தென்னிந்திய உணவுவகைகளின் அரிய காட்சி விருந்து

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

பொது­வாக நமது இந்­திய உணவு­வகை­களை விரும்பி, ருசித்து உண்­போம். ஆனால், அவற்­றைக் கண்­க­ளுக்கு விருந்­த­ளிக்­கும் வகை­யில் 'மினி­யேச்­சர்' (miniature) காட்சி வடி­வ­மாக ரசிக்­க­வும் வைத்­துள்­ளார் 52 வயது திரு­மதி மீனாக்‌ஷி ராம்.

'பாலி­மர்' களி­மண் (polymer clay) கொண்டு இவ்­வாறு சிறிய வடி­வ­மாக படைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில் திறமை வாய்ந்­த­வர் திரு­மதி மீனாக்‌ஷி. 'மினி­யேச்­சர்' உணவு­க­ளோடு அவற்றுக்கு ஏற்ற பாத்­தி­ரங்­க­ளை­யும் வடி­வ­மைத்து வரு­கி­றார்.

நுணுக்­க­மான வேலைப்­பாடு­களைச் செதுக்­கும்­போது மிகுந்த கவ­னத்­து­டன் செய்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

தஞ்­சா­வூர் ஓவி­யங்­கள், சீன ஓவி­யங்­கள், 'எம்­பி­ராய்­டரி' (embroidery) போன்ற கலை வடி­வங்­களில் சுமார் 30 ஆண்டு அனு­ப­வம் இவ­ரி­டம் உண்டு.

'பாலி­மர்' களி­மண்­ணைப் பயன்­படுத்­து­வ­தில் 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் அனு­ப­வம் பெற்ற திரு­மதி மீனாக்‌ஷி, "வெவ்­வேறு கலை வடி­வங்­களில் ஆர்­வம் கொண்டு புது புது முறை­க­ளை­யும் பொருள்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி செய்து பார்ப்­பதே என் வழக்­கம். கொவிட்-19 கால­கட்­டத்­தில் பாலி­மர் களி­மண்­ணைப் பயன்­ப­டுத்தி என் முதல் படைப்பை உரு­வாக்­கி­னேன். அது வாழை இலை மேல் தென்­னிந்­திய உணவு­வகை­க­ளைச் சித்­தி­ரிப்­ப­தாக அமைந்­தது.

"என் குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் பாராட்­டி­யது எனக்கு ஊக்கம் அ­ளிப்­ப­தாக இருந்­தது. பாலி­மர் களி­மண் தொடர்­பில் மேலும் ஆராய்ந்து ஒன்­பது மாதங்­க­ளுக்­குப் பின் 30 அனைத்­து­லக உணவு­வ­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 500க்கும் மேற்­பட்ட படைப்­பு­களை வடி­வ­மைத்­தேன். இவை சென்ற ஆண்டு நவ­ராத்­திரி கொலு­வில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டன.

"வித்­தி­யா­ச­மான சுவை­யு­டைய உண­வு­வ­கை­கள், பல்­வேறு நாடு­களின் உண­வு­வ­கை­களை ஆராய்­வதை நானும் என் குடும்­ப­தி­ன­ரும் விரும்­பு­கி­றோம்.

"முக்­கி­ய­மாக இந்­திய உணவு எங்­கள் மன­தில் நீங்கா இடத்­தைப் பெற்­றுள்­ளது. ஒவ்­வொரு கலா­சாரத்­தி­லும் உணவு முக்­கிய பங்­காற்­று­கிறது என்­பதை நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். கடந்த ஆண்டு கொலு­விற்­காக 'மினி­யேச்­சர்' வடி­வத்­தில் அதை வெளிப்­ப­டுத்த விரும்­பி­னேன்," என்று பகிர்ந்­தார்.

ஒவ்­வொரு படைப்­புக்­கும் பின்­னால் பல படி­நி­லைகள், ஒவ்­வோர் உண­வி­லும் பல பொருட்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு, 'இறால் சம்­பால்' என்­றால் இறால், அரிசி, வெள்­ளரிக்­காய், முட்டை, வெங்­கா­யம், எலு­மிச்­சைத் துண்­டு­கள் ஆகி­யவை முத­லில் தனித்­தனி வடி­வ­மாக வண்­ணம் பூசப்­ப­டா­மல் திரு­மதி மீனா­க்ஷி கைவண்­ணத்­தில் உரு­வாக்­கப்­படும்.

ஒவ்­வொரு பொரு­ளும் விரும்­பிய நிறத்தை அடைய, 'பாலி­மர்' களி­மண்­ணில் வெவ்­வேறு நிறங்­களைத் தானே கையால் கலவை தயா­ரித்­துப் பயன்­ப­டுத்தி வரு­கிறார்.

தானி­யம், 'நூடல்', தக்­காளி விதை என உண­வுப் பொரு­ளின் ஒவ்­வோர் அங்­க­மும் கையால் செய்­யப்­பட்­டவை.

பிறகு, உண­வுப்­பொ­ருள் சரி­யான நிறத்தை அடை­வது, அதன் அமைப்பு, தோற்­றம் ஆகி­ய­வற்­றுக்­காக வெவ்­வேறு 'கியு­ரிங்' (curing) முறை­க­ளைப் பயன்­ப­டுத்தி ஒவ்­வொரு பொரு­ளை­யும் சுட்­டுத் (bake) தயார் செய்­கி­றார் அவர்.

அனைத்­துப் பொருட்­க­ளை­யும் ஒரு முழு­மை­யான மினி­யேச்­சர் உண­வாக இணைப்­பதே இறுதி நிலை ஆகும்.

இவை போன்ற 'மினி­யேச்­சர்' வடி­வங்­க­ளின் அடுத்த தொகுப்பை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார் திரு­மதி மீனாக்‌ஷி.

'Meena's Creations' என்­னும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் மக்­கள் ஆர்­வத்­தின் அடிப்­ப­டை­யில் பல்­வேறு 'மினி­யேச்­சர்' படைப்­பு­கள் விற்­ப­னைக்கு வர­லாம் என்­றார் திரு­மதி மீனாக்‌ஷி.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் இவர் உரு­வாக்­கி­யுள்ள 'மினி­யேச்­சர்' காட்சி விருந்தை இம்­மாத இறுதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!