உறவுகளுக்கு ஏங்கும் கார்த்தி

முத்­தையா இயக்­கத்­தில் கார்த்தி நடிக்­கும் 'விரு­மன்' திரைப்படம் திட்­ட­மிட்­ட­ப­டியே உரு­வாகி வரு­கிறது. இந்தக் கூட்­டணி ஏற்­கெ­னவே 'கொம்­பன்' படத்தைத் தந்­துள்­ளது.

இந்த முறை­யும் மாறு­பட்ட கதைக்­க­ளத்­தில், நல்ல கருத்­து­களை உள்­ள­டக்­கிய படத்தை தரப்­போ­கிறார்­களாம். இயக்­கு­நர் சங்­க­ரின் மகள் அதிதிதான் நாயகி.

"நம் தமிழ் மண்­ணின் மக்­கள் முன்பு முன்­னாடி எப்­படி இருந்­த­னரோ, இன்­றைக்­கும் அப்­ப­டித்­தான் இருக்கவேண்­டும் என்று சொல்­ப­வன்­தான் 'விரு­மன்'. உற­வு­கள் புடை­சூழ ஒற்­று­மை­யோடு இருக்க வேண்டும், அவர்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சினை என்­றால் முன்­வந்து நிற்க வேண்­டும் என்­ப­தில் தெளி­வாக இருப்­ப­வன்," என்று தன் பட நாய­க­னின் குணா­தி­ச­யத்தை விவ­ரிக்­கி­றார் முத்தையா.

'கொம்­பன்' படத்­தில் கோப­மும் முரட்­டுத்தனமும் நிறைந்த பாசக்­கா­ர­ராக நடித்த கார்த்தி, இந்தப் புதிய படத்­தில் அன்பை அதி­கம் முன்­னெடுப்­பா­ராம். படத்­தின் இறு­திக்­காட்­சி­யில் மிக நீள­மான வச­னத்­தைப் பேசி, கண்­ணீர் சிந்தி, அவர் நடித்­த­தைக் கண்டு படப்­பிடிப்­பில் இருந்த அத்­தனை பேரும் கண்­க­லங்கி ­விட்­ட­ன­ராம்.

"எனக்கு கார்த்­தி­யி­டம் பிடித்­தது அவ­ரது முகம்­தான். அவரை சாது­வா­க­வும் காட்­ட­லாம் அதி­ர­டிக்­கா­ர­ரா­க­வும் மாற்­ற­லாம். வழக்­கம்­போல் இந்­தப் படத்­தி­லும் அவர் நடிப்­பில் அசத்தி உள்­ளார். அவரது மதிப்பு புதிய உய­ரத்தை எட்­டிப் பிடிக்­கும். நான் எழு­தி­ய­தை­விட, சொன்னதை­விட, எதிர்­பார்த்­த­தை­விட கார்த்தி பங்­க­ளித்­துள்­ளார்.

"விஞ்­ஞா­னம் வளர்ந்து கைபே­சி­கள் வந்­த­தும், அவை நம்மை வேறு இடத்­திற்­குக் கொண்டு போயி­ருக்­க­லாம். ஆனால் உற­வு­களை மீறி வேறு எது­வும் இங்கே இல்லை.

"விரு­மன்' படம் பார்க்­கும்­போது நம் உற­வு­கள், சித்­தப்பா, பெரி­யப்பா, அங்­காளி, பங்­காளி தலைக்­கட்­டு­கள் அத்­த­னை­பேர் நினை­வும் மன­தில் வந்­து­போ­கும்," என்­கி­றார் முத்­தையா.

'விரு­மன்' படத்­தின் கதை என்ன?

'விரு­ம­னு'க்கு உற­வு­கள் புடை­சூழ ஒற்­று­மை­யோடு வாழ ஆசை. வாழ்க்­கை­யில் எல்­லோ­ரும் தவ­று­கள் செய்­வோம். ஆனால் அந்­தத் தவ­று­களை யாரா­வது தட்­டிக் கேட்க வேண்­டும்.

"நம் பெற்­றோர், உடன் பிறந்­த­வர்­கள், உற­வி­னர்­கள் என யாரா­வது ஒரு­வர் தவ­றைச் சுட்­டிக்­காட்ட வேண்­டும். 'இது நல்­லது கிடை­யாது, சரி­யான வாழ்க்கை முறைக்­குள் வராது' என்று நமக்கு அறி­வு­றுத்­தத்­தான் அவர்­கள் இருக்­கி­றார்­கள். இதைச் செய்­தால்­தான் அது நேர்­மை­யான உறவு. அந்த நேர்­மை­யைப் பேச வரு­ப­வன்­தான் 'விரு­மன்'.

"மேலும் மேலும் தவறு செய்­யும்­போது வாழ்க்கை கேள்விக்­குறி ஆவ­தைத் தட்­டிக் கேட்­ப­வ­னாக 'விரு­மன்' இருப்­பான்.

"இதில் கார்த்­தி­தான் விரு­மன் என்று புரிந்­தி­ருக்­கும். அது குல­சாமி பெயர். விரு­மன் என்­றால் தேனி மாவட்­டத்­தில் பிரம்­மன் என்­பார்­கள். உசி­லம்­பட்டி பகு­தி­யில் முணு­சாமி என்று கும்­பி­டு­வார்கள். இது­தான் கதைக்களம்."

'விரு­மன்' படத்­தில் பிர­காஷ்­ராஜ், ராஜ்­கி­ரண் இரு­வரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். அவர்­க­ளு­டன் கார்த்­தி­யும் இணைந்து வரும் காட்­சி­கள் ரசி­கர்­களை அசர வைக்­கு­மாம்.

கதா­நா­யகி அதி­தி­யின் நடிப்பு எப்­படி?

"அவர் எனக்­கும் மகள் மாதி­ரி­தான். எனது தொழில் சார்ந்த மூத்த, முன்­னணி இயக்­கு­ந­ரின் மகளை என் மக­ளா­கவே பார்க்­கி­றேன்.

"சங்­கர் சார் நம் குழுவை நம்பி மகளை அனுப்பி வைத்­துள்­ளார். அதை நினை­வில் வைத்­துக் கொண்டு அதி­தி­யி­டம் உள்ள முழுத் திற­மை­யையும் வெளிக்­கொண்டு வரும் பொறுப்பு எனக்கு உள்­ளது. இதைத்­தான் சூர்­யா­வும் என்­னி­டம் கூறி­னார்.

"கதைப்­படி அதி­தி­யின் பெயர் தேன்­மொழி. பொது­வாக எனது படங்­களில் பெண் கதா­பாத்­தி­ரங்­களுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுக்க விரும்­பு­வேன். எனது இந்த எண்­ணத்­தைப் புரிந்­து­கொண்டு அதிதி நடித்­துள்­ளார். தேனி வட்­டா­ரத்­தைச் சேர்ந்த பெண்­ணாக திரை­யில் தோன்­று­வார்.

"கேமரா குறித்த பயம் அவ­ரி­டம் அறவே இல்லை. எந்­த­வி­த­மான தடு­மாற்­ற­மும் இன்றி, நாம் சொல்­வதை அப்­ப­டியே உள்­வாங்கி, தமது நடிப்­பில் கச்­சி­த­மாக வெளிப்­ப­டுத்­து­கி­றார்," என்­கி­றார் முத்­தையா.

'விருமன்' படத்துக்கு யுவன் சங்கர்தான் இசையமைக்கிறார். இன்றைய இளையர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல்களை உருவாக்கி உள்ளார் என்றும் வார்த்தைகளின் மீது ஏறி நிற்காமலேயே, துள்ளல் இசையைத் தரும் திறமைசாலி அவர் என்றும் முத்தையாவின் பாராட்டுச் சான்றிதழ் தெரிவிக்கிறது.

திரைப்பட உருவாக்கம் என்பது பலர் சேர்ந்து ஆடும் விளையாட்டு. அதில் இயக்குநர், நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அதில் பங்குண்டு. எல்லாம் சரியாக அமைந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது," என்கிறார் இயக்குநர் முத்தையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!