சவாலில் சாதிக்கும் விக்ரம்

சுமார் 12 ஆண்­டு­கள் காவல்­து­றை­யில் வேலை பார்த்­து­விட்டு சினிமா பக்­கம் வந்­துள்­ளார் அறி­முக இயக்­கு­நர் தமிழ். வெற்­றி­மா­ற­னி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். விக்­ரம் பிர­புவை வைத்து 'டாணாக்­கா­ரன்' என்ற படத்தை இயக்­கு­கி­றார்.

காவல்­துறை பயிற்சி குறித்து விவ­ரிக்­கும் பட­மாக உரு­வாகி வரு­கிறது இப்­ப­டம். தமிழ் சினி­மா­வில் இப்­ப­டிப்­பட்ட கதைக்­க­ளத்­து­டன் ஒரு படம் இது­வரை வெளி­யா­க­வில்லை என உறு­தி­யா­கச் சொல்­கி­றார் தமிழ்.

"பொது­வாக காவல்­துறை பயிற்சி என்­பது முத­லில் பய­மு­றுத்­தும். அதில் 15 குழுக்­கள் வரை இருக்­கும். ஒவ்­வொரு குழு­வி­லும் தலா முப்­பது பேர் இருப்­பார்­கள். ஒவ்­வொரு குழு­வி­லும் யார் பதக்­கம் வாங்­கு­கி­றார்­கள் என்­ப­து­தான் போட்டி. பயிற்­சி­யின் முதல் நாளி­லி­ருந்தே இந்­தப் போட்டி தொடங்­கி­வி­டும்," என்­கி­றார் தமிழ்.

இந்­தப் படத்­தின் கதைப்­படி பயிற்சி முகா­மில் இந்­திய அள­வில் புகழ்­பெற்ற பயிற்­சி­யா­ளர் ஒருத்­தர் இருப்­பா­ராம். அவ­ருக்­கும் அங்கே பயிற்­சிக்கு வந்­தி­ருக்­கும் விக்­ரம் பிர­பு­வுக்­கும் மோதல் ஏற்­ப­டு­கிறது.

'என்­னைத் தாண்டி நீ காக்­கிச் சட்டை போட்­டு­விட முடி­யுமா பார்க்­க­லாம்' என்று அவர் சவால் விட, 'நான் சாதித்­துக் காட்­டு­கி­றேன்' என்று அமை­தி­யா­கச் சவாலை ஏற்­பா­ராம் விக்­ரம் பிரபு. அதில் வென்று காக்­கிச் சட்­டையை எப்­படி போடு­கி­றார் என்­ப­து­தான் கதை.

"காவல்­துறை பயிற்­சியை அடிப்­ப­டை­யாக வைத்து தமி­ழில் படங்­கள் வந்­த­தில்லை என நினைக்­கி­றேன். அதி­லும் ஒன்­பது மாதங்­கள் நடக்­கும் இந்­தப் பயிற்­சி­யில் பல சுவா­ர­சி­யங்­கள் புதைந்­துள்­ளன.

"நான் 12 ஆண்­டு­க­ளுக்­கும் மேலே காவல்­து­றை­யில் இருந்­த­வன். என் நண்­பர்­கள் இப்­போ­தும் கூட அத்­து­றை­யின் பல்­வேறு துறை­களில் பணி­யாற்­று­கி­றார்­கள். இப்­போது சந்­திக்க நேர்ந்­தா­லும் பயிற்­சி­யின்­போது நடந்­த­வற்­றைப் பற்­றி­தான் அதி­கம் பேசு­வோம். எங்­க­ளுக்கு பயிற்­சி­தான் கல்­லூ­ரிக்­கா­லம். அது­கு­றித்­துப் பேசும்­போது குழந்­தை­க­ளாக மாறிப்­போ­வோம்.

விக்­ரம் பிரபு எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப அமைந்­தாரா?

"இந்­தப் படத்தை 12 கதா­நா­ய­கர்­க­ளி­டம் சொல்லி இருந்­தேன். நிறைய உழைக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று சிலர் பயந்­த­னர். இந்­தக் கதையை என்­னால் சரி­வர கையாள முடி­யுமா என்று சில­ருக்கு சந்­தே­கம்.

"ஆனால் ஆர்­வ­மாக நடிக்க வந்­தார் விக்­ரம் பிரபு. வேலூர் பகு­தி­யில் வெயில் சுட்­டெ­ரிக்­கும் என்று அனை­வ­ருக்­கும் தெரி­யும். ஆனால் படப்­ப­டிப்­புக்­காக அங்­கேயே தங்கி இருந்­தார். முப்­பது நாள்­கள் இடை­வி­டா­மல் நடந்த படப்­பி­டிப்­பின்­போது மிகுந்த ஈடு­பாடு காட்­டி­னார்.

"இது­போன்ற கதை­களில் பெண் கதா­பாத்­தி­ரங்­களை நுழைப்­பது சிரமம். இருப்­பி­னும் பெண் எழுத்­தர் பாத்­தி­ரத்தை உரு­வாக்கி, அஞ்­சலி என்ற புது­மு­கத்தை அறி­மு­கம் செய்­துள்­ளோம். பயிற்­சி­யா­ளர்­க­ளாக லால், எம்.எஸ்.பாஸ்­கர், போஸ் வெங்­கட் மூவ­ரும் நடித்­துள்­ள­னர். இவர்­க­ளு­டைய முகங்­கள் மட்­டுமே ரசி­கர்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­கும். மற்ற அனை­வ­ருமே புது­மு­கங்­கள்­தான்," என்­கி­றார் தமிழ்.

25 படத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளி­டம் இந்­தக் கதை­யைச் சொன்­ன­போது பலர் ஆர்­வம் காட்­ட­வில்­லை­யாம். சிலர் தயா­ரிப்­புச் செல­வு­கள் அதி­க­மாக இருக்­கும் எனப் பயந்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் தயா­ரிப்­பா­ளர் எஸ்.ஆர்.பிரபு துணிந்து களம் இறங்கி உள்­ளார்.

சரி, விக்­ரம் பிரபு என்ன சொல்­கி­றார்?

"காவல்­துறை பயிற்சி குறித்து இந்­தப் படத்­தில் நடிக்­கும் முன்பு அதி­கம் கேள்­விப்­பட்­ட­தில்லை. ஆனால் மிக­வும் வித்­தி­யா­ச­மான அனு­ப­வ­மாக இருந்­தது. வரிசை­யில் நின்று சோறு வாங்­கிச் சாப்­பி­டு­வது, இரவு பயிற்சி­யா­ளர் விசில் அடித்­த­தும் படுத்து தூங்­கு­வது, அதே விசில் சத்­தம் கேட்டு காலை­யில் எழு­வது என்­ப­தெல்­லாம் மிக சிர­ம­மான விஷ­யங்­கள். ஒரு­வ­ரது குணா­தி­ச­யங்­களை உடைத்துத்­தான் போலி­சாக மாற்­று­வார்­கள். நிறைய விஷ­யங்­கள் மாறும். நம் நடையே மாறி­வி­டும். இதை­யெல்­லாம் உணர்ந்து நடிக்க வேண்­டும் என்று இயக்கு­நர் தமிழ் தொடக்­கத்­தி­லேயே கூறி­விட்­டார். அதைப் புரிந்து கொண்டு நடித்தேன்," என்கிறார் விக்ரம் பி்ரபு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!