மொழித்திறனை மேம்படுத்தும் பேச்சாளர் மன்றப் போட்டிகள்

அன்றாட வாழ்க்கையில் திருக் குறள் எப்படி முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை தங்களது இனிய பேச்சால் வெளிப்படுத்தி னர் 'டி' மாவட்டத்தில் இயங்கும் தமிழ் மன்றப் பேச்சாளர்கள்.

தமிழ்மொழி விழாவின் இறுதி நாளான கடந்த மாதம் 28ஆம் தேதி இவர்கள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த ‘தயாரிக்கப்பட்ட பேச்சு மற்றும் தயாரிப்பின்றி அரங்க பேச்சுப் போட்டி’யில் கலந்துகொண்டனர்.

மொழித் திறனையும் தலை மைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவும் பேச்சாளர் மன்றங்கள் நடத்தும் இதுபோன்ற போட்டிகள் உதவுகின்றன. 

ஆண்டுதோறும் நடக்கும் இந்தப் போட்டிகள் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட் டில் நடந்தேறியது. 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்  தினராகப் பங்கேற்றார் கல்வி அமைச்சின் தாய்மொழிப் பிரிவு துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன்.

தயாரிக்கப்பட்ட பேச்சுப்போட்டி  யில் ஆறு போட்டியாளர்கள் கள மிறங்கினர். சராசரியாக 7 நிமி டங்களுக்கு ஒரு தலைப்பை தாங்களாகவே தேர்ந்தெடுத்து போட்டியாளர்கள் பேசினர்.

பதற்றத்தை முறியடிப்பது எப் படி, கைபேசி மோகத்தில் சிக்கித் தவிப்பவர்களின் நிலைமை, அன் றாட வாழ்க்கையில் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்கள், மன்னித்து வாழும் மனப்பக்குவம், நல்ல நட்பு என சுவாரசியமான தலைப்புகளை பேச்சாளர்கள் தேர்ந்தெடுத்துப் பேசினர்.

பெரும்பாலானோர் நகைச்சுவை பாணியில் பேச முனைந்தனர், சிலர் மனதை உருக்கும் சம்ப வங்களைப் பகிர்ந்துகொண்டு ஆழமாக சிந்திக்க வைத்தனர், வேறு சிலர் தமிழ் இலக்கிய சிறப்புகளை நினைவுபடுத்தினர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பாதியில் நடந்த தயாரிப்பின்றி அரங்க பேச்சுப் போட்டியில், எந்த முன்தயாரிப்பும் இன்றி மேடையில் கொடுக்கப்படும் தலைப்பை ஒட்டி போட்டியாளர்கள் பேச வேண்டும்.

எந்தத் தலைப்பிலும் உடனடி யாகப் பேசும் திறனை போட்டி யாளர்களிடையே வளர்ப்பதே இப் போட்டியின் நோக்கம்.

அனைத்துப் போட்டியாளர் களும் ஒரே தலைப்பை மைய மாகக் கொண்டு பேசுவார்கள். 

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற தலைப்பை ஒட்டி இரண்டரை நிமிடத்திற் குள் சொல்லவேண்டிய கருத்து களை உடனுக்குடன் சிந்தித்து திறம்பட முன்வைத்தனர் பேச் சாளர்கள். 

தமிழகத்திலிருந்து வந்திருந்த நகைச்சுவை இலக்கியச் சொற் பொழிவாளர் திரு இரெ. சண்முக வடிவேல் சிறப்புப் பேச்சாளராக மேடையில் மிளிர்ந்தார்.

ஒரு பேச்சாளருக்கு வரக் கூடிய இடர்களைப் பற்றி பேசிய திரு சண்முகவடிவேல், பொதுக் கூட்டங்களிலும் பட்டிமன்றங் களிலும் தமக்கு ஏற்பட்ட இக் கட்டான பேச்சு அனுபவங்களை யும் அவற்றை சாமர்த்தியமாக சமாளித்த விதத்தையும் சுவைபட பகிர்ந்துகொண்டார். 

சுமார் ஒரு மணி நேரம் நிகழ்த்தப்பட்ட அவரது உரையால் அவ்வப்போது சிரிப்பொலி எழுந்து அரங்கத்தை நிறைத்தது.

இவரின் எதார்த்தமான நகைச்சுவைப் பேச்சு மொழியின் பயன்பாட்டையும் தமிழரின் சமூக பங்கையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

இறுதியில், தயாரிக்கப்பட்ட பேச்சுப் போட்டி பிரிவில் பேச்சாளர் சாந்தி காளிதாஸும் தயாரிப்பின்றி அரங்க பேச்சுப் போட்டியில் பேச்சாளர் அர்ஜுன் நாராயணனும் வாகை சூடினர்.

1928ஆம் ஆண்டு அமெரிக் காவில் கண்டுபிடிக்கப்பட்ட 'டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நே ‌‌ஷனல்' என்ற அமைப்பு பொதுக் கூட்டங்களில் தன்னம்பிக் கையுடன் பேசுவதற்கும் தலை மைத்துவப் பண்புகளை வளர்த் துக்கொள்வதற்கும் தொடங்கப் பட்டது. 

உலகமெங்கும் 143 நாடுகளில் மொத்தம் 357,000 உறுப்பினர் கள் அந்த அமைப்பில் இணைந் துள்ளனர்.

இதற்கான பாடத்திட்டம் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழ்மொழியிலும் இந்த பாடத் திட்டம் மொழிபெயர்க்கப்பட உள் ளது. 

2020ஆம் ஆண்டு இறுதிக் குள் முழு பாடத்திட்டமும் தமிழ் மொழியில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon