துயர்துடைக்க சமூக தொண்டாற்றுகிறார்

பிஞ்சுக் குழந்தைகள் உலகிற்கு அறிமுகமாகும் மகிழ்ச்சிகரமான சூழலில் தாதியாகப் பணியாற்றுகிறார் திருமதி ஆட்ரி மாலினி பிராம்பே, 53. தாதியர் துறையில் இவர் 33 ஆண்டுகாலமாக நிலைத்திருக்க, இத்துறையின் மீது இவர் கொண்டிருக்கும் பேரார்வமே காரணம்.தமது நான்கு பிள்ளைகளில் யாராவது சுகாதாரத் துறையில் சேர வேண்டும் என்று மூத்த பல்மருத்துவ தாதியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றிய இவரது தாயார் விரும்பினார். அவரது ஆசைப்படிபே திருமதி ஆட்ரியின் தாதிமைப் பயணம் தொடங்கியது.

1970களில் காக்கி புக்கிட் கம்பத்துப் பகுதியில் வசித்தவாறு, தம்மிடம் யார் வந்து உதவி கேட்டாலும் உதவி புரியும் தன்னலமற்ற குணம் படைத்த தாயாரைப் பார்த்து வளர்ந்தவர் திருமதி ஆட்ரி. தாதிமைத் துறையைத் தேர்ந்து எடுத்ததில் ஆட்ரிக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தாதியாக இருந்தும் தம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஒரு துயரச் சம்பவம் இன்னும் இவரது மனதை உறுத்துகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், தமது சகோதரியின் மகனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அந்த 13 வயது இளையரை நேரில் சந்திக்க திருமதி ஆட்ரி மருத்துவமனைக்குச் சென்றபோது, “நான் அதிக நாட்கள் இருக்க மாட்டேன்” என அந்த இளையர் கூற, “நீ உடல் நலம் தேறி வருவாய்” என்று திருமதி ஆட்ரி அவருக்கு நம்பிக்கை அளித்தார்.

புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ‘கீமோதெரப்பி’ சிகிச்சைக்குப் பிறகு அந்த இளையர் இயற்கை எய்தினார். “நான் அதிகம் நேசித்த ஒருவர் மறைந்தது எனக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. தாதியாக இருந்தும் என்னால் இதைத் தடுக்க முடியவில்லையே என்ற கவலை மேலோங்கியது. ஆறுதல் கூற முடியாத அளவுக்கு எனது அக்கா மனம் உடைந்து போனார்,” என அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திருமதி ஆட்ரி.

அச்சம்பவம், வாழ்க்கை மீது திருமதி ஆட்ரி கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றியது. சமூகத்திற்குத் தம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என இவருக்குள் உத்வேகம் பிறந்தது. ஒரு சில ஆண்டுகள் கழித்து, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர் புற்றுநோயாளிகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக அன்பளிப்புப் பைகளை வழங்கும் முயற்சியில் திருமதி ஆட்ரி தமது சகோதரிக்கு உதவினார்.

2014ஆம் ஆண்டிலிருந்து செயின்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தின் தொண்டூழியர் குழுவினரோடு சேர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை ஆங்கில மொழியைக் கற்றுக்கொடுக்கவும் இவர் உதவினார். 2016ஆம் ஆண்டிலிருந்து ‘கிஃப்ட் ஆஃப் லவ்’ எனும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைப் பொழுதில் தேநீர் வாங்கி அங்கு வசிப்பவர்களுடன் உரையாடுவார். அதே ஆண்டு ஒரு வாரகாலம் இந்தியாவின் கேரள மாநிலத்திற்குச் சென்று அங்கு இருக்கும் சிறுவர் இல்லத்தில் தங்கி, நடவடிக்கைகளில் ஈடுபட்டு நன்கொடையும் அளித்துவிட்டு திருமதி ஆட்ரி சிங்கப்பூர் திரும்பினார்.

மேலும், செயின்ட் வின்சன்ட் பால் தேவாலயத்தின் தொண்டூழியர் குழுவுடன் சேர்ந்து தீவிலுள்ள வெவ்வேறு தாதிமை இல்லங்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை வழங்கும் முயற்சியிலும் இவரது ஈடுபாடு இருந்தது. தாம் பணியாற்றும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயாளிகளுக்கும் சிறுவர் புற்றுநோய் சங்கத்திற்கும் நிதி திரட்டும் முயற்சியிலும் இவர் மும்முரம் காட்டினார்.

பிறருக்குச் சேவையாற்றுவது இவரது வாழ்க்கைமுறையில் ஒன்றாகிவிட்டது. திருமதி ஆட்ரியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கடந்த ஆண்டின் சுகாதாரப் பராமரிப்பு மனிதாபிமான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சமூகத்தினருக்கு சேவையாற்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், தொண்டூழியர்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. “சமூகத்திற்குச் சேவையாற்ற பல வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எந்த நடவடிக்கையில் ஈடுபட விரும்புகிறீர்களோ அதனை மேற்கொள்ளுங்கள்,” என்கிறார் வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து வரும் திருமதி ஆட்ரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!