அடுத்த மாதத்தில் திருமணம்

அடுத்த மாதத்தில் திருமணம்

1 mins read
32ee219c-379c-41ca-9eb8-4f6b2300da91
-

'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வுக்கு காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டு களாக இருவரும் ஒன்றாக சுற்றுவதும் காதல் பரிசளித்துக் கொள்வதுமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் மார்ச் மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தயாராகி வருவதாக ஒரு புதிய செய்தி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதுபோல் பலமுறை திருமணச் செய்திகள் வெளிவருவதும் பின்னர் அப்படியே அந்தச் செய்தி அமுங்கிவிடுவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தப் புதிய செய்தி குறித்து வழக்கம்போல் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்காமல் உள்ளனர்.