எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளும் இந்திய முஸ்லிம் மகளிர்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

பாலின சமத்­து­வம் என்­ப­தற்­குப் பெண்­கள் தயா­ரா­க­வேண்­டும், ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பல­மாக இருக்­க­வேண்­டும். நமக்கு என்ன வேண்­டும் என்­பதை நாமே முடி­வு­செய்து அதை அடை­வ­தற்­கான வழி­களை ஆராய்ந்து சவால்­களை எதிர்­கொள்­ள­வேண்­டும். அனைத்­து­லக மக­ளிர் தினத்­தின் ஓர் அங்­க­மாக 'இந்­திய முஸ்­லிம் ஒருங்­கி­ணைப்பு' (IM Collective) எனும் இளை­யர் அமைப்பு இந்­திய முஸ்­லிம் பெண்­க­ளுக்­கான மக­ளிர் கருத்­த­ரங்கை இணை­யம் மூலம் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று நடத்­தியது.

அறி­வார்ந்த நக­ரம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கத்­தின் பொது, அனைத்­து­லக தொடர்­புப் பிரி­வின் துணை இயக்­கு­நர் திரு­மதி நஸ்ரத் ஹசான், கார்­கில் நிறு­வ­னத்­தின் அமைப்பு வளர்ச்சி வட்­டார ஆலோ­ச­கர் திரு­மதி மரி­யம் காலித், ஹுவா சோங் கல்­விக் கழ­கத்­தின் உயி­ரி­யல் விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி ‌‌ஷகிலா பானு ஆகிய மூவ­ரும் தங்­க­ளின் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து­கொண்­ட­னர்.

இந்­திய முஸ்­லிம் ஒருங்­கிணைப்பு அமைப்­பின் தலைவி திரு­மதி ஃபஹிமா ஃபர்ஹா நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னார். சமூ­கத்­திலும் வேலை­யி­டங்­க­ளி­லும் இந்­திய முஸ்­லிம் பெண்­கள் சந்­திக்­கும் சவால்­க­ளைப் பற்­றி­யும் எவ்­வாறு அவற்றை எதிர்­கொண்டு செயல்­படு­கின்­ற­னர் என்­பது பற்­றி­யும் பேச்­சா­ளர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் வரை இந்­திய முஸ்­லிம் குடும்­பங்­களில் படிப்பை முடித்த உடன் திரு­ம­ணம் செய்­து­கொள்ள வேண்­டும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது என்­றும் அத­னால் முடிந்­த­வரை படிப்­பைத் தொடர்ந்து பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்ட தமது தனிப்­பட்ட அனு­ப­வங்­க­ளைக் கூறி­னார் திரு­மதி நஸ்­ரத்.

தமது பெற்­றோர் கொடுத்த ஆத­ர­வு­தான் தாம் படித்து நல்ல வேலைக்­குச் சென்று செயல்­பட உந்­து­த­லாக இருந்­தது என்று கூறிய திரு­மதி நஸ்­ரத், திரு­ம­ணத்­திற்­குப் பின்­னர் அவ­ரது கண­வர் உறு­து­ணை­யாக இருந்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

ஆண்­கள் ஆதிக்­கம் அதி­கம் உள்ள தொழில்­து­றை­யான பொறி­யி­யல் துறை­யில் படிக்க விரும்­பிய திரு­மதி மரி­யம் அந்­தத் துறை­யில் காலடி எடுத்­து­வைக்­கவே பல சவால்­க­ளைக் கடந்­த­தா­கக் கூறி­னார்.

வீட்­டில் பெற்­றோ­ரைச் சமா­ளிப்­ப­து­டன் சமூ­கத்­தி­லும் சிலர் பெண்­கள் ஏன் அந்­தத் துறைக்­குச் செல்­ல­வேண்­டும் என்ற கேள்­வியை எழுப்­பி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

இந்­தி­யா­வின் பெங்­க­ளூ­ரில் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யைத் தேர்ந்­தெ­டுக்­கும் சம­யத்­தில், தமது தந்­தை­யி­டம் அவ­ரது நண்­பர் ஒரு­வர், "மகள் படிக்க விரும்­பி­ய­தைப் படிக்­க­வி­டுங்­கள்," என்று கூறி­யதைப் பகிர்ந்­து­கொண்­டார்.

அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட இந்­திய முஸ்­லிம் பெண் என்­ப­வர், சமூ­கம் முன்­வைக்­கும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்று நடப்­ப­வர் எனப் பொருள் ஆகாது. தமக்­குத் தெரி­வு­கள் பல இருந்து அவற்­றி­லி­ருந்து தேர்ந்­தெடுப்­ப­தற்­கான சுதந்­தி­ரம் இருக்­க­வேண்­டும் என்று கூறி­னார் திருமதி ‌‌ஷகிலா பானு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!