தமிழோடு பண்பாடும் பரப்பும் ‘தமிழ் வேட்டி’

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழரின் உலகளாவிய சிந்தனையையும் தமிழ்ப் பாரம்பரிய உடையான வேட்டியையும் ஒரே நேரத்தில் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் 29 வயது நித்திஷ் செந்தூர்.

பருத்தித் துணியினாலான இந்தத் ‘தமிழ் வேட்டிகள்’, தமிழ் நாட்டின் திருப்பூர் பகுதியில் கைத்தறியில் நெய்யப்படுகின்றன. இதில், உலகமயமாக்கல் பற்றி கனியன் பூங்குன்றனார் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய சங்கப்பாடல் வரிகளும் உயிர் எழுத்து வரிசையும் பச்சை, நீலம், சிவப்பு நிற கரைகளில் இடம்பெற்றிருக்கும். பொதுவான இந்த வரியும் தமிழ் எழுத்து வரிசையும் எல்லாராலும் ஏற்றக்கொள்ளக்கூடியவை என்ற திரு நித்திஷ், இவ்வேட்டிகளை இதுவரை 50க்கும் அதிகமானோர் வாங்கி ஜனவரி 6ஆம் தேதி இடம்பெற்ற உலக வேட்டி நாளிலும், பொங்கல் அன்றும் அணிந்து மகிழ்ந்ததாகக் கூறினார்.
சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் அதிக ஈடுபாடும் மேலும் மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் கொண்டிருக்கும் நித்திஷ், தமிழ்ச் செய்தித் துறையில் பணிபுரிந்தவர்.

தற்போது முதுகலைப் படிப்பிலும், வேலை தேடுவதிலும் ஈடுபட்டிருக்கும் நித்திஷ், இடைக்காலத்தில் தமிழ் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இணையம் வழி கைத்தறி தமிழ் வேட்டி விற்பனையை சென்ற ஜனவரி மாதம் தொடங்கினார்.

சேலை, நீர்க் குவளை, முகக்கவசம் என தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பல பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதைக் கண்ட அவர் இந்த வரிசையில் வேட்டிகளை பொங்கலுக்கு அறிமுகப்படுத்தினார். பலரும் தனிப்பட்ட வாசகங்கங்கள் பொறித்த வேட்டிகளை விரும்பிக் கேட்பதாகக் குறிப்பிட்ட நித்திஷ், தமிழ் மொழி மாதத்தில் இந்த வேட்டிகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்.

கொவிட் கிருமி பரவல் காரணமாக பொங்கல், தைப்பூசம், தமிழ் மொழி மாதம் போன்ற கொண்டாட்டங்களின் பிரம்மாண்டம் குறைந்திருந்தாலும் அவற்றின் சிறப்புகள் மங்காமல் உள்ளது என்ற நித்திஷ், கோவிலுக்குச் செல்லும்போதும் விழாக் காலங்களிலும் வேட்டி அணிவார்.
தமிழருக்குத் தனிப்பெருமை சேர்க்கும் பாரம்பரிய ஆடைகளை பலரும் பெருமையுடன் உடுத்தவேண்டும் என்பதே அவரது விருப்பம்.
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை, தப்லா இசை கருவி வடிவிலான ஊதுவத்தி தாங்கி என பிற பொருட்களையும் விற்று வருகிறார். முழுநேர வேலையில் ஈடுபடும்போது, இந்த இணைய வர்த்தகத்தை தனது அம்மாவிடம் தர முடிவு செய்திருக்கிறார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!