திரைத் துளிகள்

 நடிகை சாய் பல்லவிக்கு தெலுங்கு திரையுலகம் ‘லேடி பவர் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது. தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘விராட பர்வம்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார், சாய் பல்லவியை ‘லேடி பவன்குமார்’ என்று குறிப்பிட்டார். தெலுங்கு முன்னணி நாயகர்களில் ஒருவரான பவன்குமாருக்கு ‘பவர் ஸ்டார்’ என்ற பட்டம் உள்ளது. இதையடுத்து சாய் பல்லவியை ‘லேடி பவர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ‘விராட பர்வம்’ படத்தின் விளம்பரங்களில் ‘லேடி பவர் ஸ்டார்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் சாய்பல்லவி, தாம் படித்து பெற்ற மருத்துவர் பட்டமே போதும் என்கிறார்.

 மூன்றாவது முறையாக ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். தற்காலிகமாக ‘ஏகே51’ என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

இதையடுத்து கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி, ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளார் அஜித். அங்கு தனது ‘மோட்டார் பைக்’ (இருசக்கர வாகனம்) மூலம் முக்கியமான சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்த்து வருகிறார். ஆங்காங்கே அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளன. இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இந்தப் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 விஜய்யின் தீவிர ரசிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். நேற்று முன்தினம் தமது 48வது பிறந்தநாளைக் கொண்டாடிய விஜய்க்கு சிறு கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித் துள்ளார் கீர்த்தி. “பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலி வுட்டின் வாரிசு.. அந்தப் பெயர் தளபதி,” என்று சமூக ஊடகத்தில் கீர்த்தி பதி விட்டுள்ளார். இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!