‘மீண்டு எழுவோம்’

கடந்த 1981ஆம் ஆண்­டில் சாங்கி விமான நிலை­யம் அதி­கா­ர­பூர்வ துவக்­கம் கண்­ட­தி­லி­ருந்து அங்கு பாது­கா­வல் வேலை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார் 60 வயது திரு ஆறு­ மு­கம் கருப்­பையா.

'செர்ட்­டிஸ்' நிறு­வ­னத்­தின் விமா­னப் பாது­காப்­புப் பரி­சோ­தனை பிரி­வின் மூத்த நிர்­வா­கி­யின் வாழ்­வா­தா­ரம் தொடங்­கி­யது இங்­கு­தான்.

தம் வாழ்க்­கைத் துணை­யான முன்­னாள் பாது­கா­வல் அதி­கா­ரி­யான கோ. இந்­தி­ரா­ணியைக் காத­லித்து 1987ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்த நினை­வு­க­ளின் பிறப்­பி­ட­மும் இதுவே.

சுமார் 400 பாது­கா­வல் அதி­காரி­களுக்குப் பொறுப்பு வகிக்­கும் இவர், சாங்கி விமா­னத்­தி­லி­ருந்து வெளிநாடு­க­ளுக்கு செல்­லும் பய­ணி­க­ளின் பாது­காப்புப் பரி­சோ­தனை சுமுக­மாக நடை­பெ­று­வதை உறுதி செய்­கி­றார்.

"2003ஆம் ஆண்­டில் சார்ஸ் சிங்­கப்­பூரை தாக்­கி­ய­போது விமான நிலை­யப் பாது­காப்பு அதற்­குத் தயா­ரா­க­வில்லை. ஏனெ­னில் அக்­கி­ருமி பற்­றிய போதிய விவ­ர­மில்லை. அதற்­குப் பிறகு வந்த ஹெச்1என்1 போன்ற கிரு­மி­க­ளின் பர­வலை நன்கு சமா­ளித்­தோம். 'சார்ஸ்' அனு­ப­வம் அதற்கு கைகொ­டுத்­தது.

"கொவிட்-19 நில­வ­ரத்தை நாம் நன்கு சமா­ளித்­த­போ­தும் பாதிப்­பில் இது­தான் ஆகக் கொடி­யது. நாற்­பது ஆண்டு அனு­ப­வத்­தில், சாங்கி விமான நிலை­யத்­தில் ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யில் விமா­னங்­களும் பய­ணி­களும் சென்­று­வந்­துள்­ள­னர்," என்று கூறி­னார் திரு ஆறு­மு­கம்.

கடந்­தாண்­டி­லி­ருந்து விமான நிலை­யத்­தில் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­தால், அங்கு பணி­யாற்­றிய செர்ட்­டிஸ் பாது­கா­வல் அதி­கா­ரி­கள், சமூக இடை­வெ­ளித் தூதர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு பணி­களில் அமர்த்­தப்­பட்­ட­னர். இத­னால் நிறு­வன ஆட்­குறைப்பைத் தவிர்க்க முடிந்­தது.

டெல்டா வகை கிரு­மிப்­ ப­ர­வலை தடுக்க, தற்­போது சாங்கி விமான நிலை­யத்­தில் பாது­காப்பு நிலை உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

விமான நிலை­யத்­தில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் 14,000 பேர் மூன்று தனிப்­பி­ரி­வு­க­ளாக வெவ்­வேறு முனை­யங்­களில் பிரிக்­கப்­பட்­ட­னர்.

அதிக அபா­ய­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு தனிப்­பாதை ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அங்­குள்ள பாது­கா­வல் அதி­கா­ரி­கள் எல்லா நேரங்­க­ளி­லும் தனிநபர் பாது­காப்­பு உடைகள் அணிந்­தி­ருப்­பர். ஊழி­யர்­கள் தங்­க­ளது பிரி­வை­விட்டு மற்­றொரு பிரி­வுக்கு செல்­வது இய­லாது.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போது மற்­ற­வர்­கள் சற்றுத் தள்­ளியே இருப்­பது திரு ஆறு­மு­கத்­துக்­குப் பழ­கி­விட்­டது.

அவர் பணி­யாற்­றும் இடத்­தில்­தொற்று அபா­யம் அதி­கம் என்ற அச்­சம் அதற்­குக் கார­ணம். இத­னால் பணி­நாட்­களில் அவர் பயணி இருக்­கை­யில் அமர்­வ­தில்லை.

தேவை­யி­ருந்­தால் மட்­டும் ஓய்வு­ நாட்­களில் வெளியே செல்­வ­தா­க­வும் முன்­னெச்­ச­ரிக்கை யாக சமூக நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வ­தில்லை என்றார் திரு ஆறு­மு­கம்.

இப்­படி சிறு­சிறு தியா­கங்­களைச் செய்­த­வாறு பணி­யில் தீவி­ர­மாக இறங்­கு­வ­தற்கு இவர் சொல்லும் கார­ணம் இது.

"வெளி­நாடு செல்­வது பாது­காப்­பா­னது என்ற செய்­தியை பய­ணி­கள் தங்­கள் நாட்­டி­ன­ரி­டம் பகிர்ந்­து­கொள்ள வேண்­டும். இது சாத்­தி­ய­மா­வ­தற்கு இங்கு விமானப் பாது­காப்பு உயர்­த­ர­த்துடன் விளங்க வேண்­டும், அதற்குத் தேவை­யான அனைத்­தை­யும் செய்ய நாங்­கள் தயார்," என்று தம் வேலை­யின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!