சமத்துவத்துக்கான பின்லாந்தின் கௌரவ விருது

பல்வேறு சேவைகளின் மூலம் சமூகத்தை ஒன்றிணைத்துப் பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் சமத்துவத்தை ஊக்குவித்ததற்காக 56 வயது திரு டி.தம்பிராஜா பின்லாந்தின் ‘ஹான் ஹோனர்’ கௌரவ விருதைப் பெற்றுள்ளார்.

பாரபட்சம் காட்டாமல் அனை வரையும் சமமாகக் கருதும் மேம்பட்ட உலகத்தை ‘ஹான்’ என்ற பின்லாந்து மொழிச் சொல் குறிக்கின்றது.

பாலினம், பொருளியல் போன்ற பல்வேறு கூறுகளில் சமத்துவத்தை மேம்படுத்த ஊக்குவிக்கும் திட்டத்தைத் துவங்கியுள்ள பின்லாந்து அரசாங்கம் சமத்துவத்தை மேம் படுத்துவதற்காக உழைப்பவர் களைப் போற்றும் வகையில் பல நாட்டினருக்கு இந்த கௌரவ விருதை வழங்கி வருகிறது.

இதுவரை இவ்விருது நார்வே, இந்தோனீசியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இவ்விருதைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை திரு தம்பிராஜாவைச் சேரும். சிங்கப்பூருக்கான ஃபின்லாந்து தூதர் திரு ஆந்தி வான்ஸ்கா, திரு தம்பிராஜாவுக்கு இந்த விருதை நேற்று வழங்கினார்.

வசதி குறைந்தோருக்கு ஆதரவு அளிக்க நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த திரு தம்பிராஜா, கடந்த பத்து ஆண்டுகளாக சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் ஒரு தொண்டூழியராக துடிப்பான சேவையை ஆற்றி வருகிறார்.

தற்போது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பதிவாளராக பணிபுரிந்து வரும் திரு தம்பிராஜா, கடந்த இரு ஆண்டு களாக சிண்டாவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

அத்துடன் அவர் அதன் கல்வித் துறை துணைக் குழுவின் உறுப்பினர், தொண்டூழிய நிர்வாக வளக் குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிப்பதுடன் இந்திய சமூகத்திற்கும் சேவை ஆற்றி வருகிறார்.

பெண்களுக்கான ஐக்கிய நாட்டு மேம்பாட்டு நிதியத்தில் பாலின சமத்துவத்திற்காக ஆதரவளிக்கும் அவர் 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதக் கல்வியைப் பெண்களுக்கிடையே மேம்படுத்த முனைகிறார்.

அதோடு 2016ஆம் ஆண்டி லிருந்து வாடகை வீடுகளில் வசிப்போரை வீடு வீடாகத் தேடிச் சென்று சிண்டாவின் திட்டங்களை எடுத்துரைக்கும் நடவடிக்கையில் சலிக்காமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் திரு தம்பிராஜா.

"நமது நாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு அரசாங்கத் துடன் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் கூறியதற்கு ஏற்ப சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம் தொடர்ந்து பொதுச் சேவை ஆற்றுவதில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் இதுபோன்ற கௌரவ விருது மட்டுமின்றி சிண்டாவின் ஒட்டுமொத்த முயற்சியையும் அங்கீகரித் துள்ளதில் நான் பெருமிதம் கொள் கிறேன்," என்று திரு தம்பிராஜா கூறினார்.

சமத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள திரு தம்பிராஜாவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த பின்லாந்து தூதர் திரு ஆந்தி வான்ஸ்கா, சமத்துவத்துவப் பணிகளில் ஈடுபடும் பல நாட்டினரின் பரிந்துரைகள் மூலம் இவ்விருதுக்கு நியமிக்கப்படுவதாகக் குறிப்பிட் டார்.

அந்த வகையில் சமத்துவத்தைத் தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுடன் அதைச் சமூ தாயத்தில் நிலைநாட்டவும் உழைக் கும் திரு தம்பிராஜாவிற்கு இவ் விருது ஓர் உகந்த அங்கீகரிப்பு என்று அவர் கூறினார்.

இதுகுறித்து பேசிய சிண்டா வின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு அன்பரசு ராஜேந்திரன் இதுபோன்ற விருதுகள் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படுவதால் தொண்டூழியத்தில் ஈடுபட பொதுமக்கள் மேலும் ஊக்குவிக்கப்படுவர் என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!