நலன் பேணுவதில் அதிக நாட்டம்

கொரோனா கிரு­மித்­தொற்று பல வழி­க­ளி­லும் மக்­களை உட­லு­று­தி­யி­லும் நல­னி­லும் அக்­கறை செலுத்த வைத்­துள்­ளது.

உடல்­ந­லம் பேண உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் சிலர், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தால் சுறு­சு­றுப்­பாக இருக்க உடற்­பயிற்­சி­யில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

‘வெர்­ஜின் எக்­டிவ்’, ‘சஃப்ரா பொங்­கோல்’ போன்ற உடற்­ப­யிற்சி கூடங்­கள் கொரோனா கிரு­மித் தொற்­றி­ய­வர்­க­ளால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது தெரிய வந்­ததை அடுத்து ‘வர்­ஜின் எக்­டிவ்’ உட்­பட சில உடற்­ப­யிற்சிக் கூடங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளன.

உடற்­ப­யிற்சி கூடங்­க­ளுக்கு தொடர்ந்து செல்­லவா வேண்­டாமா என்ற ஐயம் சில­ரி­டையே இருந்­த­போ­தி­லும் உடற்­ப­யிற்­சிக் கூடங்­க­ளுக்கு வரு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக உடற்­ப­யிற்சி கூட நடத்­து­னர்­கள் சிலர் தெரி­வித்­த­னர்.

வாரத்­தில் இரண்­டி­லி­ருந்து மூன்று முறை உடற்­ப­யிற்சி கூடத்­திற்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் இப்­போது மூன்று அல்­லது நான்கு முறை வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் கடந்த 4 ஆண்­டு­க­ளாக ‘தி ஃப்சிக் லேப்’ உடற்­ப­யிற்சி கூடத்தை நடத்­தி­வ­ரும் திரு ஜே தேவ­ராஜ், 37.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தால் பல­ருக்கு உடற்­ப­யிற்சி செய்ய கூடு­தல் நேரம் கிடைப்­ப­தாக அவர் சொன்­னார்.

நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­க­வும் அவர்­கள் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அவ­ரது வாடிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 14 வயது மோநி‌ஷ் ராயன் தற்­போது உடற்­ப­யிற்சிக் கூடத்­திற்கு வரு­வதை தற்­கா­லி­க­மாக ரத்து செய்­துள்­ளார். ஆனால் அவர் வீட்­டி­லி­ருந்­த­வாறு பயிற்சி செய்ய, பயிற்­று­விப்­பா­ளர் ஜே அவ­ருக்கு சில காணொ­ளி­களை அனுப்­பி­யுள்­ளார்.

உடல் நல­மில்­லா­விட்­டால் உடற்­ப­யிற்சிக் கூடத்­திற்கு வர­வேண்­டாம் என தமது வாடிக்­கை­யா­ளர்­களை அறி­வு­றுத்தி வரு­வ­தாக ‘தி ரையிட் ஃப்ட்’ உடற்­ப­யிற்சி நடத்­தி­வ­ரும் திரு வி. துரை­ரா­ஜா­சிங்­கம் சொன்­னார்.

உடல் வெப்­ப­நிலை சோதித்­தல், தின­மும் உடற்­ப­யிற்சிச் சாத­னங்­களை துடைப்­பது போன்ற நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­ப­தா­க­வும் தனிப்­பட்ட முறை­யில் பயிற்சி வழங்­கப்­ப­டு­வ­தால் உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்கு வரு­ப­வர்­களை எளி­தில் கண்கா­ணிக்க முடி­கிறது என்­றும் அவர் விளக்­கி­னார்.

உள்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட விரும்பாத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தமது உடற்­ப­யிற்சி கூடத்­தின் வெளியே உள்ள திறந்த வெளி­யி­லும் பயிற்சி வழங்­கு­கி­றார் கடந்த 9 ஆண்­டு­க­ளாக உடற்­ப­யிற்­சிக் கூடத்தை நடத்தி வரும் இவர்.

வார­இ­றுதி நாட்­களில், புக்­கிட் தீமா இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­குதி வழி­யாக செல்­வது போன்ற நட­வ­டிக்­கை­க­ளி­லும் அவர்­கள் ஈடு­ப­ட­லாம்.

“தற்­போது நில­வ­ரம் பர­வா­யில்லை ஆனால் கொவிட்-19 நில­வ­ரம் மோச­ம­டைந்­தால் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வீட்­டுக்­குச் சென்று பயிற்சி வழங்­க­வும் ஆயத்­த­மாக இருக்க வேண்­டும்,” என்று திரு துரை ராஜா­சிங்­கம் கூறி­னார்.

இவ­ரது வாடிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான 35 வயது அர­சாங்க ஊழி­யர் திரு­மதி சந்­தியா தேவி வாரத்­தில் இரு முறை உடற்­ப­யிற்சிக் கூடத்­திற்கு செல்­வது வழக்கம்.

அலு­வ­ல­கம் முடிந்து உடற்­ப­யிற்சி கூடத்­திற்குச் செல்­லும் இவர், பெரும்­பா­லான வேளை­களில் குறை­வான எண்­ணிக்­கை­யில் அக்­கூ­டத்­திற்கு வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­வ­தால் கிரு­மித் தொற்று பர­வல் அபா­யம் குறை­வாக உள்­ளது என்­றார்.

அதி­க­மா­னோர் கூடும் இடங்­க­ளுக்கு செல்­லா­மல் இருப்­பது, தனிப்­பட்ட சுகா­தார பழக்க வழக்­கங்­களைத் தொடர்ந்து கடைப்­பி­டிப்­ப­தன் மூல­மும் கொவிட்-19 நில­வ­ரத்­தால் பதற்­றம் அடை­யத் தேவை­யில்லை என்­பது இவ­ரின் கருத்து.

வர்த்­தக ஆய்­வா­ள­ராக பணி­யாற்­றும் 30 வயது ரா.விக்­ர­மன் வார நாட்­களில் உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்­குச் செல்­ப­வர்.

தற்­போது பெரும்­பா­லும் வீட்­டில் இருந்தே வேலை செய்­யும் இவர், வேலை தொடங்­கு­வ­தற்கு முன் அல்­லது முடிந்த பிறகு போத்­தோங் பாசி­ரில் அமைந்­துள்ள ‘எனிடைம் ஃபிட்னஸ்’ உடற்­ப­யிற்­சிக் கூடத்­திற்கு செல்­வார்.

தீவு முழு­வ­தும் இயங்­கும் பிர­பல உடற்­பயிற்சி கூட­மான இது 24 மணி நேர­மும் இயங்­கும். கொவிட்-19 நில­வ­ரத்தைக் கருதி உச்ச நேரங்­களில் அதன் வச­தியை பயன்­படுத்­து­வோ­ரின் எண்­ணிக்­கையை கட்­டுப்­ப­டுத்தி வரு­கிறது.

“உடற்­ப­யிற்சி தெளி­வான சிந்­த­னைக்கு வழி­வ­குப்­ப­தோடு விழிப்­பு­டன் செயல்­ப­ட­வும் உத­வு­கிறது,” என்­றார் உடல் எடையை கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க பயிற்சி செய்­து வ­ரும் விக்­ர­மன்.

வாரத்­தில் சுமார் நான்கு முறை தமது வீட்­டின் அரு­கில் உள்ள ‘தி ரையிட் ஃப்ட்’ உடற்­ப­யிற்சி கூடத்­திற்குச் செல்­கி­றார் 70 வயது திரு பீட்­டர் ஐயா­பிள்ளை.

விற்­பனை நிர்­வா­கி­யாகப் பணி­யாற்­றும் இவர், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக அவர் தம் உடல் உறு­தியை வலுப்­ப­டுத்தி வரு­கி­றார். வய­தா­ன­தும் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க தொடர்ந்து உடற்­ப­யிற்சி செய்து வரு­வது முக்­கி­யம் என்­றார்.

“அண்­மை­யில் மின்­ப­டிக்­கட்­டி­லி­ருந்து தவறி விழுந்­த­போது சிறு காயங்­க­ளு­டன் என்­னால் மீண்­டும் வழக்­க­மான வாழ்க்­கைக்கு திரும்ப முடிந்­தது. உடற்­ப­யிற்சி செய்­யா­மல் இருந்­தி­ருந்­தால் தசை­கள் பல­வீ­ன­மாகி அது நட­மாட்­டத்தை பாதித்­தி­ருக்­க­லாம்,” என்று தெரி­வித்­தார் அவர்.

சுகா­தார அமைச்­சின் வழி­மு­றை­களை முறை­யாக பின்­பற்­று­கை­யில், ஆரோக்­கிய வாழ்க்­கையை தொடர்ந்து கடை­பி­டிக்­க­லாம் என்­பது இவ­ரின் கருத்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!