திரைத் துளி­கள்

 தமக்கு எதிராக சிலர் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளைப் பரப்பி வருவதாக நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.

என்ன செய்தாலும் அதை விமர்சிப்பது வேதனை அளிப்பதாகவும் அண் மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எதற்காக என்னை இவ்வாறு தாக்குகிறார் கள் என்பது புரிய வில்லை. அதிக உடற் பயிற்சி செய்தால் ஆண்களுக்கான உடல்வாகுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். உடற்பயிற்சி செய்யாவிட் டால் உடல் பெருத்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். பேசாமல் இருந்தால் திமிர் பிடித்தவள் என்றும் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதிகம் பேசுவதாகவும் கூறுகின்றனர். இத்தகைய போக்கு மன ரீதியாக என்னைத் புண்படுத்துகின்றன. ‘வாரிசு’ படத்தில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று பேசுகிறார்கள். எனக்கு விஜய்யை ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் அந்தப் படத்தில் நானும் ஓர் அங்கமாக இருக்க விரும்பினேன்,” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.

 பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டு களைப் பெற்ற ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை தாம் தவறவிட்டதாகக் கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.

தம்மால் நடிக்க இயலாமல் போனதையடுத்து ஐஸ்வர்யா ராய் அந்தப் பாத்திரத்தில் நடித்ததாக அவர் கூறியுள்ளார். “படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்த கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு முதலில் என்னைத்தான் அணுகினார் இயக்குநர் ராஜீவ் மேனன். ஆனால் சூழ்நிலை காரணமாக என்னால் நடிக்க இயலாமல் போனது. அதன் பிறகுநீண்ட காலம் காத்திருந்த பிறகே அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானேன்,” என்கிறார் மஞ்சு.

 இயக்குநர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 66. தமிழகத்தின் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ், எழுத்தாளராக தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர். பின்னர் இயக்குநராக மாறினார்.

‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, ‘ராஜா ராஜாதான்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, ‘இராவணன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து சில படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார் ராமதாஸ். ‘காக்கிச் சட்டை’, ‘விசாரணை’, ‘அறம்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்களில் அவர் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

 அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது கீர்த்தி சுரேஷ் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திரிஷா, ஐஸ்வர்யா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கீர்த்தியின் ரசிகர்கள் இப்போதே அவருக்கு வாழ்த்து சொல்ல தொடங்கிவிட்டனர். ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துவிட்டார் கீர்த்தி. இதற்கிடையே தாம் நடித்துள்ள தெலுங்குப் படத்தில் பணியாற்றிய படக்குழுவில் உள்ள 130 பேருக்கு தலா இரண்டு கிராம் எடையுள்ள தங்கக் காசு ஒன்றை கீர்த்தி பரிசளித்துள்ளாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!