திரைத் துளிகள்

'எல்லாரும் குடும்பம்போல் பழகினோம்'

இசையமைப்பாளரும் நடிகருமான 'ஹிப்ஹாப்' ஆதி இயக்கத்தில் உருவாகி உள்ளது 'சிவகுமாரின் சபதம்.'

இதில் மாதுரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். நன்றாகத் தமிழப் பேசத் தெரிந்தவர் என்பதால் அவரைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் ஆதி.

"சத்யஜோதி தியாகராஜன் சார் படத்தைப் பார்த்துவிட்டு, 'மூன்றாம் பிறை' படத்துக்குப் பிறகு தம்மை பாதித்த கதை இதுதான் என்று பாராட்டினார். அந்த அளவுக்கு ஓர் உணர்வுபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளார் ஆதி.

"நான் புதுவையை சேர்ந்த பெண் என்பதால் இயல்பாகவே தமிழில் நன்றாகப் பேசுவேன். படப்பிடிப்பின்போது ஆதி உட்பட அனைவருமே ஒரே குடும்பமாக மாறிவிட்டோம். எல்லாரும் நண்பர்களாகப் பழகினோம். இது கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் படமாகவும் இருக்கும்.

"ஆதியைப் பொறுத்தவரை பல திறமைகளைக் கொண்டவர். படப்பிடிப்பின் தொடக்கத்தில் நிறைய தவறுகள் செய்து திட்டு வாங்கியுள்ளேன். அதன் பிறகு நண்பர்களானோம்," என்கிறார் மாதுரி.

பெற்றோருக்கு சாய் பல்லவி அறிவுரை

மருத்துவப் படிப்பு சவாலானது என்பதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும் என்கிறார் சாய் பல்லவி.

மருத்துவம் என்பது கடல்போன்ற படிப்பு என்றும் தேர்வின்போது எந்தெந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதை எளிதில் கணிக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

"எனவே மாணவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும். மதிப்பெண் குறைந்துவிட்டதற்காக குறைகூறக் கூடாது. ஒரு மாணவர் மருத்துவத் தேர்வை எத்தகைய நிலையில் இருந்து எழுதினார் என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் மாணவர்கள் பக்கம்தான் நிற்பேன்," என்கிறார் சாய் பல்லவி. தானும் ஒரு மருத்துவர் என்ற வகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!