கொவிட்-19 சூழலில் மாறிய தமிழ்க் கல்வி

இந்து இளங்­கோ­வன்

கடந்த ஓராண்டு கால கொவிட்-19 சூழல் தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் பல சவால்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக, இணை­யம் வழி பாடங்­க­ளால், தமிழ் ஆசி­ரி­யர்­கள் அவர்­க­ளின் பணியை திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளும் முறையே மாறி­யுள்­ள­தாக தமிழ் முர­சி­டம் கூறி­னார் சிங்­கப்­பூர்த் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வர் திரு தன­பால் குமார்.

"கற்­றல் கற்­பித்­த­லில் கொவிட்-19 சூழல் மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது. வகுப்­பறை கற்­றல் கற்­பித்­த­லி­லி­ருந்து இணைய வழி வகுப்­பு­கள், இணைய வழி பாடங்­கள் என்று கற்­றல் கற்­பித்­தல் புதிய பரி­மா­ணம் கண்­டுள்­ளது.

இனி இதுவே முதன்­மை­யான கற்­றல் கற்­பித்­தல் முறை­யா­க­வும் அமை­யக்­கூ­டும்," என்று தமது கணிப்பை அவர் பகிர்ந்து கொண்­டார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் தமிழ் ஆசி­ரி­யர்­க­ளின் பணிச்­சுமை பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறி­னார் தன­பால் குமார்.

"புதிய உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொண்டு தங்­க­ளைத் தாங்­களே மேம்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய சூழல் ஒரு­பு­றம். வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லவோ அல்­லது வெளி­நா­டு­களில் வசிக்­கும் உற்­றார் உற­வி­னர்­க­ளைச் சென்று சந்­திக்­கவோ இய­லாத சூழல் மற்­றொரு புறம். மன­த­ள­வில் ஆசி­ரி­யர்­கள் சோர்ந்­தி­ருக்­கி­றார்­கள்."

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி கற்­றல் கற்­பித்­தல், ஆசி­ரி­யர்­க­ளின் முனைப்­பால் இணைய வழிக் கல்­விக்கு சிறந்த முறை­யில் மாறி­யுள்­ளது என்ற தன­பால் குமார், அதில் இருக்­கும் சவால்­க­ளை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.

"குறிப்­பாக, உள்­ளூர் சூழ­லுக்கு பொருத்­த­மான கற்­றல் கற்­பித்­தல் வளங்­களை உரு­வாக்­கு­வது.

"அடுத்­த­தாக, மாண­வர்­க­ளின் மொழித்­தி­றனை மேம்­ப­டுத்­தும் பயிற்­சி­களை உரு­வாக்­கு­வது. சமூக அள­வில் மொழிப் புழக்­கத்­திற்­கான வாய்ப்­பு­கள் குறை­வாக இருக்­கும் பன்­மொ­ழிச் சூழ­லில் கேட்­டல், பேசு­தல், உரை­யா­டு­தல், எழு­து­தல் என்று அத்­துணை மொழித்­தி­றன்­க­ளை­யும் இணை­ய­வ­ழிக் கல்வி மூலம் கொண்டு செல்­வ­தும் மிகப் பெரிய சவால்­தான். அதற்கு ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆத­ர­வும் வழி­காட்­டு­த­லும் மிக அவ­சி­யம்."

அதன் தொடர்­பில் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் இணைய வழிக் கல்­விக்­கான பயி­ல­ரங்­கு­க­ளை­யும் பட்­ட­றை­க­ளை­யும் கொவிட்-19 கிரு­மிச் சூழல் தொடங்­கி­யது முதல் ஆசி­ரி­யர்­க­ளுக்­காக நடத்தி வரு­வதை அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், கல்வி அமைச்­சும், சிங்­கப்­பூர் ஆசி­ரி­யர் கழ­க­மும் அதன் தொடர்­பில் பல்­வேறு பயிற்­சி­கள், பல்­வகை ஆத­ரவை வழங்கி வரு­கின்­றன.

அது­மட்­டு­மல்ல, தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­குத் தேவை­யான கற்­றல் கற்­பித்­தல் வளங்­க­ளை­யும் வழங்க சங்­கம் தொடர்ந்து உதவி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இங்­குள்ள தமிழ் ஆசி­ரி­யர்­க­ளைப் பிர­தி­நி­திப்­ப­தற்­காக சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் 1951ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்­கப்­பட்­டது.

தொழிற்­சங்­கம், சமூ­கத்­தை­யும் மொழி­யை­யும் சார்ந்த சங்­கம் என பல்­வேறு தளங்­களில் அது தற்­ப­போது இயங்கி வரு­கிறது.

தொடக்க காலத்­தில் தமிழ் மொழி மேம்­பாட்­டிற்கு குரல் கொடுத்து, தமிழ் சார்ந்த கட்­ட­மைப்பு மாற்­றங்­களை முன்­னெ­டுத்த இச்­சங்­கம், பின்­னர் தமிழ் ஆசி­ரி­யர்­க­ளின் திறன் மேம்­பாடு, மாண­வர் மேம்­பாடு, கற்­றல் கற்­பித்­தல் மேம்­பாடு, சிறந்த கல்வி கொள்­கை­கள், சமூக அள­வில் தமிழ் மொழி வளர்ச்சி போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­து­கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் திரு தன­பால் குமார் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வ­ராக பொறுப்­பேற்­றார்.

கடந்த ஓராண்டு கால­மாக ஆசி­ரி­யர்­க­ளின் எதிர்­பார்ப்பு, சங்­கத்­தின் கவ­னத்­துக்கு உரிய அம்­சங்­கள் பற்றி அவர் விவ­ரித்­தார்.

"தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் பணி மேம்­பாட்­டை­யும் சுய மேம்­பாட்­டை­யும் ஊக்­கு­விக்­கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதே எங்­கள் மிக முக்­கிய பணி­யாக உள்­ளது. அவர்­க­ளுக்கு ஆத­ர­வும் ஊக்­க­மும் தரும்­வ­கை­யில் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளைச் சங்­கம் முன்­னின்று நடத்தி வந்­துள்­ளது."

இங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமிழ்ப் பட்­டக்­கல்வி உரு­வாக வழி செய்­த­தில் சங்­கம் பங்­காற்­றி­யது. அது ஆசி­ரி­யர்­க­ளுக்கு பலன் அளித்­துள்­ளது என்­றது சங்­கம்.

கடந்த 5 வரு­டங்­களில் பல தமிழ் ஆசி­ரி­யர்­கள் துணை இயக்­கு­நர்­க­ளா­க­வும் இணை இயக்­கு­நர்­க­ளா­க­வும் பத­வி­க­ளைப் பெறு­வ­தில் சங்­கம் பங்­காற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

உதா­ர­ணத்­துக்கு ஆசி­ரி­யர்­க­ளுக்­காக பணி மேம்­பாட்டு பயி­ல­ரங்­கு­கள், இணைய வழிக் கல்வி, கற்­றல் கற்­பித்­தல் ஆகி­ய­வற்­றில் புதிய உத்­தி­மு­றை­கள் பற்­றிய பல்­வேறு பயி­ல­ரங்­கு­க­ளைத் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் கடந்த ஆண்டு முதல் இணை­யம் வழி நடத்­தி­யது.

இருப்­பி­னும், கொவிட்-19 சூழ­லால் சங்­கத்­தால் திட்­டப்­படி சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­ய­வில்லை.

கடந்த ஆண்டு, மொரி­ஷி­யஸ் நாட்­டில் நடப்­ப­தாக இருந்­தத உல­கத் தமி­ழா­சி­ரி­யர் மாநாடு தடை­பட்­டது. அதற்கு மாற்று ஏற்­பா­டு­கள் பற்றி சங்­கம் யோசித்து வரு­கி­றோம். அதே போல ஆசி­ரி­யர்­க­ளுக்­காக திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் மாற்றி அமைக்­கப்­பட்­ட­தாக தமிழ் ஆசி­ரி­யர் சங்­கம் கூறி­யது.

தமிழ் கற்­றல் கற்­பித்­தல் எத்­த­கைய மாற்­றத்தை எதிர்­கொண்­டுள்­ளத மாண­வர்­கள், பெற்­றோ­ருக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் வழி­காட்­டுவ திலும் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கம் பங்­காற்­று­கிறது. ஆனால் அதில் சவால்­கள் கூடி­யுள்­ளன.

"சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி கற்­றல் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கிறது என்­ப­து­தான் நிதர்­ச­னம்.

மாறி வரும் மொழிச்­சூ­ழல், குடும்­பங்­களில் தமிழ் பேசாத நிலை அவற்­றில் சில.

"தமிழ் நமது அடை­யா­ளம். நமது உரி­மைக்­கான வேர், நமக்­கான பாது­காப்பு என்ற உணர்வு சமூ­கத்­தில் எழ வேண்­டும். தமிழை வகுப்­பறை மொழி­யாக அல்­லா­மல் சமூ­கத்­தின் மொழி­யாக உரு­வாக்க வேண்­டும். அது­தான் சிங்­கப்­பூ­ரில் தமிழை வாழும் மொழி­யாக நிலைத்­தி­ருக்க உத­வும். அவ்­வ­கை­யில் சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் தொடர்ந்து சமூ­கத்­தோடு இணைந்து செய­லாற்றி வரு­கிறது." என்ற திரு தன­பால் குமார், அந்த வழி­க­ளைப் பற்றி எடுத்­து­ரைத்­தார்.

மாண­வர்­க­ளின் வாசிப்பை மேம்­ப­டுத்த சுட்டி மயில் என்ற மாத இத­ழைப் பள்­ளி­க­ளுக்கு சங்­கம் அனுப்­பு­கிறது. ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பயி­ல­ரங்­கு­களை நடத்­து­வது, சமூக அமைப்­பு­க­ளோடு இணைந்து செய­லாற்­று­வது போன்ற வழி­களில் பெற்­றோர் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்த சங்­கம் முனை­கிறது என்­றார் திரு தன­பால் குமார்.

அவ­ருக்கு முன், 12 வரு­டங்­க­ளா­கத் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வ­ராக செய­லாற்­றிய திரு சாமிக்­கண்ணு, தமிழ் புழக்­கத்தை நிலைக்க வைப்­ப­தில் பெற்­றோ­ரின் பங்கு முக்­கி­யம் என்று வலி­யு­றுத்­தி­னார்.

"பாடங்­களை எவ்­வ­ளவு சுவா­ரஸ்­ய­மாக்­கி­னா­லும், பல விதங்­களில் மாண­வர்­க­ளுக்கு பாடத்தை கற்­றுக்­கொ­டுத்­தா­லும் தமிழ் மொழி புழக்­கம் குறைந்­து­கொண்டே வரு­வது கவலை அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

இன்­றைய பெற்­றோர்­களும் ஆசி­ரி­யர்­களும் தமிழ் மொழி கற்­ற­லுக்கு வகுப்­ப­றையை மட்­டுமே நம்பி இருந்­து­வி­டு­கின்­ற­னர். இத­னா­லேயே பல மாண­வர்­கள் தமி­ழில் பேச முடி­யா­மல் சிர­மம் கொள்­கி­றார்­கள். இது ஆசி­ரி­யர்­க­ளின் பணியை அதி­க­ளவு சிர­ம­மாக்­கு­கிறது. இதை பற்­றிய விழிப்­பு­ணர்ச்சி ஏற்­ப­டுத்­த­வேண்­டும், என்று திரு சாமிக்­கண்ணு, திரு தன­பால் குமார் இரு­வ­ரும் கருத்­து­ரைத்­த­னர்.

"இது தமிழ் மொழி மட்­டும் அல்ல. எல்லா தாய் மொழி கற்­பித்­தல் குழுக்­களும் சந்­திக்­கும் சவா­லா­கும். அதி­க­ரித்து வரும் ஆங்­கில பயன்­பாடு, கலப்பு திரு­ம­ணங்­கள் என இதற்கு பல கார­ணங்­கள் உண்டு. தமிழ் உணர்வை ஊட்­டு­வ­தில் வகுப்­ப­றையை மட்­டும் நம்­பி­யி­ருக்­கா­மல் வீட்­டி­லி­ருந்தே தொடங்­கச் சமூக அமைப்­பு­கள் முயற்­சி­களை முன்­னெ­டுக்க வேண்­டும்." என்­றார் திரு சாமிக்­கண்ணு.

ஈசூன் இன்­னோவா தொடக்­கக் கல்­லூரி அண்­மை­யில் நடத்­திய கருத்­த­ரங்கு ஒன்­றில் தமிழ் இலக்­கி­யங்­கள் பற்­றிய இளை­யர்­க­ளின் கருத்தை அறிய நடத்­தப்­பட்ட கருத்­தாய்வு ஒன்­றின் முடி­வு­கள் பகி­ரப் பட்­டது. ஆய்­வில் கலந்­து­கொண்ட பலர், தங்­களை ஈர்க்­கும் விதத்­தில் இலக்­கிய கலை நிகழ்ச்­சி­களில் தங்­க­ளது பங்­கேற்பை அதி­க­ரிக்­க­லாம் என்று கூறப்­பட்­டது.

குறிப்­பாக பாட வகுப்­பு­களில் தமிழ் இலக்­கி­யத்தை கற்­றுத்­த­ரும் விதத்­தில் மாற்­றம் தேவை என்­பதை இந்த ஆய்வு காட்­டி­யது. இப்­படி இளை­யர்­க­ளுக்கு பிடித்த விதத்­தில் அவர்­களை ஈர்க்­கும் விதத்­தில் கற்­றல் அமைந்­தால் பாடத்­தின் மீதும் ஆர்­வம் அதி­க­ரிக்­க­லாம் என்று மாண­வர்­கள் கரு­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!