வழிகாட்டிக்கு விருது

கல்­லீ­ரல், கணைய புற்­று­நோய்­கள், இதய உயிர்­காப்புத் தொழில்­நுட்­பங்­கள், சுகா­தார நெறி­மு­றை­கள் போன்ற மருத்­துவ நுணுக்­கங்­கள் பற்றிய விழிப்­பு­ணர்வை பொது மக்­க­ளுக்­கும் மருத்­து­வத் துறை­யி­ன­ருக்­கும் ஏற்படுத்தி வரு­கி­றார் டாக்­டர் ‌ஷெலாட் வி‌‌‌ஷால்­கு­மார் கிரி­‌ஷ்­சந்­திரா.

2021ம் ஆண்­டின் லீ குவான் யூ கல்வி உத­வி­நி­தியை பெற்­ற­வர்­களில் அவ­ரும் ஒரு­வர். முன்­னாள் பிர­த­மர் லீ குவான் இயூ­வின் நினை­வாக தஞ்­சோங் பகார் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு 'லீ குவான் யூ' கல்வி உத­வி­நி­தியை 1991ல் தொடங்­கி­யது.

முன்­னனி மருத்துவ நிபு­ண­ராக பணி­பு­ரி­யும் திரு வி‌‌‌ஷால், டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­ அறுவை சிகிச்சை துறை­யின் மூத்த ஆலோ­ச­க­ரா­க­வும் அறுவை சிகிச்சை அறி­வி­யல் பயிற்சி மையத்­தின் இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்­று­கி­றார். இந்­தி­யா­வில் மருத்­துவ பட்­டத்தை பெற்ற இவர், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மேற் படிப்­பைத் தொடர்ந்­தார்.

தொழில் சார்ந்த அறிவை சக சுகா­தார வல்­லு­நர்­க­ளு­டன் பகிர்ந்து கொள்­வ­தன் மூலம் சமூ­கத்­திற்கு பங்­க­ளித்து வரு­கி­றார் டாக்­டர் வி‌‌‌ஷால். கல்­லீ­ரல், கணை­யப் புற்று­ நோய்­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த நான்கு ஆண்­டு­க­ளாக டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் பொதுக் கருத்­த­ரங்­கு­களை இவர் நடத்தி வரு­கி­றார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில்­ இவர் தொண்டூ­ழி­யராகவும் உள்ளார். மருத்­துவ மாண­வர்­க­ளுக்கு சிறந்த முறை­யில் அத்­துறை நுணுக்­கங்­க­ளைக் கற்­பித்த இவ­ருக்கு, 2019ல் மூத்த மருத்­து­வர்­க­ளுக்­கான தேசிய சுகா­தாரக் குழும கற்­பித்­தல் விருது வழங்­கப்­பட்­டது.

சுகா­தார நெறி­மு­றை­களில் தனது மேற்­ப­டிப்பை தொடர விரும்­பும் டாக்­டர் வி‌‌‌ஷால், "நெறி­மு­றை­களில் உள்ள பல­வித அம்­சங்­கள் இன்­றைய காலகட்­டத்­திற்கு மிக­வும் பொருத்­த­மா­னவை. அடுத்த தலை­முறை மருத்­து­வர்­க­ளுக்­கு வழி­காட்­ட­வும் நோயா­ளி­க­ளுக்கு தகுந்­த­வாறு சிகிச்சை அளிக்­க­வும் இந்த மேற்­ப­டிப்பு எனக்கு உத­வும் என நம்­பு­கி­றேன்," என்­றார்.

செய்தி: ஆர்த்தி சிவராஜன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!