சமூக உணர்வுடன் சேவையாற்றும் தொண்டூழியர்கள்

இந்து இளங்­கோ­வன்

சிங்­கப்­பூ­ரில் கைச் சுத்­தி­க­ரிப்­பானை விநி­யோ­கிக்­கும் இயந்­தி­ரங்­கள் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் ஏப்­ரல் 25ஆம் தேதி வரை பயன்படுத்தப்பட்டன.

தீவெங்­கும் உள்ள 108 சமூக மன்­றங்­க­ளி­லும் நிலை­யங்­க­ளி­லும் இருந்த தானி­யங்கி இயந்­தி­ரங்­களில் வைக்கப்பட்டிருந்த கை

சுத்­தி­க­ரிப்­பா­னைப் பெற்­றுக்­கொள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளது சொந்த போத்­தல்­களை எடுத்­துச்­சென்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான இந்­தப் போராட்­டத்­தில் பொது­மக்­க­ளுக்கு உதவ நிறைய தொண்­டூ­ழி­யர்­கள் முன்­வந்­த­னர். அவர்­களில் செர்ட்­டிஸ் சிஸ்­கோ­வில் துணை போலிஸ் அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­யும் 42 வயது குமாரி விஜ­ய­லெட்­சுமி கிருஷ்­ண­னும் ஒரு­வர்.

அல்­ஜு­னிட் சமூக மன்­றத்­தில் தொண்­டூ­ழி­ய­ராக சேவை புரிந்த இவர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் உரை­யாடி அவர்­க­ளது தேவை­க­ளைப் புரிந்­துக்­கொண்டு அவர்­க­ளுக்கு உத­வு­வ­தில் நிறைய ஈடு­பாடு காட்டினார்.

கைச் சுத்­தி­க­ரிப்­பானை விநி­யோ­கிக்க உத­வு­வது, போத்­தல்­கள் சுத்­த­மாக இருப்­பதை உறு­தி­செய்­வது, குடி­யி­ருப்­பா­ளர்களுக்கு கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்ய உத­வு­வது ஆகி­ய­ பணிகளை அவர் கவனித்துக்கொண்டார்.

"அர­சாங்­கத்­தின் புதிய திட்­டங்­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தற்­கும் அவற்றை பயன்­ப­டுத்­துவதிலும் பொது­வாக முதி­யோர்­கள்

சிர­மப்­ப­டு­வ­துண்டு.

"அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி ­யுள்ள நட­வ­டிக்­கை­க­ள் பற்­றி­யும் கைச் சுத்­தி­க­ரிப்­பானை விநி­யோ­கிக்­கும் தானி­யங்கி இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்­தும் முறை பற்­றி­யும் நானும் எனது சக தொண்­டூ­ழி­யர்­களும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தெளி­வாக விளக்கி புரி­ய­வைத்­தோம். என்­னால் முடிந்த வகை­யில் இந்த கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது மக்­க­ளுக்கு உத­வ­மு­டிந்­தது எனக்கு மகிழ்ச்சி அளிக்­கிறது." என்­றார் தொண்­டூ­ழி­யர் விஜ­ய­லெட்­சுமி.

இவரை போன்றே கை சுத்­தி­

க­ரிப்­பான் விநி­யோகத் திட்­டத்­தில் பங்­கேற்ற பல தொண்­டூ­ழி­யர்­களில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்­ஸில் இன்­ஃப்­லைட் மேலா­ள­ராக பணி­பு­ரி­யும் திரு பிரித்­வி­ராஜ் நாயுடு­வும் ஒரு­வர்.

கைச் சுத்­தி­க­ரிப்­பான் விநி­யோக இயந்­தி­ரங்­கள் சரி­யான நிலை­யில் இருப்­பதை உறு­தி­செய்­வது, தேவைப்­படும் அள­விற்கு போது­மான கைச் சுத்­தி­க­ரிப்­பான், சமூக மன்­றங்­களில் உள்­ள­னவா என்­பதை சரிபார்ப்­பது, சக தொண்­டூ­ழி­யர்­க­ளின் நலனை கவ­னித்­துக்­கொள்­வது ஆகிய வற்றில் திரு பிரித்விராஜ் கவனம் செலுத்தினார்.

"இந்த சவால்­மிக்க கால­கட்­டத்­தில் யாரும் தனி­யாக இல்லை, நாம் அனை­வ­ரும் ஒன்­றா­கச் சேர்ந்து கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை எதிர்த்துப் போரா­டு­கி­றோம் என்­பதை இந்த முயற்சி உணர்த்­து­கிறது," என்­றார் திரு பிரித்­வி­ராஜ்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உதவ பல தொண்­டூ­ழி­யர்­கள் முன்­

வந்­துள்­ள­தா­க­வும் அவர்­க­ளுக்­

கி­டையே நட்பு மலர்ந்­தி­ருப்­ப­தா­க­வும் திரு பிரித்­வி­ராஜ் தெரி­வித்­தார். குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளது நன்­றி­களை தெரி­விக்­கும் வகை­யில் தமக்­கும் தனது சக தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கும் அவ்­வப்­போது பழங்­கள், கேக் போன்­ற­வற்றை தந்­ததாக அவர் நெகிழ்ச்சியுடன் ­கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!