வலைத்தளங்களை வளைத்துப் போட்டது சிம்புவின் ‘மாநாடு’

பல போராட்­டங்­க­ளுக்கு இடையே வெளி­யா­னது சிம்பு நடித்­தி­ருக்­கும் 'மாநாடு' படம். இறுதிநேரத்­தில்­கூட படம் வெளி­யா­குமா என்ற சந்­தே­கத்­து­டன் இருந்­த­னர் சிம்­பு­வின் ரசி­கர்­கள். அவர்­களை மகிழ்­விக்­கும் விதத்­தில் அர­சி­யல் கலந்த

'திரில்­லர்' பட­மாக வெளி­யா­னது 'மாநாடு'. படத்­தைப் பார்த்த ரசி­கர்­கள் வலைத்­

த­ளங்கள் முழு­வ­தும் 'மாநாடு' பற்­றிய செய்­தி­க­ளைப் பகிர்ந்­துள்­ள­னர்.

இயக்­கு­நர் வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைத்­துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயா­ரித்­துள்­ளார். கல்­யாணி பிரி­ய­தர்­ஷன் நாய­கி­யா­க­வும் எஸ்.ஜே.சூர்யா வில்­ல­னா­க­வும் இந்தப் படத்­தில் நடித்­துள்­ள­னர்.

2019லேயே இந்­தப் படத்­தின் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு, சிம்பு ரசிகர்களின்

ஆர்­வத்­தைத் தூண்­டி­யது. ஆனால், மற்ற படங்­க­ளைப்போல் கொரோனா, ஊர­டங்கு உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளால் படத்­தின் வேலை­கள் தள்ளிப்போனது.

ஒரு வழி­யாக போராடி இந்த ஆண்டு துவக்­கத்­தில் படப்­பி­டிப்பை முடித்­த­னர். படப்பிடிப்பு முடிந்தும் பல்­வேறு கார­ணங்­

க­ளால் படம் தள்­ளிப்போய்க்­கொண்டே இருந்­தது. அதேசம­யம், எவ்­வ­ளவு

தாம­தமானா­லும் 'மாநாடு' படத்தைத் திரை­ய­ரங்­கில்­தான் வெளி­யி­டு­வோம் என படக்­குழு உறு­தி­யாக இருந்­தது.

பிரச்­சி­னை­கள் தீர்ந்து, 'மாநாடு' படம் வெளி­யா­வது உறுதி என தக­வல் வெளி­யா­னது முதலே வலைத்­த­ளங்­களில் எங்கு பார்த்தாலும் 'மாநாடு' சுவ­ரொட்டி, காணொளி, கருத்து என சிம்பு ரசி­கர்­கள் தெறிக்கவிட்டு வரு­கி­றார்­கள்.

நவம்­பர் 25, பிறகு 27 என்று அறி­விப்பு வெளி­யா­னது. டிக்­கெட் பதிவு ஒரு பக்­கம் நடந்து வந்­தா­லும் வெளி­யீட்டுத் தேதி

தெரி­யா­மல் ரசி­கர்­கள் குழம்­பி­னர்.

இறு­தி­யாக 26ஆம் தேதி காலை 7 மணிக்கு 'மாநாடு' திரையரங்குகளில் திரை­யி­டப்பட்டு அனைத்து தரப்­பி­ன­ரி­ட­மும் நல்ல விமர்­ச­னங்­களைப் பெற்­றுள்­ளது.

படத்தின் இரண்­டா­ம் பாதி அனை­வ­ரை­யும் இருக்­கை­யின் நுனி­யில் அமர வைக்­கிறது என்று பலர் பாராட்டியிருக்கின்றனர். இதற்­

கி­டையே ஆரம்பக் காட்­சி­யின் காணொ­ளியை இணை­யத்­தில் வெளி­யிட்டு பர­ப­ரப்பை

கிளப்­பி­னார் பிரேம்ஜி அம­ரன்.

"படத்­தின் துவக்­கத்­தில் வரும் காட்­சி­கள் பெரி­தும் அழுத்­த­மில்­லா­ம­லேயே நக­ரு­கின்­றன. ஆனால் கதைக்­குள் செல்­லச் செல்ல படம் விறு­வி­றுப்­பா­கிறது. 'டைம் லூப்'

என்­ப­தால் சில காட்­சி­க­ளைத் திரும்பத் திரும்ப பார்க்க வேண்­டி­யி­ருக்­கிறது.

"முதல் முறை ஒரு காட்சி வரும்­போது அதில் காட்­சிக்கு சம்­பந்­த­மில்­லா­மல் சில

விஷ­யங்­கள் நடக்­கின்­றன. ஆனால் திரும்ப

அந்­தக் காட்சி காட்­டப்­ப­டும்­போ­து­தான்

முத­லில் சம்­பந்­த­மில்­லா­த­தாக நாம் நினைத்­தது படத்­திற்கு எவ்­வ­ளவு முக்­கி­யம் என்று உணர முடி­கிறது. வெங்­கட் பிர­பு­வின் புத்­தி­சா­லித்­த­ன­மான எழுத்து நிறைய இடங்­களில் படத்தைச் சுவா­ர­சி­ய­மாக்­கி­யுள்­ளது," என்றார் சிம்பு ரசிகர்.

இந்­தப் படத்­தில் அப்­துல் காலிக் மற்­றும் தனுஷ்­கோடி என்ற இரண்டு கதாபாத்­தி­ரங்­

க­ளைச் சுற்­றி­த்தான் கதை நக­ரு­கிறது.

அப்­துல் காலிக்­காக சிம்­பு­வும் தனுஷ்­கோ­டி­யாக எஸ்.ஜே. சூர்­யா­வும் நடித்­துள்­ளார்­கள். இரு­வ­ரும் போட்­டி­போட்டு நடித்­துள்­ளார்­கள்.

தான் ஒரு கைதேர்ந்த நடி­கர் என்­பதை சிம்பு மீண்­டும் நிரூ­பித்­தி­ருக்­கி­றார். குறிப்­பாக உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களில் அவ­ரது நடிப்பு தத்­ரூ­ப­மாக இருந்­தது. விரல் வித்­தையை ஓரம் வைத்­து­விட்டு கதைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து நடித்­த­தற்கு அவ­ரைப் பாராட்டி உள்ளார்கள்.

தனுஷ்­கோடி என்ற எதிர்­மறை வேடத்­தில் எஸ்.ஜே.சூர்யா. இதற்­கா­கவே இவ்­வ­ளவு நாள் காத்­தி­ருந்­தேன் என்­பதுபோல ருத்ர தாண்­ட­வம் ஆடி­யி­ருக்­கி­றார். நக்­கல் கலந்த பாணி­யில் அவர் செய்­யும் வில்­லத்­த­னம் படத்தை சுவா­ர­சி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது என்கின்றனர்.

'மாநாடு' படத்­திற்கு கிடைத்­துள்ள

வர­வேற்பு, திரை­யு­ல­கையே மிரள வைத்திருக்கிறது என்கிறது கோலிவுட்.

மாநாடு படத்தில் நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷனுடன் சிம்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!