ஊழியருக்காக உதயமாகும் பயிற்சிக் குழு

சிங்கப்பூரில் துப்புரவு, பூச்சுக் கொல்லி, தோட்டப் பராமரிப்பு ஆகிய துறைகளில் ஒருங் கிணைந்த சேவைகளை வழங் கக்கூடிய முன்னணி நிறுவனங் களில் ஒன்றான ‘கிளீனிங் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிட் டெட்’, நிறுவன பயிற்சிக் குழுவை ஏற்படுத்தும் நோக்கத் தில் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் சென்ற மாதம் 21ஆம் தேதி கையெழுத்திட்டது.

கட்டட, கட்டுமான மற்றும் மர தொழில்துறை ஊழியர்கள் சங்கம், என்டியுசியின் லேனிங் ஹப் பிரைவேட் லிமிட்டெட், E2i ஆகியவற்றுடன் அந்த நிறுவனம் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெ ழுத்திட்டு உள்ளது.

புதிதாக அமைய இருக்கும் நிறுவன பயிற்சிக் குழுக்கள் மூலம் 800க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களின் உற்பத்தித் திறன் பெருகவும், சேவைத் தரம் உயரவும், ஆற்றல் மேம்படவும் இந்தப் பயிற்சிக் குழு உதவும்.

தொழிற்சங்கங்கள், பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், உயர் கல்வி நிலையங்கள் ஆகியவை சேர்ந்து தொழில்துறைக்குத் தேவையான வகையில் பயிற்சி களை உருவாக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு பற்றி கருத்து தெரிவித்த கிளீ னிங் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அஜிஸ், ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த ஊதியம், இன்னும் சிறந்த நல்வாழ்வு, மேலும் வேலை வாய்ப்பு கள் கிடைக்க இந்தப் புதிய குறிப்பு உதவும் என்றும் இவை நீண்டகாலப் போக்கில் ஊழியருக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!