அதிரடி காட்டும் ‘அண்ணாத்த’

சிவா இயக்­கத்­தில் ரஜி­னி­காந்த், நயன்­தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெக­ப­தி­ பாபு உள்­ளிட்ட ஏகப்­பட்ட நட்­சத்­தி­ரங்­களின் நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் 'அண்­ணாத்த'. இமான் இசை­ய­மைத்­துள்­ளார். இப்­ப­டம் தீபா­வ­ளிக்கு வெளி­வர உள்ள நிலை­யில் படத்­தின் சுவ­ரொட்­டி­யு­டன் படத்­தில் இடம்­பெ­றும் இரண்டு பாடல்­கள் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்று வரு­கிறது.

இந்நிலையில் நேற்று ஆயு­த­பூஜை தினத்­தன்று இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்சி வெளி­யா­கி­யுள்­ளது. 1.44 நிமி­டம் ஓடக்­

கூ­டிய இந்த முன்­னோட்­டக் காட்சி முழு­வ­தி­லும் ரஜினி

மட்­டுமே இருக்­கி­றார்.

முன்னோட்டக் காட்சியில் "கிரா­மத்­தானை குண­மாத்­தான பார்த்­தி­ருப்ப... கோபப்­பட்டு பார்த்­தது இல்­லையே... காட்­டாறு... அவ­னுக்கு கரை­யும் கிடை­யாது, தடை­யும் கிடை­யாது...," என்ற வச­னத்தைப் பேசி­ய­படி சண்­டை­யில் இறங்­கு­கி­றார்.

ஆங்­காங்கே திரு­விழா காட்­சி­கள், சண்டை என இந்த முன்­னோட்­டக் காட்சி பய­ணிக்­கிறது. இறு­தி­யில் 'வா சாமி' என ரஜினி கூற ஒவ்­வொரு வாக­ன­மும் வெடித்துச் சித­று­வது போன்று முடித்­துள்­ள­னர்.

இந்த முன்­னோட்­டக் காட்­சி­யைப் பார்க்­கும்­போது நிச்­ச­யம் கிரா­மத்து மண்­வா­சனை கலந்த அதி­ரடி சண்­டைப் பட­மா­க­வும் குடும்­பப் பட­மா­க­வும் இருக்­கும் என்­பதை மட்­டும் உணர முடி­கிறது. 'விஸ்­வா­சம்' படத்­தின் பல காட்­சி­களை ஆங்­காங்கே நினை­வு ­

ப­டுத்­து­கிறது.

படத்­தில் ஏகப்­பட்ட நட்­சத்­தி­ரங்­கள் இருந்­தும் ரஜி­னி­யைத் தவிர வேறு யாரும் இந்த முன்­னோட்­டக் காட்­சி­யில் காணப்­ப­ட­வில்லை. ஒரு­வேளை ஒரு­வ­ரைக் காட்டி

ஒரு­வரை விட்­டால் பிரச்­சி­னை­யாகி­வி­டும் என்­ப­தால் இது­போல் ஒட்­டு­மொத்­த­மாக யாரை­யும் காட்­ட­வேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்.

'அண்­ணாத்த' படத்­தின் முன்னோட்டக் காட்சியை ரஜினி ரசி­கர்­கள் வர­வேற்­றுள்­ள­னர்.

காட்சி வெளியாகி முப்பது விநாடிகளிலேயே 3.25 லட்­சத்­திற்­கும் அதி­க­மான பார்­வை­களை பெற்­ற­தோடு டுவிட்­ட­ரில் தேசிய அள­வில் பகிரப்பட்டும் வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!