வசூலில் விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்

சிவ­கார்த்­தி­கே­ய­னின் ‘டாக்­டர்’ படம்

உல­கம் முழு­வ­தும் அண்­மை­யில்

வெளி­யா­னதைத் தொடர்ந்து திரை­

ய­ரங்கு நிறைந்த காட்­சி­க­ளாக ஓடிக்­கொண்­டி­ருக்­கிறது. அமெ­ரிக்­கா­வில் வெளி­யான ‘டாக்­டர்’ விஜய்­யின்

‘மாஸ்­டர்’ படத்­தின் வசூ­லைத் தாண்டி, வசூல் வேட்டை நடத்தி வரு­வ­தால் ‘டாக்­டர்’ படக்­குழு மகிழ்ச்­சி­யில்

இருக்­கிறது.

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் நடித்­துள்ள படம்

‘டாக்­டர்’. இந்­தப் படம் கடந்த 9ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது. இந்­தப்

படத்­தில் வினய், பிரி­யங்கா, யோகி பாபு

உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

உடல் உறுப்பு கடத்­தலை நகைச்­

சு­வைக் கலந்த சண்­டைப் பட­மாக கொடுத்­துள்­ளார் இயக்­கு­நர்

நெல்­சன் திலீப்­கு­மார்.

படத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் அதி­க­மா­கப் பேச­வில்லை

என்­றா­லும் நடிப்­பி­னால் ரசி­கர்­

க­ளைக் கவர்ந்­தி­ருக்­கி­றார்.

“இந்­தப் படத்­தில் வித்­தி­யாச­மான சிவ­கார்த்­தி­கே­ய­னைப் பார்த்தோம்,” என்று பல­ரும் கொண்­டாடி வரு­கி­றார்­கள்.

இந்­தப் படம் வசூ­லி­லும்

பல்­வேறு சாத­னை­க­ளைப் படைத்து வரு­கிறது. அதன்­படி படம் வெளியான முதல் மூன்று நாட்­களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூ­லித்­த­தாக தக­வல் வெளி­யா­னது.

இத­னைத் தொடர்ந்து முதல் வாரத்­தில் மட்­டும் ‘டாக்­டர்’ திரைப்­ப­டம் தமி­ழ­கத்­தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழ­கம் மட்­டு­மின்றி

அமெ­ரிக்­கா­வி­லும் ‘டாக்­டர்’ படம் வசூ­லில் பட்­டையைக் கிளப்பி சாதனை படைத்து வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் விஜய்­யின் ‘மாஸ்­டர்’ படம் 439 ஆயி­ரம் டாலர்­களை வசூ­லித்து சாதனை படைத்­தி­ருந்­தது. அதுவே

அமெ­ரிக்­கா­வில் தமிழ்ப் படம் வசூ­லித்த ஆக அதி­க­மான தொகை­யாக இருந்து

வந்­தது. ஆனால், சிவ­கார்த்­தி­கே­ய­னின் ‘டாக்­டர்’ படம் தற்­பொ­ழுது 440 ஆயி­ரம் டாலர்­களை வசூல் செய்து விஜய்­யின் சாத­னையை முறி­யடித்து இருக்­கிறது.

அடுத்­த­தாக தீபா­வ­ளிக்கு ரஜி­னி­காந்­தின் ‘அண்­ணாத்த’ படம் வெளி­யாக உள்­ள­தால் ‘டாக்­டர்’ படத்­தின் சாத­னையை ‘அண்­ணாத்த’ படம் முறி­ய­டிக்­குமா என்ற கேள்வி

எழுந்­துள்­ளது.

தமி­ழ­கம் முழு­வ­தும் திரை­ய­ரங்­கு­களில் வார நாட்­

க­ளி­லும் மக்­கள் கூட்­டம் குறை­யாத இந்­தப் படத்­திற்கு விமர்­ச­கர்­கள் மத்­தி­யிலும் நேர்­ம­றை­யான கருத்­துகளே வந்த வண்­ணம் உள்­ளது.

மேலும் தசரா விடு­முறை, வார இறுதி விடுமுறை,

மற்­றும் போட்­டிக்குப் பெரிய படங்­கள் எது­வும் இல்­லா­த­காரணங்களால் ‘டாக்­டர்’ படம் வசூலைக் குவித்து

வரு­கிறது.

தொடர்ந்து 3வது வார­மாக ‘டாக்­டர்’ படத்­திற்கு மக்­கள் கூட்­டம் அலை­மோதி வரு­வ­தால், தொற்­று­நோ­யால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இது ஒரு பெரிய நிவா­ர­ணம் அளிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது.

கொரோனா தொற்று பாதிப்­பி­னால் திரை­ய­ரங்­கு­களில் 50 விழுக்­காடு இருக்கை மட்­டுமே

அனு­ம­திக்­கப்­பட்­ட­தால், சற்று தோய்­வ­டைந்த திரைத்­து­றையை

சிவ­கார்த்­தி­கே­ய­னின் ‘டாக்­டர்’ படம் தூக்கி நிறுத்தி­ உள்­ளது.

இத­னால் பல தயா­ரிப்­பா­ளர்­கள் தைரி­ய­மாக தங்­கள் படங்­களைத் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யிட ஆவ­லு­டன் இருப்­ப­தாக தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கம் மட்­டு­மல்­லாது ‘வருண் டாக்­டர்’ என்ற பெய­ரில் தெலுங்­கி­லும் மறு­ப­திப்பு செய்து வெளி­

யி­டப்­பட்­டது.

தசரா விடு­மு­றை­யில் வெளி­யான சில தெலுங்கு நேரடி படங்­

க­ளுக்கு மத்­தி­யில் டோலிவுட்டிலும் இந்தப் படம் வசூலைக் குவித்து வரு­கிறது.

இயக்­கு­நர் சுந்­தர்.சி.யின்

‘அரண்­மனை 3’ படம் கடந்த

வியா­ழக்­கி­ழமை வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. இருந்­தா­லும் ‘டாக்­டர்’ படத்தை மிஞ்­சும் அள­வுக்கு ‘அரண்­மனை 3’ படம் மக்­கள் கூட்­டத்தை ஈர்க்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

கொரோனாவால் பலமுறை தள்ளிப்போய் பெரும் எதிர்பார்ப்புக்குப் பின்னர் வெளியாகிய ‘டாக்டர்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!