தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாடகம்

மனி­தர்­க­ளுக்கு அடிப்­ப­டை­யில் தேவைப்­படும் ஒன்று தூக்­கம். தூக்­க­மின்மை என்­பது சிங்­கப்­பூ­ரில் சர்­வ­சா­தா­ர­ண­மான ஒன்­றா­கி­விட்டது. பள்­ளிக்­குச் செல்­லும் பிள்­ளை­க­ளி­லி­ருந்து வயது முதிர்ந்­த­வர்­கள் வரை பல­ரும் போதிய தூக்­க­மின்றி உள்­ள­னர். போது­மான அளவு தூக்­கம் உடல் சீராக இயங்க உத­வு­கிறது. ஆனால், மின்­னி­லக்­கச் சாத­னங்­களின் பயன்­பாடு அதி­க­ரித்­துள்ள இன்­றைய அவ­சர உல­கில் போதிய உறக்­கம் இல்­லா­மல் பல நோய்­கள் ஏற்­படும் நிலை வந்­து­விட்­டது.

இந்நிலையில், தூக்­கத்­தின் அவ­சி­யத்தை பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த இந்த மாதம் 19ஆம் தேதி அனைத்­து­லக தூக்க தினம் அனு­ச­ரிக்­கப்­படு­கிறது. இவ்­வாண்­டின் தூக்க தினத்தை முன்­னிட்டு கண்­க­ளுக்கு விருந்­தாக, சிந்­த­னை­யைத் தூண்­டும் வித­மாக நடத்­தப்­ப­டு­கிறது ‘சிங்­கப்­பூர் இந்­திய திரைப்­பட, நாடக ஆர்­வ­லர்­கள்’ (சிட்ஃபி) அமைப்­பின் இரு­மொழி மேடை நாட­க­மான ‘துயில்’.

2019ஆம் ஆண்டு இந்த மேடை நாட­கப் படைப்பு லசால் கலைக் கல்­லூ­ரி­யில் அரங்­கேற்­றப்­பட்­டது. அப்­போது அதற்­குக் கிடைத்த நல்ல வர­வேற்­பைத் தொடர்ந்து இம்­மாதம் 19ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை பார்­வை­யா­ளர்­கள் வீட்­டி­லி­ருந்­த­வாறே இந்த மேடை நாட­கத்தை இணை­யம்­வழி கண்டு மகி­ழ­லாம்.

நமது தின­சரி வாழ்­வில் இடம்­பெ­றும் உண்மை சம்­ப­வங்­களை மிகை­யான கற்­ப­னை­யு­டன் கலந்து, தூக்­கத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்­றிய சிந்­த­னை­யைப் பார்­வை­யாளர்­க­ளி­டையே தூண்­டு­கிறது இந்த சுவா­ர­சி­ய­மான மேடை நாடகப் படைப்பு. மூன்­றாண்­டு­கால ஆய்வு, மருத்­து­வர்­கள், நோயா­ளி­கள், பொது­மக்­கள் ஆகி­யோர் சந்­தித்த உண்மை சம்­ப­வங்­கள் ஆகி­ய­வற்­றின் தொகுப்­பாக இந்த நாட­கம் அமை­கிறது.

சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, இந்­தியா, இங்­கி­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களில் உள்ள பார்­வை­யா­ளர்­களை எளி­தில் சென்­ற­டைய இந்த நாட­கத்தை இணை­யத்­தில் ஒளி­ப­ரப்­பு­கிறது சிட்ஃபி. மார்ச் 20ஆம் தேதி இடம்­பெறும் ‘துயில்’ நாடக அங்­கத்­திற்­குப் பிறகு உலக தூக்க அமைப்­பைச் சேர்ந்த மருத்­துவ நிபு­ணர் ஒரு­வ­ரு­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்று நடத்­தப்­படும்.

இந்­தி­யா­வி­லி­ருந்து ‘துயில்’ நாட­கத்­தைப் பார்ப்­ப­வர்­க­ளுக்கு இந்­திரா காந்தி தேசிய கலை மையத்­து­டன் ஒரு கலந்­து­ரை­யா­ட­லும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நாடக இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான திரு சலீம் ஹாதி தெரி­வித்­தார்.

நாட­கத்­திற்­கான நுழை­வுச்­சீட்டு­களை 20 தமிழ் முரசு வாச­கர்­களுக்கு இல­வ­ச­மாக வழங்­க­வுள்­ளது சிட்ஃபி. இதற்­குத் தகு­தி­பெற தூக்­கத்­தைப் பற்றி கவிதை, சிறு­கதை, கட்­டுரை அல்­லது பாடலை எழுதி tamilmurasu@sph.com.sg என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரிக்கு இம்­மா­தம் 15ஆம் தேதிக்­குள் அனுப்­ப­லாம். தேர்வு செய்­யப்­படும் 20 படைப்­பு­க­ளுக்கு ‘துயில்’ நாட­கத்­திற்­கான இல­வச நுழை­வுச்­சீட்டு­கள் வழங்­கப்­படும்.

நாட­கத்­திற்­கான நுழை­வுச்­சீட்டு­களை சிஸ்­டிக் இணை­யப்­பக்­கத்தில் பெற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!