் இருந்து ஓர் அண்­ணன் முத­லில் பெங்­க­ளூரு செல்­வார். பிறகு தனது நண்­பர்­களை அங்கு அழைத்­துக்கொள்­வார். இதை­ய­டுத்து ‘நம் அண்­ணன்­மார்­கள் இருக்­கி­றார்­களே’ என்ற தைரி­யத்­தி­லும் நம்­பிக்­கை­யி­லும் மேலும் சில இளை­யர்­கள் அங்கு செல்­லும்­போது அனை­வ­ரும் இணைந்து ஒரு பெரிய குழு­வாக மாறு­கி­றார்­கள்.

“திரு­ம­ண­மா­காத அந்த இளை­யர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பற்­றிப் பேசும் படைப்­பா­கவே ‘பேச்­சு­லர்’ உரு­வா­கிறது.

“இன்­னும் துல்­லி­ய­மா­கச் சொல்­வ­தென்­றால் இது காதல் படம் இல்லை; ஜி.வி. பிர­காஷ் இதில் நாய­க­னும் அல்ல,” என்று சதீஷ் செல்­வ­கு­மார் சொல்­வ­தைக் கேட்­டால் ஜி.வி.யின் ரசி­கர்­கள் நிச்சயம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வார்­கள்.

தனது படத்­தில் ஜி.வி. பிர­கா­ஷும் ஒரு கதா­பாத்­தி­ர­மாக மட்­டுமே வந்து செல்­வ­தா­கச் சொல்­கி­றார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒரு படத்தை இயக்­கு­வ­தற்கு ஒப்­பந்­த­மாகி இருந்­தா­ராம் சதீஷ். அதற்கு இசை­ய­மைக்க கேட்டு ஜி.வி.யை அணு­கி­யி­ருக்­கி­றார். இவர் சொன்ன கதை ஜி.வி.க்கு மிக­வும் பிடித்­துப்போன­தாம்.

உடன் இருந்த நண்­பர் ஒரு­வர் அந்­தக் கதை­யில் உள்ள ஒரு கதா­பாத்­தி­ரத்­துக்கு ஜிவி பிர­காஷ் பொருத்­த­மாக இருப்­பார் என்று கருத்து தெரி­விக்க, அதை­ய­டுத்து ஜி.வி.யால் அதில் நடிக்க முடி­யுமா என்று சதீஷ் கேட்­டுள்­ளார்.

“ஜி.வி. பிர­காஷ் சார் உட­ன­டி­யாக நடிக்க ஒப்­புக்­கொண்­டார். அவரை எப்­படி வித்­தி­யா­ச­மாக திரை­யில் காட்­டு­வது என்ற சுவா­ர­சி­யத்­து­ட­னேயே வேலை பார்த்­தோம். ஒரு விட­லைப்­பை­யன் முதிர்ச்சி அடைந்த ஆணாக மாறக்­கூ­டிய கால­கட்­டத்­தில் நடக்­கும் விஷ­யங்­கள்­தான் அவர் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­தின் சுவா­ர­சி­ய­மான அம்­சம்.

அவ­ரது ‘பேச்­சு­லர்’ வாழ்க்­கைக்­குள் ஒரு பெண் குறுக்­கி­டு­கி­றாள். அவர்­தான் நாயகி திவ்­ய­பா­ரதி. இரு­வ­ருக்­கும் இடையே நடக்­கும் விஷ­யங்­கள் இளை­யர்­களை வெகு­வா­கக் கவ­ரும்,” என்­கி­றார் சதீஷ் செல்­வ­கு­மார்.

திவ்­ய­பா­ர­திக்கு முன்பு பல பெண்­கள் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்­தார்­க­ளாம். ஆனால் பக்­கத்து வீட்­டுப் பெண்­ணைப் போல் தமி­ழில் பேசி இயல்­பாக நடித்­த­து­டன் தனது தோற்­றத்­தா­லும் திவ்­ய­பா­ரதி கவர்ந்­தி­ழுக்­கவே அவ­ரைத் தேர்வு செய்­துள்­ள­னர். முனீஷ்­காந்த் முக்கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

இதற்­கி­டையே வசந்­த­பா­லன் இயக்­கும் புதிய படத்­துக்­கும் இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்­டுள்­ளார் ஜி.வி. பிர­காஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!