மொழி கற்பித்தலில் பெற்றோரின் பங்கு முக்கியம்

ஆசிரியர்கள் தங்கள் நிபுணத்துவ திறன்களை வளர்த்துக்கொண்டு பாலர் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தமிழ்மொழி கற்றல் அனுபவத்தை வழங்க வேண்டும்.

இந்த நோக்கத்துடன் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மூன்றாம் ஆண்டாக பாலர் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வரங்கத்தை ஏற்பாடு செய்து இருந்தது.

'கண்ணே கனியமுதே' எனும் கருப்பொருளுடன் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வர்த்தக தொழில், கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கலந்துகொண்டார்.

சிறு வயதிலிருந்தே தாய் மொழியைத் தினசரி நடவடிக் கையிலும் வாழ்க்கை அனுபவம் மூலமாகவும் கற்க தொடங்கும் போது பிள்ளைகள் பிற்காலத்தில் அம்மொழியில் சிறந்த ஆற்றலைப் பெறுகின்றனர் என்று ஆய்வுகள் புலப்படுத்துவதாக திரு சீ தமது உரையில் கூறினார்.

வீட்டிலும் பள்ளியிலும் மொழிக் கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இளைய தலை முறையினரிடையே தமிழ்மொழி ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்ப்பது முக்கியம் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் தெரிவித்தார்.

அவற்றின் மூலமே தமிழ் மரபு, பண்பாடு, பண்புநெறிகளை சிறந்த முறையில் அவர்களுக்கு உணர்த்த முடியும் என்றார் கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுத் தலைவருமான திரு விக்ரம்.

பாலர் பள்ளி மாணவர்களின் மொழி ஆர்வத்தைத் தூண்ட கற்றல் நடவடிக்கைகளும் கற்ற லுக்கு உகந்த வகுப்பறைச் சூழலும் எப்படி ஊக்குவிக்கின்றன என்பதை விளக்கினார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி விரி வுரையாளர் தர்‌‌ஷினி ரெங்கசாமி.

தமது உரையில் அவர் தமிழ் மொழி கற்றுக்கொள்வதற்கு கடின மான மொழி அல்ல என்றும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் அதே சமயத்தில் தமிழர் பண்பாட்டு அம்சங்களையும் சிறார்களுக்குப் போதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுவாரசிய நடவடிக்கைகளின் வழி தமிழ் மொழியைக் கற்பிக்கும் போது அது பாலர் பள்ளி மாணவர் களை எளிதில் சென்றடையும் என்று விளக்கிய விரிவுரையாளர் தர்‌‌ஷினி, ஆசிரியர்கள் அத்தகைய நடவடிக்கைகளை உருவாக்கி மாணவர்களின் கற்றல் அனுப வத்தை மேம்படச் செய்ய வேண்டும் என அறிவுரைத்தார்.

பள்ளியில் மட்டும் தமிழில் பேசும் சூழலை ஏற்படுத்துவது போதுமானது அல்ல எனத் தெரி வித்த அவர், வீட்டிலும் தமிழில் பேசும் சூழலைப் பெற்றோர்கள் உருவாக்க கடப்பாடு கொண்டு இருக்க வேண்டுமென்றார்.

இதுவரை பாலர் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்காக மட்டும் நடத் தப்பட்டு வந்த கலந்தாய்வரங்கில் இவ்வாண்டு முதல் முறையாக ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

மொழியின்மீது மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுக்குக் கதை சொல்வது, 'கனி மணி' செயலியின் வழி எளிய தமிழ் சொற்களை அவர் களுக்கு அறிமுகம் செய்வது என பெற்றோர்களுக்காக இரு பயில ரங்குகள் நடத்தப்பட்டன.

பாடல்கள், கதைகள், சுவாரசிய நடவடிக்கைகள் மூலம் ஆர்வம் மூட்டும் வழியில் மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது, மாணவர்களின் கற்றல் பயணத்தில் பெற்றோர்களை எப்படி இணைத்துக்கொள்வது எனக் கற்பித்தல் உத்திகள் தொடர்பான பயிலரங்குகளில் பாலர் பள்ளி ஆசிரியர்கள் ஈடு பட்டனர்.

"கதை சொல்வதன் வழி எத்தகைய தகவல்களைப் பிள்ளை களிடம் கொண்டுபோய் சேர்க்க லாம், செயலி வழி எத்தகைய பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கலாம் என்பதை பயிலரங்கு வழி அறிந்துகொண்டேன்," என்று குறிப்பிட்டார் பெற்றோரான திருமதி கலைவாணி ஸ்ரீ மோகன கிரு‌ஷ்ணன், 38.

பிள்ளைகளுக்கு மொழிக் கற்பித்தலில் பெற்றோர்களை எப்படி ஈடுபடுத்தலாம் என்ற உத்திகளைக் கற்றுக்கொண்ட தாகவும் ஆசிரியரானதும் அவற்றைச் செயல்படுத்த ஆவ லுடன் இருப்பதாகவும் சொன்னார் நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியின் ஆரம்பகால கல்வி யுடன் கூடிய தமிழ்ப் பட்டயப் படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஹர்‌‌ஷினி கனபதி, 19.

இதற்கிடையே, தாய்மொழி களைக் கற்பிக்கும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் நிபுணத்துவத் திறன்களைத் தொடர்ந்து மேம் படுத்த கல்வி அமைச்சு இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவ தாக மூத்த துணை அமைச்சர் சீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!