ஆலியா படத்துக்குச் சிக்கல்

ஆலியா பட் நடித்­துள்ள புதுப் படத்­துக்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. ‘டார்­லிங்ஸ்’ என்ற தலைப்­பில் உரு­வா­கி­யுள்ள அந்­தப் படத்­தில் சர்ச்­சைக்­கு­ரிய பல காட்­சி­கள் இருப்­ப­தாக எதிர்ப்­பா­ளர்­கள் சுட்­டிக்­காட்டியுள்­ள­னர்.

இந்­தித் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான வேகத்­தில் சில வெற்­றிப் படங்­களில் நடித்து முடித்­துள்­ளார் ஆலியா பட்.

‘உட்தா பஞ்­சாப்’, ‘டியர் ஜிந்­தகி’ உள்­ளிட்ட படங்­களில் மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­ற­தன் மூலம் ரசி­கர்­களை திரும்­பிப் பார்க்க வைத்­துள்ள ஆலியா, திரு­ம­ணத்­துக்கு முன்பு நடித்து முடித்த ‘கங்­கு­பாய் கத்­யா­வாடி’ சில சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனால், இத்­த­கைய எதிர்ப்­பு­கள் எதை­யும் இவர் கண்­டு­கொள்­வ­தாக இல்லை.

இந்­நி­லை­யில், இவர் இப்­போது நடித்துள்ள ‘டார்­லிங்ஸ்’ படம் நேற்று முன்னணி ஓடிடி தளத்­தில் வெளி யானது.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­தில் ஆலியா பட் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரம், தன் கண­வ­ரைப் பல­வி­த­மாக துன்புறுத்து­வது உள்­ளிட்ட சில சர்ச்­சைக்­கு­ரிய காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் அவற்றை நீக்க வேண்­டும் என்­றும் ஒரு தரப்­பி­னர் குரல் எழுப்­பி­யுள்­ள­னர். இதுகுறித்து ஆலியா பட் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!