பாரதியாரையே நேரில் கண்ட அனுபவத்தைத் தந்த நாடகம்

மகாகவி என தமிழ் உலகில் கொண்டாடப்படும் பாரதியாரின் வாழ்க்கையை மேடை நாடகம் மூலம் சித்திரித்தது 'பாரதி யார்?'.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக கடந்த 13ஆம் தேதி பிஜிபி மண்டபத்தில் இந்த வரலாற் றுக் காப்பியம் நாடகமாக மேடை ஏறியது. லிட்டில் இந்தியா வர்த் தகர்கள், மரபுடைமை சங்கம் இந் நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டரை மணி நேரத்தில் நாற்பது ஆண்டு வரலாறு சுருக்க மாகவும் சுவாரசியமாகவும் கூறப் பட்டது. பாரதியாரை நேரில் பார்த்த அனுபவத்தைப் பார்வையாளர் களுக்குத் தந்தார் இசைக்கவி ரமணன். பாரதியாருடன் வாழ்ந்தது போன்ற உணர்வில் அமைந்த நாடகத்தை உன்னிப் பாகக் கவனிக்கச் செய்தார் இசைக்கவி. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களோடு உள்ளூர் நடிகர்களும் பின்னணியில் பணி ஆற்றியவர்களும் இந்த நாடகத் தைச் சிறப்பாக வழங்க உதவினர்.
"இப்படைப்பில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்தும் நரம்புகளில் ஆழ்ந்து பதிவதுபோல் இருந்தது," என நாடகத்தின் முடிவில் அரங் கத்தில் கூடியிருந்தோருடன் பகிர்ந்துகொண்டார் சட்ட, உள் துறை அமைச்சர் கா சண்முகம்.
"நாடகத்தைப் பார்க்க வந்த ஒவ்வொருவருக்கும் சில கேள்வி களும் சஞ்சலங்களும் இருந்திருக் கும். மனிதர்களுக்கு இவ்வாறு இருப்பது இயல்புதான். நானும் வரும்போது வேலை சார்ந்த கேள் விகளை நினைத்துக்கொண்டே வந்தேன். இப்படைப்பைப் பார்த்த பின் மனதில் இருந்த எல்லா கேள் விகளுக்கும் பதில் கிடைத்தது. இதுபோன்ற மகா காவியத்தைக் காணும் ஒவ்வொருவரும் ஓரளவு சிறந்த பண்போடு செல்வது இந் தக் காவியத்தின் முக்கிய நோக் கம் என்று நினைக்கிறேன்," என் றார் அமைச்சர்.
"கலை, காவியம், கவிதை ஆகியவற்றிற்கு ஒரு தன்மை உண்டு. அது தெய்வமே வந்து நிற்பது போன்ற ஓர் உணர்வைத் தரும்," என்று அமைச்சர் குறிப் பிட்டார்.
பாரதியாரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை வெவ் வேறு காட்சிகளாகப் பிரித்து அழ குற காட்டினர் குழுவினர். இசைக் கவி ரமணன் எழுதிய வசனங்கள் பார்வையாளர்களின் மனங்களில் நங்கூரமிட்டுப் பதிந்தன.
"ஒவ்வொரு வசனத்திலும் இனிமையும் பொருளாழமும் பொதிந்திருந்தன," என்று கூறினார் திரு சாம்பசிவம். மேடை நாடகங்களை அதிகம் பார்த்திராத அவருக்கு இந்த நாடகத்தைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி.
"காட்சிக்கு மேடையின் பின் னணியிலிருந்த 'எல்இடி' திரை மெருகூட்டிப் பார்வையாளர் அனு பவத்தை மேலும் சுவாரசியமாக் கியது," என்று கூறினார் குமாரி தா‌ஷினி.
"தமிழ்மொழி விழாவில் இந்த நாடகம் மேடையேறியது சிறப்பு. அதுவும் இலவசமாக வழங்கப்பட் டது வரவேற்கத்தக்கது," என்றார் திருமதி பாஸ்கரன்.
சுமார் 700 பேர் வருகை தந் ததால் அரங்கம் நிரம்பி வழிந்து கீழ்த்தளத்திலும் அமர்ந்து காட்சித் திரை மூலம் நாடகத்தைக் கண்டு களித்தனர் மக்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!