சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை அரங்கம்

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் நடை­பெற்று வரும் தமிழ் மொழி விழா 2021ன் ஓர் அங்­க­மாக, ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை) சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை 11 ஏப்­ரல் 2021 அன்று நகைச்­சுவை அரங்­கம் ஒன்றை இணை­யம் வழி­யாக மிகச் சிறப்­பாக நடத்­தி­யது.

'தமிழை நேசிப்­போம்! தமி­ழில் பேசு­வோம்!' எனும் பிர­தான நோக்­கத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு நடை­பெற்ற இந்­நி­கழ்ச்சி, சிங்­கப்­பூர் சீனப் பெண்­கள் பள்ளி மாணவி அனு­மிதா முரளி பாடிய தமிழ் வாழ்த்­துப் பாட­லு­டன் துவங்­கி­யது.

சங்­கத்­தின் தலை­வர், பட்­ட­யக் கணக்­காய்­வா­ளர் முனை­வர் மு. அ. காதர் வழங்­கிய தலை­மை­ ­உரை­யில், "தமிழ் மொழியை நம் விழிபோல காக்க வேண்­டும் என்­றும் கல்வி சார்ந்த சமூக நலப் பணி­களில் தொடர்ந்து ஈடு­பட்டு வரும் ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை), கடந்த 11 ஆண்­டு­களில் இது­வரை 103 நிகழ்ச்­சி­களை மிகச் சிறப்­பா­க நடத்தி முடித்து சாத­னைப் படைத்­தி­ருக்­கிறது" என்­றும் குறிப்­பிட்­டார். இளை­யர்­களை தமிழ் மொழி­யில் எழு­த­வும் பேச­வும் ஊக்­கு­விக்­கும் வகை­யில், நிகழ்ச்­சி­யின் "மாண­வர் அங்­கம்" பகு­தி­யில் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக மாண­வர் முஹம்­மது மாதிஹ், 'தமிழை நேசிப்­போம்' என்ற தலைப்­பில் உரையாற்­றி­னார்.

பொதுக்­கல்வி உயர்­நி­லை தேர்­வில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற மத்­ரஸா அல்­ஜு­னைட் அல்-இஸ்­லா­மியா மாண­வர் அஃபீப் முஹம்­மது ரையான் மற்­றும் மேல்­நி­லைத் தேர்­வில் சிறப்­புத் தேர்ச்­சிப் பெற்ற ரா­ஃபிள்ஸ் கல்வி நிலை­ய மாண­வரான நாகூர் கனி முஹம்­மது ஃபைஸ் ஆகி­யோ­ருக்கு பாராட்­டுச் சான்­றி­தழ் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர். வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு. மனோ­க­ரன் சுப்­பையா வழங்­கிய வாழ்த்­து­ரை­யில், முத­லில் தனக்­குள் உற்­சா­கம் வேண்­டும். அடுத்து, தமி­ழில் பேசு­வ­தற்­கான வாய்ப்பு இருக்­க­வேண்­டும். மூன்­றா­வ­தாக, தடு­மாறி பேசு­ப­வர்­க­ளுக்கு நண்­பர்­கள், ஆசி­ரி­யர்­கள் போன்­ற­வர்­கள் உற்­சா­கம் அளிக்­க­வேண்­டும். அடுத்­த­தாக, அவ்­வப்­போது ஆங்­கி­லம் கலந்து பேசும்­போது அதைக் குறை­கூ­றா­மல் ஊக்­கு­விக்க வேண்­டும். அவ்­வாறு செய்­தோ­மே­யா­னால் தமிழ்­மொழி வளர்ச்சி அதி­க­மாக இருக்­கும்," என்று தெரி­வித்­தார்.

முனை­வர் மு. அ. காதர் இயற்றி, இசை மணி பரசு கல்­யாண் இசை­ய­மைத்து 18 சிங்­கப்­பூர் வாழ் பாட­கர்­கள் முதன்­மு­றை­யாக இணைந்து பாடிய "தமிழை நேசிப்­போம்" பாட­லின் காணொளி இடம்­பெற்று நிகழ்ச்­சிக்கு சிறப்பு சேர்த்­தது.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து சிறப்­புப் பேச்­சா­ள­ராக இணை­யம் வழி பங்கேற்ற­தொலைக்­காட்­சிப் புகழ், பட்­டி­மன்றப் பேச்­சா­ளர், "நகைச்­சுவை நாவ­லர்" திரு. செ. மோகனசுந்­த­ரம், தமிழ்ச் சுவையும் நகைச்­சு­வை­யும் கலந்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார். சங்­கத்­தின் செய­லவை உறுப்­பி­னர் அப்­துல் சுப­ஹான் தமிழ் மணம் கமழ நிகழ்ச்­சி­யைத் தொகுத்து வழங்­கி­னார். தமிழ் மொழி விழா­வுக்கு "நகைச்­சுவை அரங்­கம்" மேலும் சிறப்பு வகையில் அமைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!