பிரபலங்களின் பாராட்டு மழையில் ‘டாக்டர்’

சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­தி­ருக்­கும் 'டாக்­டர்' படம் வெளி­யாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரு­கிறது. படத்­தைப் பார்த்த பிர­ப­லங்­கள் கண்­ணில் நீர் வரும் அள­விற்கு சிரித்­தேன் என்று பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

நேற்று முன்­தி­னம் உல­கம் முழு­வ­தும் திரை­ய­ரங்­குகளில் வெளி­யா­கி­யுள்ள 'டாக்­டர்' திரைப்­ப­டம், நயன்­தா­ராவை வைத்து 'கோல­மாவு கோகிலா' வெற்­றிப் படத்­தை இயக்கிய இயக்­கு­நர் நெல்­சன் திலிப் குமார் இயக்­கத்­தில் சிவ­கார்த்­திகே­யன் நடிப்பில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்­தில், தெலுங்குத் திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி, அடுத்­த­டுத்து தமிழ்த் திரைப்­பட வாய்ப்­பு­களை

கைப்­பற்றி வரும் பிரி­யங்கா அருள் மோகன் கதா­நா­ய­கி­யாக நடித்­தி­ருக்­கி­றார்.

மேலும் யோகி­பாபு, வினய், 'பிக்­பாஸ்' அர்ச்­சனா, 'குக் வித் கோமாளி' புகழ் தீபா உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். இந்­தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூ­டி­யோஸ் உடன் இணைந்து, சிவ­கார்த்தி­கே­ய­னின் சொந்த நிறு­வ­ன­மான எஸ்.கே.புரொ­டக்­‌ஷ­னும் தயா­ரித்­துள்­ளது.

படத்­தில் நகைச்­சுவை, சண்டை, பாசம் இப்­படி எதற்­கும் பஞ்­ச­மில்லை என்­ப­தால் ரசி­கர்­கள் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்பைப் பெற்று வரு­கிறது.

படத்­தில் 'ராக் ஸ்டார்' அனி­ருத்­தின் இசை பிர­மா­த­மாக இருக்­கிறது என அனை­வ­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர். இந்­தப் படத்­தில் இருந்து வெளி­யான பாடல்­க­ளுக்கு ஏற்­கெனவே ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் இந்தப் படம்

தமி­ழ­கத்­தில் மட்­டும் ஒரே நாளில் எவ்­வ­ளவு வசூல் செய்­துள்­ளது என்­பது குறித்த தக­வல் வெளி­யாகி பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதா­வது 'டாக்­டர்' திரைப்­ப­டம் வெளி­யான முதல் நாளே தமி­ழ­கம் முழு­வ­தும் ரூ.8 கோடிக்­கும் மேல் வசூல் செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. 50 விழுக்­காட்டு

பார்­வை­யா­ளர்­க­ளு­டன் இவ்­வ­ளவு வசூல் செய்­துள்­ளது சாத­னை­யா­கவே பார்க்­கப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

'டாக்­டர்' திரைப்­ப­டத்­திற்கு கோலி­வுட் நட்­சத்­தி­ரங்­கள் பல­ரும் தங்­க­ளது வாழ்த்­துகளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

பொது­வாக மற்ற திரைப்­ப­டங்­

க­ளுக்கு வாழ்த்­து­கள் சொல்­லாத சூர்­யா­வும் 'டாக்­டர்' படத்­திற்கு தனது வாழ்த்­து­களை தெரி­வித்து இருந்­தார்.

இயக்­கு­நர் ஷங்­கர் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் 'டாக்­டர்' திரைப்­ப­டம் பற்றி பதி­விட்­டுள்­ளார். அதில் "இந்த கொரோனா காலத்­தில் டாக்­டர் திரைப்­ப­டம் சிறந்த சிரிப்பு மருந்­தாக இருக்­கிறது. அனை­வ­ரை­யும் மகிழ்­வித்த இயக்­கு­நர் நெல்­ச­னுக்கு வாழ்த்­து­கள்.

"குடும்­பங்­கள் கொண்­டா­டும் திரைப்­ப­டத்தைக் கொடுத்த

சிவ­கார்த்­தி­கே­யன், அனி­ருத் மற்­றும் படக்­கு­ழு­வி­ன­ருக்கு நன்றி. திரை­

ய­ரங்க அனு­ப­வம் மாறி­யுள்­ளது. மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருக்கிறது," என்று பதி­விட்­டி­ருந்­தார்.

இந்த டுவிட்­டிற்கு பதி­ல­ளித்த சிவ­கார்த்­தி­கே­யன், "முதல் முறை­யாக இயக்­கு­நர் ஷங்­கர் சாரி­டம் இருந்து வந்த வாழ்த்­து­கள் 'டாக்­டர்' திரைப்­ப­டத்தை இன்­னும் மறக்கமுடி­யாத ஒன்­றாக மாற்றி இருக்­கிறது. அதற்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில் சிவ­கார்த்­தி­கே­யனை வைத்து மீண்­டும் ஒரு படம்

நெல்­சன் இயக்க உள்­ள­தா­க­வும் அதனை 'லைக்கா' நிறு­வ­னம்

தயா­ரிக்க இருப்பதாக­வும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

'டாக்­டர்' திரைப்­ப­ட வெளி­யீட்­டில் இருந்த சிக்­கலை கடைசி

நேரத்தில் சிவ­கார்த்­தி­கே­யன் தனது சொந்த பணத்­தின் மூலம் தீர்த்து வைத்­தார். இத­னால் சிவ­கார்த்­தி­கே­யன் மீண்­டும் கட­னாளி ஆகி உள்­ளார் என்று கோலி­வுட் வட்­டா­ரங்­கள் கூறு­கின்­றன.

இந்தப் படத்தை பார்ப்­ப­வர்­கள் அனை­வ­ரும் நல்­ல­வி­த­மாக கருத்து தெரி­வித்து வரு­கி­றார்­கள். இந்­நி­லை­யில் 'டாக்­டர்' படத்­தில் வரும் ஒரு காட்­சிக்கு எதிர்ப்பு கிளம்­பி­யி­ருக்­கிறது.

விளை­யாட்­டில் தோல்வி அடை­யும் நப­ருக்கு பெண்­கள் இர­வில் அணி­யும் உடையை அணி­வித்து, தலை­யில் பூ வைத்து, பெண் போன்று மாற்­று­வார்­கள். தோல்வி அடைந்­த­தால் அப்­படி ஒரு வேஷம். அந்த

காட்­சி­தான் பெண்­கள் அமைப்­பி­னரை கோபம் அடையச் செய்துள்ளது.

"பெண்­கள் என்­றால் அவ்­வ­ளவு கேவ­ல­மாக போச்சா? போட்­டி­யில் தோற்­ற­வரை அசிங்­கப்­ப­டுத்த பெண் வேடம்­தான் போட­வேண்­டுமா? அந்தக் காட்­சியை உட­ன­டி­யாக நீக்க வேண்­டும்," என்று கோரி பெண்­கள் அமைப்­பி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதுதொடர்­பாக நெல்­சன் திலீப்­

கு­மா­ரும் சிவ­கார்த்­தி­கே­ய­னும் என்ன செய்­யப் போகி­றார்கள் என்­பதை பொறுத்­தி­ருந்துதான் பார்க்கவேண்­டும் என்கிறது கோலிவுட்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!