‘பீஸ்ட்’ - விஜய் புது படத் தலைப்பு அறிவிப்பு

விஜய் நடிக்­கும் புதுப் படத்­துக்கு 'பீஸ்ட்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். அவ­ரது பிறந்­த­நாளை ஒட்டி வெளி­யான இந்த அறி­விப்பு ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

மேலும், சூட்­டோடு சூடாக இப்­படத்­தின் சுவ­ரொட்­டி­க­ளை­யும் படக்­கு­ழு­வி­னர் வெளி­யிட்­டுள்­ள­னர்.

நெல்­சன் இயக்­கத்­தில் விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடிக்­கும் படத்தை 'தள­பதி 65' என்று குறிப்­பிட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­துக்கு 'டார்­கெட்' என்று தலைப்பு வைத்­தி­ருப்­ப­தாக அண்­மை­யில் ஒரு தக­வல் வெளி­யா­னது. பின்­னர் அத்­தலைப்பை விஜய் மாற்­றச் சொல்­லி­விட்­டார் என்­றும் கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அவ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்ட பல தலைப்­பு­களில் இருந்து 'பீஸ்ட்' என்ற தலைப்பை அவர் தேர்வு செய்­த­தா­கத் தெரி­கிறது.

நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் தலைப்­பை­யும் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டி­யை­யும் படக்­கு­ழு­வி­னர் வெளி­யிட்­ட­னர்.

இத­னால் உற்­சா­கம் அடைந்த ரசி­கர்­கள் தலைப்பு மிக நன்­றாக இருப்­ப­தாக கருத்து தெரி­வித்­த­து­டன், படச் சுவ­ரொட்­டியை சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்­த­னர்.

இந்­நி­லை­யில், நள்­ளி­ரவு 12 மணி­ய­ள­வில் 'பீஸ்ட்' இரண்­டா­வது சுவ­ரொட்­டி­யும் வெளி­யி­டப்­பட்­டது ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­தது.

இப்­ப­டத்­தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ள­னர். விரை­வில் இப்­ப­டத்­தின் அடுத்தகட்ட படப்­பிடிப்பு தொடங்க இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!