பிள்ளை வளர்ப்பில் இன்பம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு விக்­ரம் நாயர், சிறு­வனாக இருந்­த­போது, வெளி­நாட்­டில் முனை­வர் படிப்பை மேற்கொள்ள விருப்­பப்­பட்­டார் அவரின் தாயார் திரு­மதி எலி­ச­பத் நாயர்.

அதற்குச் சம்மதித்ததுடன் திரு விக்­ர­ம், அவ­ரின் இளைய சகோ­த­ர­ர் இருவரையும் அந்த இடைப்பட்ட ­கா­லத்­தில் பார்த்­துக்­கொண்­டார் தந்தை திரு பிர­பா­க­ரன் நாயர். அவர்­கள் அடிக்­கடி தாயா­ருக்குக் கடி­தம் எழு­த­வும் தொலை­பேசி மூலம் தொடர்பு­கொண்டு பேசவும் வகைசெய்­தார் வழக்­க­றி­ஞ­ரான திரு பிர­பா­க­ரன்.

குடும்பப் பொறுப்­பு­கள் என வரும்போது ஆண்­க­ளுக்­கும் முக்­கிய பங்­குண்டு என்­பதை திரு விக்­ரம் நாய­ருக்கு உணர்த்­தி­ய­வர் அவரின் தந்தையே.

"ஒவ்­வொரு வார­மும் வீட்­டிற்குத் தேவை­யான மளி­கைப் பொருட்­கள் வாங்­கு­வதைத் தம் பொறுப்­பாக எடுத்­துக்­கொண்­டார். என் சிறு வயதில் கண்­டிப்­பாக இருந்­தார், பின்னர் பெரியவனாகும்போது நண்­பர் போல் பழ­கி­னார், இன்று எந்­நே­ர­மும் வேலைக்கும் வாழ்க்­கைக்­கும் தேவையான ஆலோ­சனைகளை வழங்­கும் ஆசா­னாக உள்­ளார்," என்றார் திரு விக்­ரம் நாயர்.

திரு விக்­ரம் நாய­ருக்கு 2015ஆம் ஆண்­டில் மகள் இந்­திரா பிறந்­ததைத் தொடர்ந்து தந்தை என்ற புதிய பொறுப்பு அவ­ருக்கு வந்­தது.

மகளை ஒவ்­வொரு வார­மும் தவ­றா­மல் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அழைத்­துச் செல்­வ­தில் தொடங்கி படிப்­ப­டி­யாக மக­ளு­டன் அதிக நேரம் உற­வா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்கினார்.

இவ்­வாண்டு ஆறு வயதாகும் மக­ளுக்குக் கணி­தம், ஆங்­கி­லப் பாடங்­களைக் கற்­பித்து வரும் திரு விக்­ரம், அன்­றா­டம் மகள் பள்­ளிக்குச் செல்­லும் முன்­ன­ரும் இரவு நேரத்­தி­லும் முழு கவ­னம் செலுத்தி அவரை இதர நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி வருகிறார். வீட்­டி­ல் விளையாடுவது அல்­லது சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யம் போன்ற இடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­வது போன்ற நட­வ­டிக்­கை­கள், தந்தை மகள் பந்­தத்தை வலுப்­ப­டுத்­து­கின்றன.

"எனக்குச் சமைக்க பிடிக்­கும். அதனால் சமைக்கும்போது மக­ளை­யும் அதில் ஈடு­ப­டுத்துவேன். குடும்பப் பொறுப்­பு­களில் யார் எதைச் செய்­கி­றார் என்ற பாகு­பாடு கூடாது, அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்­ப­து­தான் முக்­கி­யம். ஆணும் பெண்­ணும் எல்லா வீட்­டுப் பொறுப்­பு­களையும் ஈடு­கொ­டுத்து செய்ய முடி­யும் என சொல்­லிக்­கொ­டுத்து என் பெற்­றோர்­ என்னை வளர்த்­தார்­கள்," என்றார் திரு விக்­ரம்.

வழக்­க­றி­ஞர் பணி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னருக்கான கட­மை­கள் மத்­தி­யில் தந்தைக்கான பொறுப்­பு­க­ளுக்­கும் நேரம் வகுப்­பது சவா­லாகத் தோன்­றி­னா­லும் எல்லா பொறுப்­பு­க­ளுக்­கும் நேரத்தைத் திட்டமிட்டால் சமாளித்துவிடலாம் என்றார்.

பிள்­ளை­க­ளின் உல­கிற்குச் சென்று அவர்­க­ளு­டன் இணைந்து விளை­யா­டும் தரு­ணம் பொன்­னா­னது என்று விளக்­கிய திரு விக்­ரம், தம் மக­ளின் பிள்ளைப் பரு­வம் மகிழ்ச்­சி­யா­னதாக அமைய வேண்­டும் என்­ப­தில் குறி­யாக உள்­ளார்.

தந்தை என்ற நிலையில் தமது பயணம் புதிது என்­றா­லும் அதற்­கான நல்ல அடித்­த­ளத்தை அமைத்துத் தந்­துள்ள அவரின் தந்தைக்கு என்­றென்­றும் கட­மைப்­பட்­டுள்­ள­தாக திரு விக்­ரம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!