‘நேரம் தவறாத கதாநாயகி’

தான்யா ரவிச்­சந்­தி­ர­னைப் போல் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­படும் கதா­நா­ய­கி­களை பார்ப்­பது அரிது என்­கி­றார் இயக்­கு­நர் சாம் ஆண்­டன்.

இவ­ரது இயக்­கத்­தில் அதர்­வா­வும் தான்யா ரவிச்­சந்­தி­ர­னும் இணைந்து நடித்­துள்ள 'டிரிக்­கர்' படம் தற்­போது வெளி­யீடு கண்­டுள்­ளது.

இந்­தப் படத்­தின் கதை மிக­வும் பிடித்­துப்­போ­ன­தால் தயக்­க­மின்றி கால்­ஷீட் ஒதுக்கி நடித்­த­தா­கச் சொல்­கி­றார் தான்யா.

காவல்­து­றை­யில் பணி­யாற்­றிய தன் தந்­தை­யால் தீர்த்து வைக்க முடி­யாத வழக்­குக்கு மகன் தீர்வு காண்­கி­றார் என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் ஒரு வரிக்­கதை.

"காவல்­து­றை­யின் செயல்­பா­டு­கள் குறித்து இப்­ப­டத்­தில் அதி­கம் பேசி இருக்­கி­றோம். 'வீடு சுத்­த­மாக இருந்­தால்­தான் நாடு சுத்தமாக இருக்­கும் என்­ப­தை­விட ஒரு காவல் நிலை­யம் சுத்­த­மாக இருந்­தால்­தான் அதைச் சுற்­றி­யுள்ள ஊர் சுத்­த­மாக இருக்­கும்' என்று சொல்லி இருக்­கி­றோம்.

"இயக்­கு­நர் சாம் ஆண்­ட­னின் திரைக்­கதை அரு­மை­யாக அமைந்­தது. காதல், நகைச்­சுவை, குடும்ப உணர்­வு­கள் என்று எல்­லாம் அள­வோடு இடம்­பெற்­றுள்­ளன. அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் அனு­ப­வித்து நடித்­தேன்," என்­கி­றார் தான்யா.

பதி­லுக்கு, இவ­ருக்கு பாராட்­டுப் பத்­தி­ரம் வாசிக்­கி­றார் இயக்­கு­நர் சாம் ஆண்­டன்.

"தான்யா மிக இனி­மை­யான குணா­தி­ச­யம் கொண்­ட­வர். பொது­வாக, படப்­பி­டிப்பு என்­றால் மற்ற அனை­வ­ருக்­கும் முன்­பா­கவே நான் படப்­பி­டிப்பு நடக்­கும் இடத்­துக்­குச் சென்று­வி­டு­வேன். அதே­போல் ஒரு காட்­சியை அரை­கு­றை­யாக விட்­டு­வி­டா­மல் முழு­மை­யாக பட­மாக்­கிய பிறகே ஓய்­வெ­டுப்­பேன்.

"ஆனால், எனக்­கும் முன்­பா­கவே ஒரு­வர் படப்­பி­டிப்­புக்கு வரு­வார் என்­றால் அது தான்­யா­தான். நேரம் தவ­றாமை என்­ப­தற்கு அவர் ஒரு மிகச் சிறந்த உதா­ர­ணம். அதே­போல் காட்­சி­களை, வச­னங்­களை உள்­வாங்­கிக் கொண்டு தேர்ந்த நடிப்பை வழங்­கு­வார்.

"தமது நடிப்பு குறித்து யாரும் சிறு குறை­யும் சொல்­லி­வி­டக் கூடாது என்­ப­தில் மிகுந்த கவ­னம் செலுத்­தும் நடிகை. திரை­யு­ல­கில் அவர் போக வேண்­டிய தூரம் நிறைய உள்­ளது. எனி­னும், இப்­ப­ய­ணத்­தின் முடி­வில் அவர் சிறந்த நடி­கை­யாக உரு­வாகி இருப்­பார் என்று உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்­கி­றார் சாம் ஆண்­டன்.

இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு 45 நாள்­கள் நடந்­துள்­ளது. அவற்­றுள் 29 நாள்­களுக்கு சண்­டைக்­காட்­சி­கள் மட்­டுமே எடுத்­த­ன­ராம். இதற்­காக அதர்வா உடலை வருத்­திக்கொண்டு நடித்­தா­ராம்.

"அதர்­வா­வைப் பற்றி நான் புதி­தா­கச் சொல்ல ஒன்­று­மில்லை. எவ்­வ­ளவு கடி­ன­மான காட்சி என்­றா­லும் சலித்­துக்­கொள்ள மாட்­டார். எப்­போ­துமே முகத்­தில் புன்­னகை ஏந்­தி­யி­ருக்­கும் நடி­கர். அவ­ரது உழைப்பு வியக்க வைக்­கிறது.

"நாம் என்ன எதிர்­பார்க்­கி­றோமோ அதை குறை­வின்றி தரக்­கூ­டிய கதா­நா­ய­கன். இயக்­கு­ந­ரின் நடி­கர் என்று சொல்­வார்­கள் அல்­லவா, அதற்­கான நல்ல உதா­ர­ணம் அதர்வா.

"ஒரு முறை கதை­யைக் கேட்­டு­விட்­டால் அதன் பிறகு படம் முடி­யும் வரை இயக்­கு­ந­ரி­டம் எதற்­கா­க­வும் கேள்வி எழுப்ப மாட்­டார்.

"அவ­ரி­டம் இருந்து இவ்­வ­ளவு அரு­மை­யான ஒத்­து­ழைப்பு கிடைக்­கும் என எதிர்­பார்த்­த­தில்லை. 'நீங்­கள் சொன்­னால் சரி­யா­கத்­தான் இருக்­கும்' என்று முகத்­துக்கு நேரா­கப் பேசக்­கூ­டி­ய­வர்.

"அவ­ரு­டன் மீண்­டும் இணைந்து செயல்­பட வேண்­டும் என மனம் விரும்­பு­வ­தில் வியப்பு ஏதும் இல்லை," என்­கி­றார் சாம் ஆண்­டன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!