சுற்றுச்சூழல்  பேண பருவநிலை செயல் திட்டம் ஒரு நல்ல தொடக்கம்

பருவநிலை செயல்திட்டத்திற்கு அரசாங்கம் முதலீடு செய்யும் நிதி, ஆள்பல வளங்களை ஒதுக்குவது ஆகியவை நல்ல தொடக்கம் என்றார் ‘ஃபோரம் ஃபார் தி ஃபியூச்சர்’ அமைப்பின் சுற்றுச்சூழல் ஆலோசகரான 28 வயது மதுமிதா அர்த்தநாரி.
“எனினும், தற்போதைய பருவநிலை சவால்களைக் கருத்தில் கொள்ளும்போது அந்த முதலீடு போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் ஒருமித்த சிந்தனை தேவை. இன்றைய உலகில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் சமூக மீள்திறனையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் இம்முயற்சிக்குப் பங்களிக்கும் அதேநேரத்தில் மக்களும் நிறுவனங்களும் பொறுப்புடன் பங்காற்றவேண்டும் என்றார் மதுமிதா (படம்).

 பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள நீண்டகாலத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதில், உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் பெரும் அளவில் முதலீடு செய்யும்.  2016ல் தொடங்கிய பருவநிலை செயல் திட்டத்தின் வழி, சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளில் சாலைகள் உயர்த்தப்பட்டன.
 தெக்கோங் தீவில் புது வகையான நிலமீட்பு அணுகுமுறைத் திட்டம், எரிசக்தியை சேமிக்கும் கரிம வரி, கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டம் போன்றவை சுற்றுப்புறத்தைப் பேணும் நீண்டகாலத் திட்டங்கள். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிளார்க் கீ பகுதியின் கேளிக்கைக் கூடங்களுக்கு சென்றுவிட்டு மது போதையுடன் வாடிக்கையாளர்கள் உணவுண்ண வருவது சர்கியுலர் சாலையில் அமைந்துள்ள ‘நியூ அலாம் ‌‌ஷா’ உணவகத்திற்குப் பழக்கமான ஒன்று. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Apr 2019

பரோட்டா கடைக்காரர்களின் இரவு நேர சவால்கள்

‘தமிழ்மொழியும் செயற்கை நுண்ணறிவும்’ என்ற தலைப்பில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ‘இளவேனில் 2.0’ படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர்கள் சங்கம்

21 Apr 2019

தமிழ்மொழியும் செயற்கை நுண்ணறிவும் 

நாடகத்தின் நிறைவில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், நாடகத்தை மேடையேற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். படம்: இர்ஷாத் முஹம்மது

21 Apr 2019

பாரதியாரையே நேரில் கண்ட அனுபவத்தைத் தந்த நாடகம்