முன்னோடிகளின் கனவுகளையும் சவால்களையும் காட்டும் அரிய நினைவுப்பொருட்கள்

நகர மறுசீரமைப்பு ஆணையத்திற்கும் லாசெல் கலைப்பள்ளிக்கும் இடையிலான கூட்டு முயற்சியால் சிங்கப்பூரை வளர்த்த முன்னோடிகளின் கதைகள் 'ரீடிஸ்கவர் தெலுக் ஆயர்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் அங்கமாக, நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தைப் பற்றிய 'ஸ்டாரிஸ் ஆப் தி சீ' என்ற காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லிம்களிடையே இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடல்வழி பயணம் செய்தவர்கள், இங்கு பணியாற்றி அங்கிகாரம் கிடைத்தவர்கள் போன்றோரின் கதைகளை அரிய நினைவுப்பொருட்கள் வழியாக எடுத்துரைக்கும் காணொளி, இந்த முயற்சிக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

'கடலின் கதைகள்' என்ற அர்த்தம் கொண்டுள்ள 'ஸ்டாரிஸ் ஆப் தி சீ' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில் நாகூர் தர்கா இந்திய மரபுடைமை நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு கலைப்பொருட்கள் பற்றி விளக்கப்பட்டிருந்தன. வெற்றிலைப் பெட்டி, பானைகள், பயணப் பெட்டிகள் போன்ற சிறு பொருட்கள் முதல் கட்டிடங்கள் வரை காணொளியில் இடம்பெற்றன.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அபாயம் நிறைந்த கப்பல் பயணத்தை மேற்கொண்ட நம் மூதாதையர்களின் அனுபவங்களை நினைவுப் பொருட்களின் மூலம் பிறருக்கு இதுபோல எடுத்துக் காட்டுவது இதுவே முதல் முறை என்கிறார் நிலையத்தின் பொருளாளர் முகம்மது நசீம்.

"இந்தக் காணொளியில் இடம்பெற்ற படங்களும் புகைப்படங்களும் பார்ப்பவர்களுக்கு பழைய நினைவுகளைத் தூண்டும் விதமாக உள்ளன. அத்துடன் இந்தியர்கள் அல்லாத லசெல் மாணவர்கள் எங்களது வரலாற்றைப் பற்றிய ஓவியங்களை எங்களது உணர்வுகளையும் இந்திய ரசனையையும் புரிந்து வரைந்தது மிக நன்றகாக இருந்தது. சிங்கப்பூரின் பல இன சமூகத்தின் ஒற்றுமையை இது பிரதிபலிக்கிறது,"என்றார் திரு நசீம், 50.

இந்தக் காணொளிக்காக இந்திய சமூகம் மற்றும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்ட ஓவியக் கலைஞர் ஹேசல் லிம், இந்த அனுபவம் தமது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தார். "இக்காணொளியில் இடம் பெறும் வெற்றிலைப் பெட்டி, பயணப் பெட்டி போன்ற பொருட்கள் சாதாரணமானவை. ஆனால் அவவை ஒரு சமூகத்தின் ஆசைகள், கனவுகள், சிரமங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன," என்றார் 44 வயது திருவாட்டி லிம்.

சிங்கப்பூரின் ஆரம்பகால குடியேறிகள் அனுபவித்த போராட்டங்களை இளையர்கள் தெரிந்துகொள்வது மிக முக்கியம் என்றார் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் பொதுச்செயலாளர் திரு நசீர் கனி . "எந்தச் சமூகமாக இருந்தாலும் அது முன்னேறுவதற்கு கடின உழைப்பும் தியாக உணர்வும் தேவைப்படுகிறது.எப்படிப்பட்ட கடின சூழலையும் சகித்துக்கொள்ள தியாக மனப்பான்மை மிகவும் தேவைப்பட்டது. இதனை படங்களின்மூலம் காண்பிப்பது நல்ல வழி எனக் கருதுகிறேன்," என்று 61 வயது திரு கனி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!