‘சூர்யாவும் ஜோதிகாவும் பாராட்டினர்’

எந்­நே­ர­மும் அழ­கான சிரிப்­பு­டன் வலம் வரு­வ­து­தான் ரம்யா பாண்­டி­ய­னின் தனிச் சிறப்பு. 'ஜோக்­கர்', 'இராமே ஆண்­டா­லும் இரா­வணே ஆண்­டா­லும்' எனத் தர­மான படங்­க­ளைத் தேர்வு செய்து நடித்து வரு­கி­றார்.

சினி­மா­வுக்கு வரும் எண்­ணமே தமக்கு இருந்­த­தில்லை என்­ப­வர், ஒரு குறும்­ப­டத்­தில் நடித்த பிறகே தமக்கு அந்த ஆசை வந்­த­தாகச் சொல்­கி­றார்.

இந்­நி­லை­யில், தனது நடிப்பை சூர்­யா­வும் ஜோதி­கா­வும் பாராட்­டி­யது மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தாக அண்மை பேட்­டி­யில் கூறி­யுள்­ளார் ரம்யா.

'இராமே ஆண்­டா­லும் இரா­வணே ஆண்­டா­லும்' படத்­தைப் பார்த்த நடி­கர் சிவ­குமாரின் மனை­வி­யும் வெகு­வா­கப் பாராட்­டி­னா­ராம்.

"கிரா­மத்து சாமா­னிய மக்­க­ளு­டன் அவர்­களில் ஒரு­வ­ராக வாழ்ந்து காட்டி இருக்­கி­றீர்­கள் என்று அவர் குறிப்­பிட்­டதை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாது," என்­கி­றார் ரம்யா.

"இந்­தப் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு எளி­தில் கிடைக்­க­வில்லை. சூர்­யா­வும் ஜோதி­கா­வும் தயா­ரிக்­கும் படம் என்­பது தொடக்­கத்­தில் எனக்­குத் தெரி­யாது. 'தமிழ் பேசக்­கூ­டிய மண் சார்ந்த பெண் தேவை' என சூர்­யா­வின் '2டி' தயா­ரிப்பு நிறு­வ­னம் அளித்த விளம்­ப­ரத்­தைக் காண நேரிட்­டது. உட­ன­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைத் தொடர்புகொண்­டேன்.

"நடிப்பு, ஒப்­ப­னைத் தேர்­வுக்­குப் பிறகே தேர்வு செய்­த­னர். அதி­லும், நான் நடித்த ஒரு காட்­சி­யின் காணொ­ளிப்­ப­திவை சூர்­யா­வுக்­கும் ஜோதி­கா­வுக்­கும் கைபேசி மூலம் அனுப்பி, அவர்­கள் என்­னைப் பாராட்டி, பச்­சைக்­கொடி காட்­டிய பிறகே நான் நடிப்­பது உறு­தி­யா­னது," என்று சொல்­லும் ரம்­யா­வுக்கு தமிழ்த் திரை­யு­ல­கில் அதி­க­மான நண்­பர்­கள் இல்­லை­யாம்.

ஐஸ்­வர்­யா­ ராஜேஷ் நடிப்பு தமக்கு மிகவும் பிடிக்­கும் என்­ப­வர், தாம் அவ­ரது தீவிர ரசிகை என்­கி­றார்.

"நான் எப்­போது தொடர்புகொண்டா­லும் அவர் நட்­பாக, அன்­பா­கப் பேசு­வார்," என்கிறார் ரம்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!