இன்சுவை அனுபவம் தந்த ‘சிங்கையில் நிலாச்சோறு’

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

சித்ரா பௌர்­ணமி கடந்த வாரம் மேகத்தை ஒளி­யூட்டி வைரம் போல காட்­சி­ய­ளித்­தது. அந்த நிலா வெளிச்­சத்­தைச் சிறப்­பித்து 'சிங்­கை­யில் நிலாச்­சோறு' என்ற நிகழ்ச்­சிக்கு லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் (லிஷா) பெண்­கள் பிரிவு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. கொவிட்-19 விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­தே­றிய இந்­நி­க­ழச்­சி­யில் பண்­டிகை உணர்­வுக்­குப் பஞ்­சம் இல்லை என்­று­தான் சொல்ல வேண்­டும்.

சாம்­பார் சாதம், சர்க்­க­ரைப் பொங்­கல், தயிர் சாதம், கத்­த­ரிக்­காய் கூட்டு, பகோடா என இனிப்பு முதல் காரம் வரை எல்லா வகை உண­வும் சமைக்­கப்­பட்டு விருந்­தினர்­க­ளுக்கு வாழை­யி­லை­யில் பரி­மா­றப்­பட்­டது. இம்­மா­தம் 27ஆம் தேதி சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் வெளிப்­புற உண­வ­கத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ் மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் தலை­வ­ரு­மான திரு விக்­ரம் நாயர் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"லிஷா பெண்­கள் பிரிவு நடத்­தும் நிகழ்ச்­சி­க­ளுக்கு வரும்­போது புதி­தாக ஒன்­றைக் கற்­றுக்­கொள்­கி­றேன். நிலாச்­சோறு பற்றி இதற்கு முன்பு நான் அறிந்­தி­ருக்­க­வில்லை. தெரிந்­து­கொள்ள இங்கு வாய்ப்பு கிடைத்­தது," என்­றார் திரு விக்­ரம். கடந்த ஆண்டு ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்­க­ரை­யில் கிரா­மத்து பாணி­யில் இந்த நிகழ்ச்­சியை நடத்த விரும்­பி­ய­தா­க­வும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ணத்­தால் முடி­ய­வில்லை என்­றும் கூறி­னார் லிஷா பெண்­கள் பிரிவு தலை­வர் ஜாய்ஸ் கிங்ஸ்லி.

இவ்­வாண்டு எப்­ப­டி­யா­வது நிலாச்­சோறு வைத்தே ஆக­வேண்­டும் என்று லிஷா பெண்­கள் குழு உறுப்­பி­னர்­கள் தீர்­மா­னித்­த­னர் என்­றும் அவர்­க­ளின் எண்­ணம் ஈடேறி­விட்­டது என்­றும் கூறி­னார் திரு­மதி ஜாய்ஸ்.

சுவை­யான உண­வு­டன் பொம்­ம­லாட்­டக் காணொளி அங்­க­மும் பாடல் வரி­க­ளைக் கண்­டு­பி­டித்து பாடும் போட்­டி­யும் விருந்­தி­னர்­களுக்கு இன்ப அனு­ப­வத்தை வழங்­கி­யது.

"நவீன நகர வாழ்­வி­லும் குடும்ப ஒற்­றுமை, பெற்­றோ­ருக்கு மரி­யாதை, சக மனி­தர்­க­ளு­டன் பழ­கும் முறை, அன்­பு­டன் உண­வைப் பரி­மா­றும் கலா­சா­ரம், ஆரோக்­கி­ய­மான உணவு சாப்­பி­டு­வது ஆகி­யவை நிலாச்­சோறு சாப்­பி­டு­வ­தில் புதைந்­துள்ள வாழ்க்­கைப் பாடங்­கள். இதைப் பொம்­ம­லாட்ட வடி­வில் படைத்­தோம்.

"அத்­து­டன் நாங்­களே சுய­மாக முயற்சி எடுத்து காணொ­ளி­யைத் தயா­ரிக்க முடிவு செய்­தோம். வந்­தி­ருந்­த­வர்­களும் அதை ரசித்­த­னர்," என்­றார் பொம்­ம­லாட்ட அங்­கத்­தில் பாட்டி கதா­பாத்­தி­ரத்­திற்­குப் பின்­னணிக் குரல் தந்த திரு­மதி புவனேஸ்­வரி மகேந்­தி­ரன், 53.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!