திரைத் துளிகள்

 திரையுலகில் பெண் களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்கிறார் தமன்னா. கதாநாயகர் களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தில் பாதிகூட நாயகிகளுக்கு அளிக்கப் படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெண்களின் பேச்சை திரையுலகில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மேலும், படத்துக்கான விளம்பர நிகழ்வுகளில் நாயகிகள் பங்கேற்கவில்லை என்றால் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். ஆனால் நாயகன் வரவில்லை என்றால் விமர்சிக்க மாட்டர்கள். இத்தகைய போக்கு எப்போது மாறும் எனத் தெரியவில்லை,” என்கிறார் தமன்னா.

 மீண்டும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் வடிவேலு. இந்நிலையில், தமக்கு முடிவு என்பதே கிடையாது என்று தாம் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறியுள்ளார். “நான் வைகைப் புயல் பேசுகிறேன். வைகை இவ்வளவு நாள்களாக வறண்டு போயிருந்தது. இப்போது அணை திறந்துவிடப்பட்டதால் வைகை தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள். நன்றி,” என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

 உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம் என்கிறார் நடிகை மீனா. அந்த வகையில் தமது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளதாக அவர் அறிவித் துள்ளார். மீனாவின் கணவர் அண்மையில் காலமானார். உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழக்க நேரிட்டது. இந்நிலையில் அனைத்துலக உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய மீனா, தமது கணவருக்கு உரிய நேரத்தில் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய யாராவது முன்வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும் எனக் குறிப் பிட்டுள்ளார். “அவ்வாறு நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வதன் மூலம் எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துகொண்டேன்,” என்கிறார் மீனா.

 தனது தாயும் காலஞ்சென்ற நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாளையொட்டி, அவரது மகள் ஜான்வி கபூர் சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில் தனது தாயாருடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“உங்களது மறைவால் நாங்கள் வாடிக்கொண்டிருக்கிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா,” என்று ஜான்வி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அவரது தங்கை குஷி கபூரும் தனது தாயார் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட கறுப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜான்வி கபூர் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், குஷியும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

, :   

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!