மூத்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்­கு­ந­ரும் நடி­கருமான டி.பி.கஜேந்­தி­ரன் உடல்­ந­லக் குறை­வால் நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 68.

‘வீடு, மனைவி, மக்­கள்’ திரைப்­ப­டம் மூல­மாக 1988ஆம் ஆண்டு இயக்­கு­ந­ராக அறி­முக மான­வர் டி.பி.கஜேந்­தி­ரன்.

ராம­ரா­ஜன் நடித்த ‘எங்க ஊரு காவல்­கா­ரன்’, கார்த்தி நடித்த ‘பாண்­டிய நாட்­டுத் தங்­கம்’, பிரபு நடித்த ‘பட்­ஜெட் பத்­ம­நா­பன்’, ‘சீனா தானா’ உள்­ளிட்ட பல்­வேறு படங்­களை இயக்கி உள்­ளார். மேலும் பல படங்­களில் நடி­க­ரா­க­வும் முத்­திரை பதித்­துள்­ளார்.

சில மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் கஜேந்­தி­ர­னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து ஓய்­வெ­டுத்து வந்த அவர், நேற்று காலை கால­மா­னார்.

தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னும் டி.பி.கஜேந்­தி­ர­னும் கல்­லூ­ரி­யில் ஒன்­றா­கப் படித்­த­வர்­கள். நண்­ப­ரின் மறை­வுக்கு முதல்­வர் ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

‘மக்கள் விரும்பும் வகையில் யதார்த்தமான, குடும்ப படங்களை இயக்கி பெயர் பெற்றார் டி.பி.கஜேந்திரன். அவரது படங்களை குடும்பமாகச் சென்று பார்த்து ரசிக்க முடியும்,” என ரசிகர்கள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!