ஆண்டு இறுதிக்குள் வெளியாகிறது 'அக்னிச் சிறகுகள்'

ஆண்டு இறுதிக்குள் வெளியாகிறது 'அக்னிச் சிறகுகள்'

1 mins read
0557b623-06d9-45c6-9092-db7ea7c2d0c0
-
Google News Preferred Icon

விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகிய இருவரது கூட்டணியில் உருவாகி உள்ளது 'அக்னிச் சிறகுகள்'. 'மூடர் கூடம்' நவீன், இதை இயக்கி உள்ளார். அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே என இரு நாயகிகள் உள்ளனர். பிரகாஷ்ராஜ், ஜே.எஸ்.கே. சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோல்கத்தாவில் நடந்து முடிந்துள்ளது. அதன்பின்னர் முக்கிய காட்சிகளை கஜகஸ்தான் நாட்டில் படமாக்கினர். விஜய் ஆண்டனி சீனு என்ற கதாபாத்திரத்திலும் அருண்விஜய் ரஞ்சித் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். நடிகர் சென்ட்ராயன் 'டாக்ஸி தல' என்ற கதாபாத்திரத்தில் அசத்துவாராம். ஊரடங்கு காரணமாக படப் பணிகள் முடங்கியுள்ள போதிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருவதாகத் தகவல்.