குறைந்தது மக்கள் நடமாட்டம்; உத்தியை மாற்றும் வர்த்தகங்கள்

ஜனார்த்­த­னன் கிருஷ்­ண­சாமி

கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம்­ நடப்பில் இருந்தபோதும் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளின்போதும் உணவுக் கடைகள் உட்பட பல வர்த்தகங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்­டுப்­பா­டு­க­ளால் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தி­லுள்ள வர்த்­த­கம் சரா­ச­ரி­யாக 60 விழுக்­காடு குறைந்­தி­ருப்­ப­தாக லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மற்றும் மர­பு­டை­மைச் சங்­கத்­தின் (லிஷா) தலை­வர் சி. சங்­க­ர­நா­தன் தெரி­வித்­தார்.

"கடந்­தாண்டு அர­சாங்­கத்­து­டன் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக தொழிற்­சபை இணைந்து தந்த ஆதரவு காரணமாக லிட்டில் இந்தியாவில் உள்ள பெரும்­பா­லான கடை­கள் மின்­னி­லக்க முறையை கடைப்பிடித்துள்ளன," என்று அவர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

ஆயி­னும், கடந்­தாண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்டு ஊழி­யர்

பற்­றாக்­குறை வெகு­வாக அதி­

க­ரித்­து­விட்­ட­தை அவர் சுட்டினார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய மனிதவள இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லேங்கை லிஷா அமைப்­பி­னர் இவ்­வாண்டு பிப்­ர­வரி சந்­தித்­தா­கக் திரு சங்கரநாதன் கூறி­னார்.

"லிட்­டில் இந்­தி­யா­ கடைக் காரர்களிடையே நிலவும் அக்­க­றை­களை இந்­தச் சந்­திப்­பின்போது முன்­வைத்­தோம்," என்­றும் அவர் தெரிவித்தார்.

விநி­யோ­கம், மின்­னி­லக்­கம் சார்ந்த வியா­பார முறையை நடைமுறைப்படுத்த தள­வா­டம் உள்­ளிட்ட சில வர்த்­தகங்­கள் கடந்­தாண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்டு தயா­ராக உள்­ள­தாக தெரி விக்கப்பட்டது.

கடை­க­ளுக்கு விதிக்­கப்­

பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளா­லும் கொரோனா கிரு­மிப்­ ப­ர­வல் குறித்த பீதி­யா­லும் கடந்த இரண்டு வாரங்­களில் தமது வர்த்­த­கம் 50 விழுக்­காடு குறைந்­தி­ருப்­ப­தாக குடாச்­சாரி காய்­கறி உரி­மை­யா­ளர் சீதா­தேவி ரமேஷ், 42, தெரி­வித்­தார்.

"காய்­க­றி­களை வாங்க வாடிக்­கை­யா­ளர்­கள் நேரில் வர விரும்­பு­வதை நான் பார்க்­கி­றேன். எனவே, தற்­போது மின்­னி­லக்க முறை அதி­கம் பயன்­ப­டாது. ஆயி­னும், வாட்­ஸ்ப்அப், தொலை­பேசி வழி­யாக சில முன்­ப­தி­வு­களை ஏற்­கி­றோம்," என்று அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டின்போது சிறிய, நடுத்தர நிறுவன மையத்தின் உதவியுடன் ரசூல் மளிகைக் கடை இணையச் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.

தற்­போ­தைய சூழ­லில் கடைக்கு நேர­டி­யாக வரு­வோ­ரின் எண்­ணிக்கை 60 விழுக்­காடு குறைந்­தி­ருப்­ப­தா­கக் கூறிய கடை உரி­மை­யா­ளர் திரு­வாட்டி ஃபஜி­ரியா, 70, ஏற்­கெ­னவே உரு­வாக்­கப்­பட்ட மின்­சே­வை­க­ளால் இம்­முறை தடு­மாற்­றம் குறைந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இருந்­த­போ­தும், அர­சாங்­கம் என்­ன­தான் உத­வி­னா­லும் மின்னிலக்க முறையை பல வர்த்­த­கங்­கள் கடைப்­பி­டிக்க தொடங்­கி­யி­ருப்­ப­தால் போட்­டித்­தன்மை அதி­க­ரிக்­கும் என்­றும் அவர் கூறி­னார். மையத்­தின் உத­வி­யு­டன் மின்­வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­தி­யுள்ள மெர்லின் கோல்­டுஸ்­மித் நகைக்­கடை, தற்­போ­தைய சூழ­லில் இணை­யம் வழி­யான வர்த்­த­கத்தை நம்­பு­வ­தாக அதன் உரி­மை­யா­ளர் ஜேனிஸ் சின், 39, தெரி­வித்­தார்.

திரு­ம­ணங்­கள் போன்ற நிகழ்ச்சி ­க­ளுக்குப் புதி­தாக விதிக்­கப்­பட்­டுள்ள கடு­மை­யான கட்­டுப்­பா­டு­

க­ளால் பாரம்­ப­ரிய ஆடை வர்த்­த­கங்­க­ளுக்­கான தேவை­யும் குறைந்­துள்­ளன. கடந்­தாண்டு இணை­யம் வழி­யா­க­வும் கூடம் ஒன்­றின் மூல­மா­க­வும் வர்த்­த­கம் நடத்தி வந்த 'யஜ்­ன­சேனி' நிறு­வ­னம், இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதத்­தில் தனது கடை­யைத் திறந்­தது.

சூழ்­நிலை மேம்­படும் என்ற நம்­பிக்­கை­யில் கடை­யைத் தொடங்­கி­ய­தா­கக் கூறிய அதன் உரி­மை­யா­ளர் வித்­தியா பிள்ளை, 30, மீண்­டும் அதி­க­ரித்து வரும் கிரு­மிப் பர­வ­லால் ஏமாற்­றம் அடைந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

இத்­த­கைய சூழ­லில் இணை­யம் மூலம் வர்த்­த­கத்­தைத் தொடர்ந்து நடத்தி அதற்­குத் தேவை­யான மின்­னி­லக்­கத் திறன்­களை மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

கடை­யில் வாடிக்­கை­யா­ளர்­

க­ளின் வருகை வெகு­வா­கக் குறைந்­துள்ள நிலை­யில் அவர்­களை ஈர்க்­கும் முயற்­சி­களை இணை­யம் மூலம் முழு­மூச்­சா­கச் செயல்­ப­டுத்­தப்­போ­வ­தாக 'பொட்­டுக்­கார மாமி' கடை­யின் நிறு­வ­னர் திரு­வாட்டி ஷ்ருதி சூரியா, 31, தெரி­வித்­தார்.

"வெளிப்­பு­றங்­களில் மக்­கள் நட­மாட்­டத்­தைக் குறைக்க மீண்­டும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று நாங்­கள் எதிர்­பார்த்­தோம். எனவே அத்­த­கைய சூழ­லைச் சமா­ளிக்க தேவை­யான ஏற்­பா­டு­களை நாங்­கள் முன்­கூட்­டியே செய்து ­விட்­டோம்," என்று கூறிய ஷ்ருதி, வெள்­ளம் வரு­முன் அணை கட்­டு­வது சாலச் சிறந்­தது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!