திரைத் துளி­கள்

 அஜித் நடிக்கும் புதுப் படத்துக்கு ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது அவரது 61வது படமாகும்.

தலைப்பை அறிவித்த கையோடு, அஜித்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை யும் வெளியிட்டுள்ளனர். தலைப்பின் கீழ் ‘துணிவில்லையேல் வெற்றி இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தலைப்புக்கும் சுவரொட்டிக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

சுவரொட்டியில் வெள்ளை தாடி, மீசையுடன் காட்சியளிக்கும் அஜித், கையில் துப்பாக்கியை ஏந்தி உள்ளார். எனவே இது அடிதடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 நடிக்க வந்த புதிதில் தம்மை ராசியில்லாத நடிகை என்று சிலர் முத்திரை குத்தியதாகவும் அவ்வாறு விமர்சித்தவர்களே இப்போது தம்மை முதல் நிலை நடிகை எனப் பாராட்டுவதாகவும் சொல்கிறார் பூஜா ஹெக்டே.

“திரையுலகில் நீடிக்க நட்சத்திர தகுதி மட்டுமே தேவை என்று நினைப்பது தவறு. அந்த இடம் நிரந்தரமானதல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

“அதனால் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பெறுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதை நான் மதிப்பதும் இல்லை.

“நன்றாக நடிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர், நடிகையாக இருந்தாலும் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ரசிகர்களுக்கு பிடித்தால் புதிதாக வருபவர்களுக்கும்கூட பெரிய வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும்,” என்கிறார் பூஜா.

 சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வள்ளி மயில்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

கடந்த 1980களில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகிறது. இதற்காக திண்டுக்கல்லில் ஒரு கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைத்துள்ளனர்.

இமான் இசையமைக்கும் இப்படத்தில், ஒரே சமயத்தில் ஐம்பது ரவுடிகளுடன் விஜய் ஆண்டனியும் நாயகி ஃபரியாவும் மோதும் சண்டைக் காட்சியை தற்போது படமாக்கி வருகின்றனர். இதற்காக ஃபரியாவுக்கு (இடது) சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.

 அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது.

‘பிம்பிலிக்கி பிலாப்பி’ எனத் தொடங்கும் அப்பாடலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, ‘ஜெசிக்கா’ என்று தொடங்கும் இரண்டாவது பாடலை இன்று வெளியிட உள்ளனர்.

 மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொண் டுள்ளார் அப்படத்தின் நாயகி களில் ஒருவரான காஜல் அகர்வால்.

கதைப்படி, அவர் சில காட்சிகளில் குதிரையில் ஏறிச்செல்வது போல் நடிக்க வேண்டியுள்ளதாம்.

இதையடுத்து கடந்த சில நாளாக குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் காஜல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!