‘அப்பா அதிர்ச்சியடைந்தார்’

திரைப்­ப­டங்­களில் நடிக்க விரும்­பு­வ­தாக தன் தந்­தை­யி­டம் கூறி­ய­போது அவர் அதிர்ச்சி அடைந்­த­தா­கச் சொல்­கி­றார் விரு­மன் பட நாய­கி­யும் இயக்­கு­நர் சங்­க­ரின் மக­ளு­மான அதிதி.

முதல் படம் வெளி­யாகி, இவ­ரது நடிப்பை விமர்­ச­கர்­களும் ரசி­கர்­களும் பாராட்டி உள்­ள­னர். இந்த வர­வேற்பு தம்மை நெகிழ வைத்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

“சிறு வயது முதல் எனக்கு இசை­யில் ஆர்­வம் அதி­கம். ஐந்து வயது முதல் வாய்ப்­பாட்டு கற்று வரு­கி­றேன். என்­ன­தான் மருத்­து­வம் படித்­தி­ருந்­தா­லும், மன­துக்­குள் நடி­கை­யாக வேண்­டும் என்ற ஆசை­யும் ஓரத்­தில் இருந்­தது.

“அப்­பா­வும் இசைப்­பி­ரி­யர் என்­ப­தால் நானும் இசை­யில் கவ­னம் செலுத்­து­வதை ஊக்­கு­வித்­தார். படிப்பை முடித்­த­தும் என்ன வேண்­டு­மா­னா­லும் செய்­து­கொள் என்று அம்மா அனு­மதி கொடுத்­து­விட்­டார். ஆனால் அப்­பா­வி­டம் சினிமா ஆசையை விவ­ரித்­த­போது அதை ஏற்­றுக்­கொள்ள அவ­ருக்கு அவ­கா­சம் தேவைப்­பட்­டது,” என்­கி­றார் அதிதி.

தன் மக­ளின் விருப்­பம் குறித்து மனை­வி­யி­டம் கலந்­தா­லோ­சித்த பின்­னர் மறு­நாள், அதிதி சினி­மா­வில் நடிக்க சம்­ம­தித்­துள்­ளார் சங்­கர். தமது முடி­வின் பின்­ன­ணி­யை­யும் மக­ளி­டம் விளக்கி உள்­ளார்.

“மறு­நாள் அப்பா என்ன சொல்­லப் போகி­றாரோ என்ற அச்­சம் இருந்­தது. நேராக என்­னி­டம் வந்­த­வர், ‘தந்தை என்ற நிலை­யில் இந்த விஷ­யத்­தில் நான் முடி­வெ­டுப்­பது மிக­வும் சிர­ம­மான விஷ­யம்.

“அதே­ச­ம­யம் ஓர் இயக்­கு­நராக யோசிக்­கும்­போது என் மகள் இந்­தத் ­து­றைக்கு மிகப் பொருத்­த­மா­ன­வள் என்­பதை உணர்ந்­துள்­ளேன்.

“எனவே இயக்­கு­நர் என்ற வகை­யில் உன் விருப்­பத்­துக்கு தடை­யாக இருக்கமாட்­டேன்’ என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி­விட்­டார்,” என்று சொல்­லும் அதிதி, தமது கல்­லூரி நாள்­களை இன்­ற­ள­வும் அசை­போடு­கி­றார்.

கல்­லூரி வகுப்­பு­களை புறக்­கணித்­து­விட்டு தோழி­க­ளு­டன் சினிமா பார்க்­கக் கிளம்பி­வி­டு­வா­ராம். அதி­லும் ‘தலை­வர்’ ரஜி­னி­யின் தீவிர ரசி­கை­யாம்.

“கல்­லூ­ரிக்­குப் போவ­தா­கச் சொல்­லி­விட்டு ‘பேட்ட’, ‘தர்­பார்’ படம் பார்க்­கப் போய்­வி­டு­வேன். எனி­னும் அப்­ப­டிச் செய்­து­விட்டு வீட்­டில் வந்து நானே உண்­மை­யைச் சொல்­லி­வி­டு­வேன்.

“அப்பா மிகப்­பெ­ரிய இயக்­கு­ந­ராக இருக்­கும்­போது வேறு இயக்­கு­ந­ரின் படத்­தில் அறி­மு­க­மாக வேண்­டிய கார­ணம் என்ன என்று பேட்­டி­க­ளின்­போது கேட்­கி­றார்­கள். அப்­பா­வின் இயக்­கத்­தில் நடிக்க எனக்கு மட்­டு­மல்ல அப்­பா­வுக்கே விருப்­பம் இல்லை. ஏனெ­னில், என் திற­மையை நிரூ­பித்து, எனக்­கான ஓர் இடம் கிடைத்­த­தும் அது தானா­கவே நடக்க வேண்­டும் என்று விரும்­பி­னோம்.

“ஆனா­லும், அப்­பா­வி­டம் வாய்ப்­புக் கேட்­டி­ருக்­கி­றேன். நடிப்­புத் தேர்வு வைத்து, அதில் மன­நி­றைவு ஏற்­பட்­டால் மட்­டும் வாய்ப்பு கொடுங்கள் சார் என்று கூறி­விட்டு, அங்கு நிற்­கா­மல் ஓடி­விட்­டேன். கூடிய விரை­வில் என் ஆசைப்­படி நடக்­கும் என நம்­பு­கி­றேன்,” என்­கி­றார் அதிதி.

திரைத்­து­றை­யில் புதி­தாக அறி­மு­க­மாகி இருந்­தா­லும் ஏரா­ள­மா­னோர் தம்­மி­டம் எதை­யும் எதிர்­பார்க்­கா­மல் அள­வு­க­டந்த அன்பு காட்­டு­வ­தா­கக் குறிப்­பி­டு­பவர், நடி­கை­யா­கி­விட்­ட­தால் மருத்­துவ மேற்­ப­டிப்­புக்கு நேரம் ஒதுக்க முடி­யா­மல் போய்­விட்­டது என்­கி­றார்.

“இது­தான் சினி­மா­வால் இது­வரை நான் பெற்­ற­தும் இழந்­த­தும் ஆகும். அதே­ச­ம­யம் தின­மும் மேற்­கொள்­ளும் நடைப்­ப­யிற்சி, என் செல்­லப்­பி­ரா­ணி­யு­டன் விளை­யா­டு­வது, வீட்­டில் விளை­யாட்­டாக ரகளை செய்­வது என மற்ற விஷ­யங்­கள் எது­வும் மாறவே இல்லை.

“அப்பா ஒரு­வேளை ‘அந்­நி­யன்’, ‘சிவாஜி’ படங்­க­ளின் இரண்­டாம் பாகத்தை உரு­வாக்­கும் பட்­சத்­தில் சிறு வேடத்­தி­லா­வது நடிக்க விரும்­பு­கி­றேன்.

“சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்­கும் ஆசை­யும் உள்­ளது,” என்­கி­றார் அதிதி.

அதேசமயம் வாரிசு என்பதால் மட்டும் திரையுலகில் வெற்றி கிடைத்துவிடாது என்று குறிப்பிடுபவர், திரையுலகத்தில் பணியாற்ற தேவைப்படும் திறமை தம்மிடம் உள்ளது என்றும் கூறுகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!