இளையரின் படைப்பாற்றல் ஆர்வத்தைத் தூண்டிய பயிலரங்கு

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இவ்வாண்டு தமிழ்மொழி விழாவை ஒட்டி சிறுகதை போட்டி களை நடத்துகிறது. உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்காக தனித்தனியே மூன்று பிரிவுகள், பொதுமக்களுக் கான பொதுப்பிரிவு என சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 
இப்போட்டிகளை ஒட்டி மாண வர்களுக்கான இரண்டு பயிலரங்கு களுக்கு எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்தது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பயில ரங்கை ஆசிரியரும் எழுத்தாளரு மான திரு சேகர் நடத்தினார். பல்கலைக்கழக, உயர்கல்வி நிலை யங்களுக்கான பயிலரங்கை எழுத் தாளரான திரு இந்திரஜித் நடத்தி னார். எழுத்தாளர் கழகத்தின் இளம் எழுத்தாளர்கள் பயிலரங்குக ளை ஒருங்கிணைத்து, மாணவர் களுக்கு உற்சாகம் அளித்தனர். 
பல்கலைக்கழக, உயர்கல்வி நிலைய மாணவர்கள் சிறுகதை யைப் பற்றிய விவாதங்களில் ஆர் வமாகப் பங்கேற்றனர். ஆழமான காட்சிகள் கொண்ட கதையை உருவாக்குவது பற்றிய கலந்துரை யாடலிலும் அவர்கள் ஈடுபட்டனர். கதையில் துயரத்தை ஏற்படுத்தும் அம்சம் தேவையா என்ற கேள் வியை மாணவர்கள் முன்வைத்த னர். துயரம், சோகம், துக்கம் போன்றவை இல்லாமல் ஒரு நல்ல கதையை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்து அவர்கள் விவாதித்தனர். 
“எழுத்தாளர்களை உருவாக்க முடியாது. அது உள்ளிருந்து வெளிப்பட வேண்டும். புதிய எழுத் தாளர்களுக்கு ஊக்கமும் ஆதர வும் வழங்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை நடத் தும்,” என்றா எழுத்தாளர் கழகத் தின் தலைவர் நா.ஆண்டியப்பன், 
பயிலரங்கில் படைக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிய வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர்.ராஜாராம், தமிழில் நகைச்சுவை அம்சம் குறைவாக இருப்பதை குறிப்பிட்டுப் பேசினார். 
“மாணவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய புதிய நம்பிக்கையைத் தந்தனர். புதிய எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவா கின்றனர். நல்ல படைப்புகள் தொடர்ந்து வளரும்,” என்றார் அவர். 

பயிலரங்குகளில் பல மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். பல்கலைக்கழக, உயர்கல்வி நிலைய மாணவர்கள் ஆழமான காட்சிகள் கொண்ட கதையை உருவாக்குவது பற்றிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். கதையை எழுதி அதை சிறு நாடகமாக நடித்து ரசித்தனர். சிறுகதை எழுதுவதற்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது மாணவர்கள் பங்கேற்ற பயிலரங்கு என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். செய்தி, படங்கள்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விலங்கியல் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் குடும்ப தினக் கொண்டாட்டத்தில் யானைகளைக் கண்டு மகிழும் தொண்டூழியர்கள். தொண்டூழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 2,000 பேர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

23 Jun 2019

தொண்டூழியர்களை சிறப்பித்த கொண்டாட்டம்

மோட்டார் சைக்கிள் பயணம் செய்த வீரர்கள்: எஸ். பாலச்சந்திரன், 56, ப. பன்னீர்செல்வம், 54, ஆ. அருணகிரி, 53

23 Jun 2019

மோட்டார்சைக்கிளில் ஒன்பது நாடுகள் 

துயில் நாடகத்தில் ஜனனி இடம்பெறும் ஒரு காட்சி. படம்: SITFE

23 Jun 2019

தூக்கம் பற்றி துடிப்போடு பேசும் ‘துயில்’