பாதையை மாற்றிய நாயகன்

காதல், நகைச்­சுவை படங்­களில் கவ­னம் செலுத்தி வந்த அசோக் செல்­வன் இப்­போது தன் பாதையை மாற்றி உள்­ளார். 'வேழம்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் புதுப் படத்­தில் இவர் அதிரடி நாய­க­னாக நடிக்­கி­றார்.

சந்­தீப் ஷ்யாம் இயக்­கத்­தில் உரு­வா­கும் இந்­தப் படத்தில் ஐஸ்­வர்யா மேனன், ஜனனி என இரு கதா­நா­ய­கி­கள் நடிக்­கின்­ற­னர். படத்­தின் முதல்­தோற்­றச் சுவ­ரொட்டி ரசிகர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

'ஹாஸ்­டல்' படத்தை அடுத்து கார்த்­திக் இயக்­கத்தில் 'நித்­தம் ஒரு வானம்' உட்­பட பெய­ரி­டப்­ப­டாத மூன்று தமிழ்ப் படங்­களில் நடித்து வரு­கி­றார் அசோக்.

இந்­நி­லை­யில் அண்­மைய பேட்டி ஒன்­றில், இந்­தாண்டு தமது நடிப்­பில் இரண்டு படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யாகி இருப்­பது உற்­சா­கம் அளிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"'மன்­மத லீலை', 'ஹாஸ்­டல்' ஆகிய இரு படங்­க­ளுமே வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றுள்­ளன. எனது படங்­கள் திரை­அரங்­கு­களில் வெளி­யா­வது கூடு­தல் மகிழ்ச்­சியை அளித்­துள்­ளது. கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பெரும்­பா­லான திரை­அரங்­கு­களில் புதுப்­ப­டங்­கள் வெளி­யா­க­வில்லை என்­பதை மனத்திற்கொள்ள வேண்­டும்.

"திரை­யு­ல­கம் மீண்­டும் முழு­வீச்­சில் செயல்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது. இந்த நேரத்­தில் ஏரா­ள­மான படங்­கள் திரை­ அரங்­கு­களில் வெளி­யீடு காண காத்­தி­ருக்­கின்­றன. இந்­நி­லை­யில் பெரிய திரை­யில் எனது படங்­கள் வெளி­யா­வதை பெரிய விஷ­ய­மா­கக் கரு­து­கிறேன்," என்­கி­றார் அசோக் செல்­வன்.

அதிக கதா­பாத்­தி­ரங்­கள் உள்ள கதை­களில் நடிக்க தாம் தயங்குவது இல்லை என்று குறிப்­பி­டுபவர், ஒரு படத்­தில் இரண்டு நாய­கர்­கள் நடிப்­ப­தால் அதன் வணிக மதிப்பு அதி­க­ரிக்­கும் என்­கி­றார்.

"ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனிச் சந்தை மதிப்பு உள்­ளது. பலர் இணைந்து நடிக்­கும்­போது அந்­தப் படைப்­பின் மதிப்­பும் அதி­க­ரிக்­கும். ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­கள் அதிகரிக்­கும்­போது, அவற்றை ஈடு­கட்­டும் வகை­யில் ஒரு படம் உரு­வா­கும் பட்­சத்­தில் நிச்சயம் வெற்றி­பெ­றும்.

"நீண்ட நாள்­க­ளாக முழு நீள நகைச்­சு­வைப் படத்­தில் நடிக்க வேண்­டும் என்று காத்­தி­ருந்­தேன். அந்­தச் சம­யம் பார்த்து 'ஹாஸ்­டல்' பட வாய்ப்பு தேடி­வந்­தது. அது மலை­யா­ளத்­தில் வெற்­றி­பெற்ற படத்­தின் மறு­பதிப்பு. எனி­னும் அந்­தப் படம் வெளி­யாகி ஏழு ஆண்­டு­களுக்குப் பிறகு மறு­ப­திப்பு உரு­வா­னது.

"இது­வரை நான் மறு­ப­திப்பு படங்­களில் நடித்­த­தில்லை. என் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப கதை­யும் கதா­பாத்­தி­ர­மும் அமைந்­த­தால் நடித்­தேன். எனி­னும் மீண்­டும் ஒரு மறு­பதிப்­பில் நான் நடிக்க சில ஆண்­டு­க­ளா­கும்," என்­கி­றார் அசோக் செல்­வன்.

தாம் இயக்­கு­நர் வெங்­கட் பிர­பு­வின் தீவிர ரசி­கர் என்று குறிப்­பி­டு­ப­வர், 'சென்னை-28' படத்தை மிக­வும் ரசித்­த­தா­கச் சொல்­கி­றார்.

"வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் நடிக்க வாய்ப்பு கிடைக்­குமா என்று யோசித்த வேளை­யில், அவரே திடீ­ரென தொடர்புகொண்டு பேசி­யது இன்ப அதிர்ச்சி. உடனே ஒப்­புக்­கொண்­டேன். தமிழ் சினி­மா­வின் முன்­னணி இயக்­கு­ந­ரு­டைய படத்­தில் நடித்­தது, கனவு நன­வா­ன­து­போல உள்­ளது.

"அவ­ரது இயக்­கத்­தில் உரு­வான 'மன்­மத லீலை' படத்­தில் நடித்த பிறகு எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்­வ­ர­மாட்­டார்­கள் என்று நானே என் நண்­பர்­க­ளி­டம் நகைச்­சு­வை­யாகச் சொல்­வேன்.

"அந்­தப் படத்­தின் முன்­னோட்­டக்­காட்­சித் தொகுப்பை பார்த்­து­விட்டு என் நண்­பர்­கள்கூட கிண்­டல் செய்­த­னர். அது வயது வந்­த­வர்­க­ளுக்­கான படம் என்­றும் அப்­ப­டிப்­பட்ட படங்­களில் நடிக்­க­லாமா என்­றும் கேள்வி கேட்­டனர்.

"ஆனால் நான் எனது முடி­வில் உறு­தி­யாக இருந்­தேன். அதற்­கு­ரிய பல­னும் கிடைத்­தது. வெங்­கட் பிரபு போன்ற இயக்குநரை நம்பி தைரி­ய­மாக நடிக்­க­லாம்.

"நமக்­கான மதிப்­பும் மரி­யாதையும் நிச்­ச­யம் அதி­கரிக்­கும்," என்று சொல்­லும் அசோக் செல்­வன், முதன்­மு­றை­யாக அடி­த­டிப் படத் தில் நடிப்­பது நல்ல அனு­ப­வ­மாக அமை­யும் என நம்­பு­கிறார்.

'வேழம்' படத்­தின் கதைக்­கள மும் திரைக்­க­தை­யும் ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும் என்று குறிப்­பிடுபவர், புதுப் படத்­துக்­காக தம்மைத் தயார்­படுத்­திக்கொண்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"எனக்கு எண்­ணிக்கை விளையாட்­டில் நம்­பிக்­கையோ ஆர்­வமோ இல்லை. பத்து ஆண்­டு­களில் பத்து உருப்­படி­யான படங்­களில் நடித்து முடித்த மன­நி­றைவு உள்­ளது. இவ்­வ­ள­வு­தானா என்று கேட்­ப­வர்­கள் குறித்து நான் கவ­லைப்பட­வில்லை.

"அசோக் செல்­வன் படம் என்­றால் அது தர­மான படைப்­பா­கத்­தான் இருக்­கும் என்ற நம்­பிக்கை ரசி­கர்­கள் மத்­தி­யில் ஏற்­பட்­டால் அதுவே எனக்­குப் போது­மா­னது.

"மற்­ற­படி எனக்கு நெருக்­க­மான நண்­பர்­களே என்­னைக் கிண்­டல் செய்­தா­லும் நான் எதை­யும் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை.

"எனது படங்­க­ளின் விமர்­ச­னங்­களில் இருந்து நல்ல கருத்­து­களை எடுத்­துக்­கொள்­வேன். எனது குறை­கள் சுட்­டிக்காட்­டப்­பட்­டால் அவற்­றைத் திருத்­திக்கொள்ளத் தயங்­க­மாட்­டேன். விரை­வில் எனது நடிப்­பில் பல நல்ல படங்­கள் வெளி­வ­ரும்," என்­கி­றார் அசோக் செல்­வன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!