திரைத் துளிகள்

'மாநாடு' படம் அசத்தல் சாதனை

'மாநாடு' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மையில் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை இணையத்தில் வெளியிட்டனர். இதையடுத்து 'யுடியூப்' தளத்தில் சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர்.

சிம்பு இதுவரை நடித்துள்ள எந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கும் இந்த அளவு வரவேற்பு கிடைத்த தில்லை. சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ளது 'மாநாடு'. இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையின் போது இப்படம் திரை காண உள்ளது. இந்நிலையில் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்குக் கிடைத்துள்ள வரவேற்பு தயாரிப்புத் தரப்புக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

தொடர் தாமதம்: ஹன்சிகா வருத்தம்

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதுப் படத்துக்கு 'ரவுடி பேபி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த 'மாரி -2' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் 'ரவுடி பேபி' என்ற இரு வார்த்தைகள் பரவலாக இடம்பெற்றிருக்கும். இப்பாடலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

"எனவே இதை தலைப்பாக வைத்தால் படம் எளிதில் ரசிகர்களைச் சென்றடையும் என நம்புகிறோம். சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். பூசை முடிந்த கையோடு நேற்று முன்தினம் படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் ராஜூ சரவணன். இவர் ஏற்கெனவே 'மஹா' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

துணிச்சலாக பதிலளித்த ராஷி

தமிழ் சினிமாவில் தமக்கு அதிகம் பிடித்தமானவர்கள் என்றால் அது விஜய், நயன்தாரா ஆகிய இருவர் தான் என்கிறார் ராஷி கண்ணா.

இவருக்கு ஐந்து மொழி கள் தெரியுமாம். அதனால் பல மொழிகளில் நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்கிறார்.

அண்மையில் ரசிகர் களுடன் இணையம் வழி நடைபெற்ற கலந்துரையாடலின்போது, காதல் குறித்து கேள்வி எழுப்பிய ஒருவர், உண்மையான பதிலைத் தர வேண்டும் என்றார்.

அதற்குப் பதிலளித்த ராஷி, "இதில் பயப்படவோ, தயங்கவோ ஒன்றும் இல்லை. அதனால் பொய்யான பதில் என்பதற்கு இடமே இல்லை. நான் யாரையாவது காதலித்தால் நிச்சயம் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிப்பேன்," என்றார்.

வாய்ப்புக்காக காத்திருக்கும் ரம்யா

'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் தாம் மனதளவில் வெகுவாகப் பாதிக் கப்பட்டதாகச் சொல்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால்தான் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார். எனினும் நல்ல வாய்ப்புகள் அமையாதது வருத்தம் அளிப்பதாகச் சொல்கிறார் ரம்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!