‘15 ஆண்டு பகை: விருப்பத்தை நிறைவேற்றினால் பேசுவேன்’

விஜய் என்­னு­டன் பேசு­வ­தற்கு முன்பு அவ­ரது அப்பா, அம்­மா­விடம் பேசவேண்­டும். எனது இந்த விருப்­பத்தை நிறைவேற்­றி­னால் நான் விஜய்­யு­டன் பேசத் தயா­ராக உள்ளேன் எனக் கூறி­யுள்­ளார் நடி­கர் நெப்­போ­லி­யன்.

‘போக்­கிரி’ படத்­தில் நடித்­த­போது விஜய்­யு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக கடந்த 15 ஆண்­டு­க­ளாக இன்­னும் அவ­ரு­டன் பேசா­மல்­தான் உள்­ளேன். அந்த அள­வுக்கு எங்­க­ளுக்­குள் பகை உணர்வு வேரோடி உள்­ளது எனக் கூறி­யுள்­ளார் அவர்.

அண்­மைக்­கா­ல­மாக அமெ ரிக்­கா­வில் வசித்­து­வ­ரும் அவர் அளித்­துள்ள ஒரு பேட்­டி­யில், “விஜய்­யு­டன் பேச்­சு­வார்த்தை முறிந்­து­போ­ன­தைத் தொடர்ந்து, அவர் நடித்­துள்ள படங்­க­ளைக்­கூட நான் பார்ப்­ப­தில்லை.

“எனி­னும், மீண்­டும் விஜய்­யுடன் பேச­வும் நடிக்­க­வும் நான் தயா­ராக உள்­ளேன். ஆனால், அவர் என்­னு­டன் பேசு­வ­தற்­குத் தயா­ராக இருக்­கி­றாரா என்­பதை அவ­ரி­டம் தான் கேட்­க­வேண்­டும்.

“விஜய் என்­னி­டம் பேசு­வதை­விட முத­லில் அவ­ரது பெற்­றோ­ரி­டம் பேச­வேண்­டும். அவர் பெற்­றோ­ரி­டம் பேசுவதில்லை என்ற தக­வல் அமெ­ரிக்கா வரை பரவியுள்­ளது. அதன்­பி­ன்னர் நாங்­கள் இருவரும் பேசிக்கொள்வது பற்றி பார்க்கலாம்,” என்று நெப்­ போ­லி­யன் கூறி­யுள்ள காணொ­ளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வரு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!