விஜயலட்சுமி: சித்திரவதை செய்தார் கணவர்

தமது கண­வர் பல வகை­யி­லும் தம்மை சித்­திரவதை செய்­ததாகச் சொல்­கி­றார் கண்­பார்­வை­யற்ற பின்­ன­ணிப் பாடகி வைக்­கம் விஜ­ய­லட்­சுமி.

பல்­வேறு மொழி­களில் ஏரா­ள­மான திரைப் பாடல்­க­ளைப் பாடி­யுள்ள அவர், கடந்த 2018ஆம் ஆண்டு பல­கு­ரல் கலை­ஞர் அனூப் என்­ப­வரை திரு­ம­ணம் செய்துகொண்­டார். எனி­னும் இந்த மண­வாழ்க்கை நீண்­ட­காலம் நீடிக்­க­வில்லை. அத­னால் கண­வ­ரைப் பிரிந்­து­விட்­டார்.

“எனது கண­வர் ஒரு ‘சேடிஸ்ட்’. எப்­போ­துமே என்­னுடைய குறை­களை மட்­டுமே சுட்­டிக்­காட்டி வந்­தார். அதையே அவர் முழு­நேர பணி­யா­க­வும் வைத்­தி­ருந்­தார்.

“திரு­ம­ணத்­துக்­குப் பின் எனது பெற்­றோரை என்­னி­ட­ம் இருந்து பிரித்­தார். அதை­யெல்­லாம் விட என்­னைப் பாட்டு பாடக்­கூடாது எனக்­கூறி பல்­வேறு நிபந்­த­னை­களை விதித்­தார். இதை­யெல்­லாம் ஒரு கட்டத்துக்கு மேல் சகித்­துக்கொள்ள முடி­ய­வில்லை. பாடல்­கள்தான் எனக்கு உயிர். பாடல்­கள் இல்­லாத ஒரு வாழ்க்­கையை நான் வாழ விரும்­ப­வில்லை. அத­னால்தான் அவரை விவா­க­ரத்து செய்து பிரிந்­து­விட்­டேன்,” என்று நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­ற­போது விஜ­ய­லட்­சுமி தெரி­வித்­துள்­ளார்.

டி.இமான் இசை­யில் இவர் பாடிய ‘சொப்­பன சுந்­தரி நான் தானே’ என்ற பாடல் பட்டி தொட்டி­யெல்­லாம் பெயர் வாங்­கிக்கொடுத்­தது. கடந்த 2016ஆம் ஆண்டிலேயே விஜ­ய­லட்­சு­மி­யின் பெற்­றோர் அவ­ருக்­குத் திரு­ம­ணம் செய்து வைக்க முயற்­சி­கள் மேற்­கொண்­ட­னர்.

திரு­மண நிச்­ச­ய­தார்த்­த­மும் நடை­பெற்­றது. எனி­னும் சில காரணங்­க­ளால் அத்­தி­ரு­ம­ணம் நடை­பெ­ற­வில்லை.

தற்­போது தமிழ், மலை­யா­ளம் உள்­ளிட்ட மொழி­களில் தயா­ராகும் திரைப்­ப­டங்­களில் பாடி வரும் விஜ­ய­லட்­சுமி, பல்­வேறு இசை நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்று வரு­கி­றார். இந்­நி­லை­யில், அவர் தமது திரு­மண வாழ்க்கை குறித்து வெளி­யிட்ட தக­வல்­கள் ரசி­கர்­களை அதிர வைத்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!