வாரண்ட் அதிகாரி மகளுக்கு தூணாக இருக்கும் தந்தை

இந்து இளங்­கோ­வன்

ராணு­வத்­தில் பொது­வாக பதவி உயர்வு விழாக்­க­ளுக்கு, வீரர்­கள் தங்­க­ளின் வாழ்க்­கைத்­து­ணையை அழைத்து வரு­வது வழக்­கம். ஆனால் மூன்­றாம் வாரண்ட் அதி­காரி மெரி­லின் டேவிட், 38, புது­மை­யாக 2017ஆம் ஆண்டு பாசிர் லேபா முகா­மில் நடந்த தமது பதவி உயர்வு விழா­விற்­குத் தந்தை பிலிப் டேவிட்டை அழைத்­துச் சென்­றார்.

தமது 18வது வய­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யில் சேர விரும்­பி­னார் மெரி­லின். ஆனால் தாயா­ரின் ஒப்­பு­தல் கிடைக்­க­வில்லை. குடும்­பப் பொறுப்­பு­க­ளு­டைய ஓர் இந்­தி­யப் பெண், இது­போன்ற வேலைச் சுமை­யை­யும் சமா­ளிப்­பது கடி­னம் என்­றார் மெரி­லி­னின் தாய். ஆனால், மெரி­லி­னின் ராணு­வப் பய­ணம் முழு­வ­தும் கூடவே நின்று இன்­று­வரை ஆத­ரவு அளித்து வரு­கி­றார் அவ­ரது தந்தை பிலிப்.

ஓர் ஆண் பிள்­ளைக்கு இருக்­கும் அதே வலிமை, ஆற்­றல் ஆகி­யவை பெண் பிள்­ளைக்­கும் உள்­ளது என்று நம்­பிய தந்தை பிலிப், மெரி­லின் எந்த முடிவு எடுத்­தா­லும் அது சரி­யா­கத்­தான் இருக்­கும் என்று மகள் மீது அதிக நம்­பிக்கை வைத்­தி­ருப்­ப­வர்.

மெரி­லின், 18 வய­தில் அடிப்­படை ராணு­வப் பயிற்­சி­யின்­போது தந்­தை­யு­டன் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு, "என்­னால் முடி­யாது. நான் ராணு­வத்­தி­லி­ருந்து வெளி­யேற விரும்­பு­கி­றேன். என்னை அழைத்து செல்­லுங்­கள்," என்று கூறி­னார்.

ஏன், எதற்கு என்று கேட்­கா­மல் திரு பிலிப், "இன்­னும் சில நாட்­களில் பயிற்சி முடிந்­து­வி­டும். உன்­னால் முடி­யும்," என்று தைரி­யம் ஊட்­டி­யதை நினை­வு­கூர்ந்­தார் மெர்­லின். 2003ல் மெரி­லி­னின் தாயார் கால­மா­னார்.

பிள்­ளை­க­ளுக்­குக் குறை ஏதும் வைக்க விரும்­பாத திரு பிலிப், ஒரு தந்­தை­யாக மட்­டும் அல்­லா­மல் ஒரு தாயா­க­வும் இருந்து வரு­கி­றார். 2013ஆம் ஆண்­டில் தம் மக­னின் இறப்­பிற்­குப் பிறகு மனச் சோர்­வால் திரு பிலிப்­பிற்கு உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து இன்­று­வரை தம்­மு­டைய மகள், மக­ளின் கண­வர், பேரப்­பிள்­ளை­க­ளு­டன் ஒரே வீட்­டில் இருந்து வரு­கி­றார்.

திரு­மதி மெரிலி­னுக்­குத் திரு­ம­ண­மான பிற­கும் தந்தை பிலிப்­பு­டன் தமது இன்­ப­துன்­பங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு வரு­கி­றார். ஒரு தாயாக திரு­மதி மெரி­லின் தம் பதின்ம வயது மகனை வளர்ப்­ப­தில் நிறைய சவால்­களை சந்­திக்­கும் போதெல்­லாம், திரு பிலிப் பிள்ளை வளர்ப்பு தொடர்­பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தா­கக் கூறி­னார் மெரி­லின்.

"அவரை நன்­றாக கவ­னித்­துக்­கொள்­ள­லாம் என்ற நோக்­கத்­தில்­தான் எங்­க­ளு­டன் தங்­கு­மாறு அவரை வற்­பு­றுத்­தி­னோம். ஆனால் இப்­போது அவர்­தான் எங்­க­ளைப் பார்த்­துக்­கொள்­கி­றார்.

"என் பிள்­ளை­கள் பள்ளி முடிந்து வீட்­டிற்கு வந்­த­தும் பார்க்­கும் முதல் நபர் என் அப்பா. அவர்­களை அன்­பு­டன் பார்த்­துக்­கொள்­கி­றார். எனக்­கும் என் கண­வ­ருக்­கும் எத்­த­கைய பிரச்­சினை வந்­தா­லும் அறி­வுரை கூறி சமா­தா­னப்­ப­டுத்­து­வார்," என்­றார் திரு­மதி மெரி­லின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!