காந்தியின் 150வது நினைவு தினம்

அண்ணல் காந்தியடிக​ளின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு, ‘காந்தி: வொர்த் ​ஹிஸ் சால்ட்’ என்ற நிகழ்ச்சியை​க் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. ‘காந்தியின் மறுமுகம்’ என்ற தலைப்பில் திரு சிவானந்தம் நீலகண்டனும் ‘காந்தி: வொர்த் ​ஹிஸ் சால்ட்’ என்ற தலைப்பில் திரு முகமது அலியும் உரையாற்றினர்.

1921ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்தது. நாடு முழுவதிலும் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது 1922 பிப்ரவரியில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களைத் திருப்பித் தாக்கிய மக்கள், சௌரிசௌரா என்ற இடத்தில் இருந்த காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 30க்கும் அதிகமான காவலர்கள் உயிரிழந்தனர். ஒத்துழையாமை போராட்டம் வன்முறையில் முடிந்ததை ஏற்றுக்கொள்ள மறுத்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தது மட்டுமின்றி, மக்கள் இயக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெறுப்பினால் பெறப்படும் விடுதலை ஒருபோதும் நீடிக்காது என்பது அவரது நம்பிக்கை. ஆகவே, செயல்பாடுகளைக்கொண்டு காந்தியை எடைபோடுவதைவிட அச்செயல்பாடுகளுக்குப் பின்னுள்ள சிந்தனையைப் புரிந்துகொள்வது காந்தியை அணுக்கமாக நெருங்க உதவும் என்றார் திரு சிவா.

தென்னாப்பிரிக்காவில் வசித்துவரு​ம் காந்தியடிகளின் பேத்தி எலா காந்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு திரு அலிக்குக் கிட்டியது. அந்தச் சந்திப்பை எட்டு நிமிடக் காணொளியாகக் காட்டினார் திரு அலி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 1913ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்தியப் போராட்டம், பிற்காலத்தில் அகிம்சை முறையிலான மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டமாக உருவெடுத்து தென்னாப்பிரிக்க மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்த சம்பவங்களை எலா காந்தி அமைதியாக நினைவுகூர்ந்தார். அதன் பிறகு, காந்தி குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்குத் தனக்கே உரித்த பாணியில் பதிலளித்தார் திரு அலி.

நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘காந்தியின் மனைவியாக இருந்தது’ என்ற கருப்பொருளுடன் அமைந்த ஓரங்க நாடகத்தின் ஒரு பகுதியை ‘ஹம் தியேட்டர்’ குழுவினர் நிகழ்த்தினர். கஸ்தூரிபாய்க்கும் காந்திக்கும் இடையிலான அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திருமண உறவில் ஏற்பட்ட ஒரு சில நிகழ்வுகளை கஸ்தூரிபாயாக நடித்த டெய்ஸி இராணி, தன் அனுபவமிக்க நடிப்பால் வெளிப்

படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார். தன் ஐந்து பிள்ளைகளில் தனித்து விடப்பட்ட ஹரிலால் காந்தி கதாபாத்திரத்துடன் ரயிலடியில் பேசும் காட்சி உருக்கமாக அமைந்தது. ஹம் தியேட்டரின் ‘காந்தியின் மனைவியாக இருந்தது’ நாடகம் இம்மாதம் 4 முதல் 12ஆம் தேதி வரை SRT அரங்கில் நடைபெறவுள்ளது.

“காந்தியின் மாபெரும் பங்களிப்புகளில் ஒன்றான உப்பு சத்தியாகிரகத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சியின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், காந்தியடிகள் உலகம் முழுமைக்குமான தலைமைத்துவ​ப் பண்புகளைப் போதித்தவர் என்பதால் தமிழரல்லாதோரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி தமிழிலும் ஆங்கித்திலும் நடத்தப்பட்டது.

“இதற்குக் கிடைத்த ஆதரவைப் பார்க்கும்போது காந்தி போன்ற மற்ற ஆளுமைகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் உகந்த காலகட்டத்தில் நடத்த வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளது,” என்றார் தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!