கலாசாரமும் மொழியும் வளர உதவும் செயற்கை நுண்ணறிவு

ஒரே மாதிரியான ராகங்களில் பாடல்கள் இசையமைக்கப்படுவதை நாம் அறிந்துள்ள நிலையில் அதே ராகங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவின் வழி புதுமையான பாடல்களை இசைய மைக்கலாம் என்ற கருத்தை தமிழ் +AI கலந்தாய்வரங்கு முன்வைத் தது.

செயற்கை நுண்ணறிவின் மூலம் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று அம்சங்களை வருங்கால தமிழ் சந்ததியினரிடம் எளிதில் கொண்டுசேர்க்கும் நோக் கத்துடன் இந்த கலந்தாய்வரங்கு நடைபெற்றது.

முதன்முறையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவையும் நன்யாங் தொழில்நுட்

பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றமும் ஏற்பாடு செய்த இந்த கலந்தாய்வரங்கை வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் நடத்தினர்.

நேற்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்தாய்வரங்கில் ஏறத் தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

தமிழ்மொழி கற்றலையும் தமிழ் கலாசாரப் பற்றையும் தொடர்ந்து தமிழர்களின் நெஞ்சங்களில் விதைக்க தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப கருவிகளில் ஒன் றான செயற்கை நுண்ணறிவின் உதவி அவசியம்.

அந்த வகையில் தமிழ்மொழி, கலாசாரம் பற்றிய தகவல்களை செயற்கை நுண்ணறிவில் பதிவு செய்வதன் மூலம் நமது வாழ்வில் எவ்வாறு நன்மைகளை அடைய லாம் என்பதை ஆறு பேச்சாளர்கள் விளக்கினர்.

ஒரு மனிதனின் உணர்ச்சி

களை உணர்ச்சியே இல்லாத செயற்கை நுண்ணறிவே கண் டறிய செய்வது ஒரு வியக்கத்தக்க சாதனை என்று இந்தக் கலந்தாய் வரங்கின் பங்கேற்பாளர் அருண் ராஜ் குறிப்பிட்டார்.

“மேற்கத்தியர்கள் செயற்கை நுண்ணறிவிடம் ஐந்து உணர்ச்சி களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பரதநாட்டியத்தில் ஒன் பது முகபாவனைகளும் எட்டு கண் அசைவுகளும் உள்ளன.

தமிழர்களின் உணர்ச்சிகளை முகபாவனைகள் மூலம் பதிவு செய்து அவற்றை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு கண்டறியும் என்பதை கணினி வழி நமக்கு காட்டியது சுவாரசியமாக இருந் தது,” என்று நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழக மாணவன் அருண் கூறினார்.

தமிழ்மொழி புழக்கம் குறைந்து வந்துள்ள நிலையில் பொருட் களைக் கண்டறிந்து அவற்றின் பெயரைத் தமிழில் குறிப்பிடக்கூடிய செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி கற்றலை எளிதாக்கும் என்று இக்கலந்தாய்வரங்கில் கலந்துகொண்ட பிரியா ரவி சொன்னார்.

“புத்தகம், குவளை, கணினி போன்று தினசரி பயன்படுத்தும் பொருட்களை ஆங்கிலத்திலேயே கூறுகின்ற நிலையில், இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மூலம் நாம் தமிழ் புழக்கத்தை அதிகரிக்கலாம்.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஓங்கி வருகின்ற இக்கால கட் டத்தில் அதை பயன்படுத்தி நமது தொன்மைவாய்ந்த தமிழ் மொழியை வாழச் செய்வது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும்,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக நான்காம் ஆண்டு வர்த்தகத் துறை மாணவி பிரியா.

நுண்ணறிவு தமக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று எனக் கருதும் பல தமிழர்களுக்குக் கணக்கீட்டுச் சிந்தனையின் மூலம் மக்கள் எவ்வாறு செயற்கை நுண்ணறி

வைப் புரிந்துகொள்ளலாம் என் பதை ஜெயவாணி ராஜா விரிவாக எடுத்துரைத்தார்.

பிரித்தெடுத்தல், வகைப்படுத்து தல், கருப்பொருள் அறிதல், வழி முறைப்படி வடிவமைத்தல் போன்ற நான்கு நிலைகளைப் பயன்படுத்தி தகவல்களை தொழில்நுட்பத்திடம் எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்பதை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவி ஜெயவாணி படைத்தார்.

அதோடு செயற்கை நுண் ணறிவின் மூலம் புத்தாக்கத் திறனை வளர்த்துக்கொள்ளுதல் பற்றியும் படைக்கப்பட்டிருந்தது.

இம்முறை இந்நிகழ்ச்சி பலரின் ஆதரவோடு நடைபெற்றது என்றும் மக்கள் எவ்வாறு செயற்கை நுண் ணறிவுக் கருவிகளைக் கொண்டு சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை பற்றி வரும் ஆண்டுகளில் எதிர்பார்க் கலாம் என்றும் இந்தக் கலந்தாய் வரங்கின் ஏற்பாட்டுக் குழு தலை வர் ம.கணேஷ்குமார் குறிப்பிட்

டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!